Friday, November 6, 2015

Art and Culture Department on financial Assistance to the best Artist

கலை பண்பாட்டுத்துறை
தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு

தமிழக அரசின் சார்பில், கலை பண்பாட்டுத் துறையின் அங்கமான, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழுவின் மூலம், தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப்படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனியாக தனிநபர் கண்காட்சியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக்கண்காட்சியாகவோ நடத்த அரசின் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகுதிவாய்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். கலை பண்பாட்டுத் துறை – ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச்செம்மல் விருது பெற்றவர்கள், கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் மற்றும் இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு (BIO- DATA), சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் ( 5 எண்ணிக்கைகள் ), அவரவர்கள் படைப்புத்திறன் பற்றிய செய்திக் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 30.11.2015-க்குள் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. (இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்)

ஆணையர்(பொ),கலை பண்பாட்டுத்துறை,
தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம்,
 தமிழ்ச்சாலை, எழும்பூர்,சென்னை-600 008.
தொலைபேசி : 044-28193195, 28192152



Job opportunity in Sharjah, United Arab Emirates for Clerks and Drivers

The Overseas Manpower Corporation Ltd., Chennai - Job opportunity in Sharjah, United Arab Emirates for Clerks and Drivers

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான சார்ஜாவிற்கு 30 முதல் 35 வயதிற்குட்பட்டு செல்லத்தக்க ஐக்கிய அரபு குடியரசு ஓட்டுநர் உரிமம் எண்.3 வைத்துள்ள இரண்டு இலகுரக வாகன ஓட்டுநர்கள், உரிமம் எண்.3 & 6 வைத்துள்ள ஒரு பஸ் ஓட்டுநர் மற்றும் உரிமம் எண் 7 & 8 வைத்துள்ள இரண்டு போர்க்லிப்ட் (Forklift) & ஜேவிசி ஓட்டுநர்கள் மற்றும் எட்டு வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்துடன் 21 வயது முதல் 35 வயதிற்குட்பட்டு பி.காம் தேர்ச்சி பெற்று கணக்குப் பிரிவில் அனுபவமுள்ள 2 கிளார்க் (Clerk)மற்றும் தட்டச்சர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கான பணி விவரங்கள், அனுபவம், வயது வரம்பு, ஊதியம், மற்றும் இதர சலுகைகளை  www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் இருப்பின் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், எண்.42, ஆலந்தூர் சாலை, கிண்டி தொழிற்பேட்டை, சென்னை 600 032 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு  www.omcmanpower.com என்ற ஈமெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.


Thursday, November 5, 2015

State Level Workshop on Sanitation jointly organised by Government of TN, Government of India and UNICEF

Honble Minister for Municipal Administration, Rural Development, Law, Courts and Prisons inaugurated the State Level Workshop on Sanitation jointly organised by Government of Tamil Nadu, Government of India and UNICEF


Admission Notification to ITI Courses - Fitter, Electrician and MMV

Adi Dravidar and Tribal Welfare Department on the admission notification to ITI Courses - Fitter, Electrician and MMV

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் நலனுக்காகவும், தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதிக அளவில் தொழில் திறன் மிகுந்த தொழிலாளர்களின் தேவையினை ஈடு செய்யவும், தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விழையும் மாணாக்கர்களின் ஆர்வத்தை ஈடு செய்யும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் வெளியிடப்பட்ட 2014-2015ஆம் ஆண்டிற்கான அறிவிப்பின் படி திருவள்ளூர் மாவட்டம் வடகரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் புதிதாக தொடங்கப்படும் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் நல மாணவ/மாணவிகளுக்கு சேர்க்கை நடைபெறுகின்றது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு வெல்டர் மற்றும் வயர்மேன் பயிற்சி வகுப்புகளும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பிட்டர், எலக்டீரிசியன் மற்றும் மோட்டார் வாகனம் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் சேரும் மாணவ/மாணவியர்களுக்கு மடிக்கணிணி, மிதிவண்டி, சீருடைகள், வரைபடக்கருவி மற்றும் பேருந்து கட்டணங்கள் இலவசமாக வழங்குவதுடன் பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.500/- வழங்கப்படும். மாணவர்களுக்கு வயது வரம்பு 14வயது முதல் 40 வயதிற்குள்ளாகவும், மாணவியர்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. இப்பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் படிவங்கள் பெற்று அனுப்புவதற்கு கடைசி நாள்16.11.2015 என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விண்ணப்பப் படிவம் பெறும் முகவரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகம், திருவள்ளூர் மாவட்டம்.

 இயக்குநர்
 ஆதிதிராவிடர் நலத்துறை


Results of Army Recruitment CEE 18th October 2015 - Chennai Zone