தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் பெருமளவில் இந்திய பணியாளர்களைக் குறிப்பாகத் தமிழகப் பணியாளர்களை 1978-ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு வேலைகளில் பணியமர்த்தி வருகிறது. இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் விரிவாக்கும் பொருட்டு, வெளிநாட்டு நிறுவனர் க்குத் 6 ப்படும் மனித வளத்தினை இந்நிறுவனத்திற்குப் பெற்றுத் தருவதற்கு வெளிநாட்டில் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான நடைமுறைகள் அறிந்த ஆலோசகர்கள்/ ஆலோசனை முகவர்கள (Consultant/Consultant Agencies) ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திப் பெருமளவில் வெளிநாட்டு வாய்ப்ட ஏற்படுத்த உள்ளது.
ஆலோசகர்கள்/ஆலோசனை முகவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான விரிவான விதிமுறைகள் அடங்கிய விவரங்கள் www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள ஆலோசகர்கள் / ஆலோசனை முகவர்கள் (Consultant/Consultant Agencies) இந்நிறுவன வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள படிவங்களைப் பூர்த்திசெய்து 31.08.2021-க்குள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) எண்.42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படு கிறது.
நிர்வாக இயக்குநர்
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
No comments :
Post a Comment