Tuesday, October 13, 2015

All India Civil Services Coaching Centre, Chennai - Admission for IAS Mains 2015

முதன்மைத் தேர்வுக்கு – (Main Examination 2015) மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு

மத்திய தேர்வாணைக்குழுவின் 2015 ஆம் ஆண்டிற்கான முதன்மைத்தேர்வு பயிற்சிக்காக மாணவ/மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவங்கள் 13.10.2015 முதல் 15.10.2015 வரை சென்னை –28, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, காஞ்சி வளாகம், எண்: 163/1–ல் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப்பணித்தேர்வு பயிற்சி மையத்தில் வழங்கப்படும்.

மாணவ/மாணவியர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பெற்று அதன் அடிப்படையில் 16.10.2015 முதல் 17.10.2015 வரை சேர்க்கை நடைபெறும். முதன்மை தேர்வுக்கான பயிற்சிக்கு SC-92, SCA-18, ST-03, MBC-40, BC-54, BCM-07, DA-07, OC-04 என மொத்தம் 225 மாணவ/மாணவியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர தமிழ் நாட்டைச் சேர்ந்த இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ/மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் வரை பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் கட்டணமில்லா விடுதி மற்றும் உணவு வழங்கப்படும் மேலும் இப்பயிற்சிக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 3000/- உதவித் தொகை தமிழக அரசால் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி முதல்வர், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், சென்னை – 28. தொலைபேசி எண் 044- 24621475 இணையதள முகவரி www.civilservicecoaching.com


 முதல்வர்
 அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம்,
 சென்னை – 600 028


Sunday, October 11, 2015

Job Mela at R.K.Nagar



மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. 17.10.2015 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னை ஆர்.கே.நகர் சென்னை துறைமுக மைதானம்(ஆஞகூ), தண்டையார்பேட்டை, சென்னை-81-ல் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தமிழகத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கு கொண்டு 20,000 பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலையளிப்போர் கோரும் சிறப்புத் திறன்களை அறிந்து அதற்கு பயிற்சி அளிக்க ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், தொழிற்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் இம்முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு சென்று வேலைபார்க்க விரும்புபவர்கள் பயனுறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சேவையும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சுயவேலைவாய்ப்பு குறித்து ஆலோசனையும் பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற விரும்புவோர் தங்களது பெயர்களை www.tnvelaivaaippu.gov.in/jobMela.html என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்