Tuesday, October 15, 2013

Bakrid Greetings of the Honble Chief Minister.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “பக்ரீத்” திருநாள் வாழ்த்துச் செய்தி 

    இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள்அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      உருவங்களையோ, செல்வங்களையோ காணாமல் உள்ளங்களையும், செயல்களையும் மட்டுமே இறைவன் காண்கிறான்; எனவே உள்ளத் தூய்மையுடன் கூடிய நம்பிக்கையின் மூலமே இறை அருளைப் பெற முடியும் என்கிற நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு, சாதி, மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்த உயர்ந்த நாளில் உறுதியேற்போம்.



       தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்

Thursday, October 10, 2013

DA Announcement for Government Servants and Teachers.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை – 10.10.2013 

    “மக்களின் குரலே மகேசனின் குரல்” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்துக் கொடுத்த வழிமுறையும், எனது தலைமையிலான அரசு கடைபிடித்து வரும் “மக்களுக்குச் செய்யும் பணி, மகேசனுக்கு செய்கின்ற பணி” என்ற குறிக்கோளும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாக விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மக்கள் தொண்டினை செய்யும் வாய்ப்பையும், அதற்கான வழிமுறையையும் பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காப்பதிலும், அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.



    அந்த வகையில், மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை 1.7.2013 முதல் மத்திய அரசு 10 விழுக்காடு உயர்த்தி அறிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10 விழுக்காடு உயர்த்தி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும், இந்த அகவிலைப்படி உயர்வு 1.7.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த அகவிலைப் படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

    இந்த அகவிலைப் படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2,292 கோடியே 78 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளை மேலும் சிறப்புடன் பணியாற்ற வழிவகுக்கும்.


ஜெ ஜெயலலிதா 
தமிழ்நாடு முதலமைச்சர் 

Wednesday, October 9, 2013

Funds for Construction of Modern Facility Godowns for Agriculture Department.

     உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சேமித்து வைக்க அதிக அளவிலான நவீன கிடங்குகளை தமிழகம் முழுவதும் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பதப்படுத்துவதன் மூலமே, அவைகள் கெடாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். நகரமயமாதல், வாழ்க்கை முறை மாற்றம், வருமான உயர்வு ஆகியவற்றின் காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.

     எனவே உணவுப் பொருட்களை பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது. இதற்காக விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
 
      இதனைக் கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு, மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் உணவுப்பதப்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தொடங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த பயிற்சி நிறுவனத்திற்கென கட்டடம் கட்டுவதற்கும் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கும் 49 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

       இந்த பயிற்சி நிலையத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை தரம் பிரித்தல், பாதுகாப்பாக கையாளுதல், சிப்பமிடுதல் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், உணவுப் பதப்படுத்தலில் இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் வேலைப் பளுவை குறைத்தல், விவசாய கழிவுகளிலிருந்து மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களை தயாரித்தல், கால்நடை தீவனம், எரிபொருள் போன்றவைகளை உற்பத்தி செய்வது போன்ற நடைமுறைகளை பண்ணை அல்லது கிராம அளவில் செயல்படுத்த பயிற்சி அளித்தல், மருத்துவ குணமுள்ள உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குதல், மேம்படுத்தப்பட்ட சிப்பமிடுதல் முறைகளினால் பொருட்களின் சேமிப்புக் காலத்தை நீட்டித்தல், எதிர்கால பயன்பாட்டிற்கும் உலகச் சந்தைப்படுத்தலுக்கு பயன்படும் வகையிலும் உணவு பதனிடுதலையும், மதிப்பு கூட்டப்பட்ட உணவுகள் தயாரித்தல் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்துதல், விவசாயிகள், தொழில் முனைவோர், சிறு தொழில் முனைவோர், சுய உதவிக் குழுக்கள் மற்றும் பள்ளியிலிருந்து இடையில் நின்றவர்கள் ஆகியோருக்கு பயிற்சி மற்றும் தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் புதிய சுயதொழில் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக அமையும். 

Tuesday, October 8, 2013

Funds for Infrastructure Development of Schools in State.

    தமிழ்நாட்டில் உள்ள மாணவ செல்வங்கள் அனைவரும் அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அனைவருக்கும் கல்வியை அளித்து, தமிழகத்தில் கல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    மாணாக்கர்கள், இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையில் மாணாக்கர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை, மடிக்கணினி, மிதிவண்டி, நான்கு இணைச் சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், கிரேயான், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, வரைபடம், மதிய உணவு, காலணிகள் மற்றும் பேருந்து பயண அட்டைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.



     பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் தாங்கள் கற்கும் கல்வியுடன், பொது அறிவான தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த அறிவு அவர்களுக்கு உயர் கல்வி பயிலும் போதும், பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இதனை அறிந்துக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருப்பது வரைப்படங்களேயாகும். எனவே, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் 3,246 அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான 48,247 வகுப்பறைகள் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஒரு லட்சம் வகுப்பறைகள் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்பறைகளுக்கும் தேசிய வரைபடம், தமிழ்நாடு வரைபடம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வரைபடம் என மூன்று வரைபடங்கள் வாங்கி மாட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 11 கோடியே 56 லட்சத்து 32 ஆயிரத்து 660 ரூபாய் செலவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

    அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனக் குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி கல்வி கற்று, சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், அவர்களுக்கு கட்டணமில்லா கல்வி, மதிய உணவு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடை, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிப்பு கட்டணம் செலுத்துதல், ஊக்கத் தொகை வழங்குதல், தங்கிப் பயிலும் விடுதிகள் கட்டுதல் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. கணினியின் இன்றியமையாத் தன்மையையும், தற்பொழுது பெரும்பான்மையான பணிகள் கணினியைச் சார்ந்தே அமைந்துள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வழியில் கல்வி வழங்கி, தமிழகத்தில் கணினிப் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் எடுத்து வருகின்றார்கள்.

    அந்த வகையில், மாணாக்கர்களுக்கு கணினி வழியாக கல்வி கற்பித்து அவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘SMART CLASS ROOM’ என்ற புதிய தொழில்நுட்பத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏற்கெனவே இருக்கும் வகுப்பறைகளில் ஏதேனும் ஒரு வகுப்பறை (20' X 20') SMART CLASS ROOM ஆக மாற்றியமைக்கப்படும். இத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க ஆர்வமுள்ள, இத்துறைப் பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியர்களில், ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும்.

    ஒவ்வொரு பள்ளியிலும் SMART CLASS ROOM அமைப்பதற்கு தேவையான கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்கிட ஒரு பள்ளிக்கு 5,05,000 ரூபாய் வீதம் 100 பள்ளிகளுக்கு 5 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

Tuesday, October 1, 2013

Gandhi Adigal Police Medal 2014.

AWARD OF GANDHI ADIGAL POLICE MEDAL TO FOUR POLICE OFFICIALS

          The Hon’ble Chief Minister has ordered the award of Gandhi Adigal Police Medal to

(1) Thiru. T.P. Sureshkumar, Additional Superintendent of Police, Crime (i/c), Prohibition Enforcement Wing, Erode District.

(2) Thiru. A.V. Mathi, Deputy Superintendent of Police, Central Investigation Unit (South), Chennai.

(3) Thiru. S. Periyasamy, Inspector of Police, Central Investigation Unit, Salem Zone, Salem.

(4) Thiru. R. Devaraj, Head Constable, Appakoodal Police Station, Erode District for their outstanding work in curbing illicit liquor.



The Medals will be given by the Hon’ble Chief Minister on the occasion of Republic Day, 2014. A cash award of Rs.20,000/- to each of the awardees will also be presented along with the Medal.

 (NIRANJAN MARDI)
 PRINCIPAL SECRETARY TO GOVERNMENT