பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழு விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை நான்காம் மண்டலப் பாசனப் பகுதிகளில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 03.08.2021 முதல் 135 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு ஐந்து சுற்றுகளாக மொத்தம் 9500 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம் மற்றும் தாராபுரம் வட்டங்களில் உள்ள 94068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
No comments :
Post a Comment