சுருக்கம்
பொது விநியோகத் திட்டம் - கொரோனா வைரஸ் நோய் தொற்று - நிவாரண உதவிகள் - மே 2021 மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகை வழங்குதல் -ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் ( எப்) துறை
அரசாணை (நிலை) எண்.37
நாள் : 07.05.2021
பிலவ வருடம், சித்திரை-24
திருவள்ளுவர் ஆண்டு 2052
படிக்க:
அரசாணை (நிலை எண்.364, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
துறை, நாள் 03.05.2021.
ஆணை:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தல்-2021 தொடர்பாக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் திரும்பி உள்ள நிலையில், கட்டுப்பாடுகளும் மக்களின் துயரங்களும் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த திருநாள் முதல் ரூ.4000/- வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் 06.05.2021 காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4.00 மணி வரையிலான காலத்திற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மேலே படிக்கப்பட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
No comments :
Post a Comment