Condolence and relief message of the Honble Chief Minister on the demise of Subedar G.Annamalai.
செ. கு. எண்: 074
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 20.8.2015
18.8.2015 அன்று அருணாச்சலப் பிரதேச மாநிலம், டாம்டெங் என்ற இடத்திலிருந்து யங்ட்சே என்ற இடம் வரை ராணுவப்படை “Operation Falcon”-ஐ சேர்ந்த “201 - பொறியாளர்கள் படைக்குழு” வான் வழியே கம்பிவடம் அமைக்கும் பணியினை மேற்கொண்டிருந்த போது அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில், அக்குழுவினை தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த வேலூர் மாவட்டம், பெரியபாளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் படைக்குழு சுபேதார் திரு. G.அண்ணாமலை என்பவர் தனது குழுவினர்கள் அனைவரையும் பத்திரமாக காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிய பிறகு, எதிர்பாராமல் வழுக்கி பாறை மீது விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை
அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
பணியின் போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுபேதார் திரு. அண்ணாமலை அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணியின் போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுபேதார் திரு. அண்ணாமலை அவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

No comments :
Post a Comment