Showing posts with label Statement from Overseas Manpower Corporation Ltd.. Show all posts
Showing posts with label Statement from Overseas Manpower Corporation Ltd.. Show all posts

Thursday, August 19, 2021

Statement from Overseas Manpower Corporation Ltd.

     தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்‌  பெருமளவில்‌ இந்திய பணியாளர்களைக்‌ குறிப்பாகத்‌ தமிழகப்‌ பணியாளர்களை 1978-ஆம்‌ ஆண்டு முதல்‌ பல்வேறு நாடுகளில்‌ வெளிநாட்டு வேலைகளில்‌ பணியமர்த்தி வருகிறது. இந்நிறுவனத்தின்‌ செயல்பாடுகளை மேலும்‌ விரிவாக்கும்‌ பொருட்டு, வெளிநாட்டு நிறுவனர்‌ க்குத்‌ 6 ப்படும்‌ மனித வளத்தினை இந்நிறுவனத்திற்குப்‌ பெற்றுத்‌ தருவதற்கு வெளிநாட்டில்‌ பணியாளர்களைப்‌ பணியமர்த்துவதற்கான நடைமுறைகள்‌ அறிந்த ஆலோசகர்கள்‌/ ஆலோசனை முகவர்கள (Consultant/Consultant Agencies) ஒப்பந்த அடிப்படையில்‌ பணியமர்த்திப்‌ பெருமளவில்‌ வெளிநாட்டு வாய்ப்ட ஏற்படுத்த உள்ளது.


    ஆலோசகர்கள்‌/ஆலோசனை முகவர்களை ஒப்பந்த அடிப்படையில்‌ பணியமர்த்துவதற்கான விரிவான விதிமுறைகள்‌ அடங்கிய விவரங்கள்‌ www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.

      எனவே, உரிய தகுதி மற்றும்‌ அனுபவம்‌ உள்ள ஆலோசகர்கள்‌ / ஆலோசனை முகவர்கள்‌  (Consultant/Consultant Agencies) இந்நிறுவன வலைதளத்தில்‌ குறிப்பிட்டுள்ள படிவங்களைப்‌ பூர்த்திசெய்து 31.08.2021-க்குள்‌ அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்‌ (தமிழ்நாடு அரசு நிறுவனம்‌) எண்‌.42, ஆலந்தூர்‌ சாலை, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படு கிறது.


நிர்வாக இயக்குநர்‌

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்‌