Monday, May 17, 2021

Government on Release of Water from Aliyar Dam for Irrigation

Statement of the Principal Secretary to Government on release of water from Aliyar Dam for irrigation.

செய்தி வெளியீடு எண்‌: 87 

நாள்‌:17.05.2021

செய்தி வெளியீடு

            கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, ஆனைமலை வட்டம்‌, எலவக்கரை குளத்து பாசன விவசாயிகளின்‌ கோரிக்கையினை ஏற்று ஆழியார்‌ அணையிலிருந்து எலவக்கரை குளத்தின்‌ கீழ்‌ பாசனம்‌ பெறும்‌ ஆயக்கட்டு நிலங்களுக்கு 18.05.2021 முதல்‌ 11 நாட்களுக்கு நாள்‌ ஒன்றுக்கு 61 கன அடி வீதம்‌ மொத்தம்‌ 57.00 மில்லியன்‌ கன அடி தண்ணீர்‌ திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.



அரசு முதன்மைச்‌ செயலாளர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Goondas Act Against Those Selling Remdesivir and Oxygen Cylinders at Higher Prices

செய்தி வெளியீடு எண்‌: 72 

நாள்‌:15.05.2021

செய்தி வெளியீடு

மக்களின்‌ உயிர்‌ காக்கும்‌ ரெம்டெசிவர்‌ மருந்துகள்‌ மற்றும்‌ ஆக்சிஜன்‌ சிலிண்டர்களைப்‌ பதுக்கியும்‌. மீதும்‌ குண்டர்‌ சட்டத்தின்கீழ்‌ கடும்‌ நடவடிக்கை!

காவல்‌ துறையினருக்கு மாண்புமிகு முதலமைச்சர்‌ உத்தரவு 

       மக்களின்‌ உயிர்‌ காக்கும்‌ பெரும்‌ பொறுப்பை முதன்மை கடமையாகக்‌ கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர்‌ எதிராகச்‌ செயல்படுபவர்களின்‌ போக்கை கடுமையான நடவடிக்கைகளால்‌ கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

        உலகளாவிய அளவிலும்‌, குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும்‌ கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும்‌ நெருக்கடி வளையத்தில்‌ இருந்து தமிழகமும்‌ தப்பிக்கவில்லை. நாள்தோறும்‌ அதிகரித்து வரும்‌ நோய்த்‌ தொற்று எண்ணிக்கையையும்‌, இறப்புகளையும்‌ முழுமையாகக்‌ கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்‌ முழு வீச்சில்‌ முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களுக்கான இந்த அரசு இரவு பகல்‌ பாராது செயல்பட்டு வருகிறது. மேலும்‌ இப்பணியில்‌ அனைவரும்‌ அவரவர்‌ ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்‌ எனக்‌ கேட்டுக்‌ கொண்டதற்கேற்ப, நல்லோர்‌ அனைவரும்‌ தங்கள்‌ ஒத்துழைப்பையும்‌ பங்களிப்பையும்‌ வழங்கி வருகிறார்கள்‌. எளிய மக்கள்கூட தங்கள்‌ அன்றாட வாழ்வாதாரத்தில்‌ ஏற்படும்‌ பாதிப்பைத்‌ தாண்டி, அரசின்‌ உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும்‌ கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின்‌ உயிரைக்‌ காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்‌. அதேநேரத்தில்‌, சில சமூக விரோதிகள்‌ ரெம்டெசிவர்‌ மருந்துகளைப்‌ பதுக்கி, கள்ளச்சந்தையில்‌ மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்‌.


          அதுபோலவே, ஆக்சிஜன்‌ சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர்‌ விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும்‌ வருகின்றன. பேரிடர்‌ காலத்தில்‌ இத்தகைய செயல்களில்‌ ஈடுபடுவது மிகக்‌ கடுமையான குற்றமாகும்‌.

       தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவர்‌ மருந்து விநியோகம்‌, ஆக்சிஜன்‌ உற்பத்தி, படுக்கைகள்‌ எண்ணிக்கை அதிகரித்தல்‌, கட்டுப்பாட்டு மையங்கள்‌ வாயிலாக உடனுக்குடன்‌ சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

         தமிழ்நாட்டில்‌ வாழும்‌ ஒவ்வொருவரின்‌ உயிரின்‌ மீதும்‌ அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும்‌ நிலையில்‌, அதற்கு மாறாக, ரெம்டெசிவர்‌ மருந்துகளை பதுக்குவோர்மீதும்‌, ஆக்சிஜன்‌ சிலிண்டர்களின்‌ விலையை உயர்த்தி விற்பனை செய்வோர்மீதும்‌ குண்டர்‌ சட்டத்தின்கீழ்‌ கடும்‌ நடவடிக்கை எடுக்க காவல்‌ துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9

COVID-19 - Deputation of IFS and IAS Officers Coordinating for Liquid Oxygen

COVID-19 - Deputation of IFS and IAS Officers to coordinate the logistics arrangements of the transportation of liquid Oxygen through Containers and Tankers from Kalinga Nagar and Rourkela.

 பத்திரிக்கைச்‌ செய்தி

16.05.2021

      மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்கள்‌ தமிழ்நாட்டில்‌ நிலவிவரும்‌ ஆக்ஸிஜன்‌ பற்றாக்குறையை தீர்க்க மத்திய அரசிடம்‌ தெரிவித்ததன்‌ அடிப்படையில்‌ ஒடிசா மாநிலத்திலுள்ள கலிங்கா நகர்‌, ரூர்கேலா ஆகிய இடங்களில்‌ நாள்‌ ஒன்றுக்கு 100 MT வீதம்‌ ஆக்ஸிஜன்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்‌ தற்பொழுது 110 MT தமிழ்நாட்டில்‌ பெறப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸிஜனை தமிழ்நாட்டில்‌ இரயில்கள்‌ மூலம்‌ தொடர்ந்து பெறுவதற்கு விமானங்கள்‌ மூலம்‌ டேங்கர்களை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி அங்கு அவற்றில்‌ ஆக்ஸிஜனை நிரப்பி பின்னர்‌ இரயில்கள்‌ மூலம்‌ தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.


      இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த கீழ்க்காணும்‌ இரண்டு அதிகாரிகள்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

1. திரு. நிஷாந்த்‌ கிருஷ்ணா, இந்திய ஆட்சிப்பணி ரூர்கேலா நகரின்‌ ஒருங்கிணைப்பு பணிகளை கவனிப்பார்‌.

2. திரு .A. பெரியசாமி, இந்திய வனப்பணி, (வன பாதுகாவலர்‌) புவனேஸ்வர்‌ மற்றும்‌ கலிங்கா நகர்‌ ஆகிய இடங்களில்‌ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை கவனிப்பார்‌.

இந்த அதிகாரிகள்‌ உடனடியாக ஒருங்கிணைப்புப்‌ பணிகளை மேற்கொள்ள ஒடிசா மாநிலத்திற்கு விரைந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9


Special Arrangements for Vaccination of Differently Abled Persons

செய்தி வெளியீடு எண்‌: 79 

நாள்‌:16.05.2021

செய்தி வெளியீடு

தமிழக அரசு, மாற்றுத்‌ திறனாளிகள்‌ எந்தவித சிரமுமில்லாமல்‌ தடுப்பூசி பெறுவதற்கான பின்வரும்‌ சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

1. அனைத்து தடுப்பூசி மையங்களிலும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்‌.

2.  அனைத்து தடுப்பூசி மையங்களிலும்‌ பொது வரிசை அல்லாது மாற்றுத்‌ திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்‌.


3.  அனைத்து தடுப்பூசி மையங்களிலும்‌ மாற்றுத்‌ திறனாளிகளுக்கான சாய்வுத்‌ தளம்‌ அமைக்கப்பட வேண்டும்‌.

4.  தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையுடன்‌ இணைந்து மாற்றுத்‌ திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள்‌ அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

All Political Parties Members Advisory Committee

 An Advisory committee consisting of Members from all political parties formed under the Chairmanship of the Honble Chief Minister.

செய்தி வெளியீடு எண்‌: 81 

நாள்‌:16.05.2021

செய்தி வெளியீடு

      தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ அனைத்து சட்டமன்ற கட்சித்தலைவர்கள்‌ கூட்டம்‌ 13.05.2021 அன்று தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்றது. அக்கூட்டத்தில்‌ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்‌ ஒன்றாக பின்வரும்‌ தீர்மானம்‌ (தீர்மானம்‌ எண்‌.4) நிறைவேற்றப்பட்டது.

“நோய்த்தொற்றுப்‌ பரவலை கட்டுப்படுத்தும்‌ வழிமுறைகள்‌ குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச்‌ சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம்‌ என தீர்மானிக்கப்பட்டது.”

2. மேலே தெரிவிக்கப்பட்ட தீர்மானத்தின்‌ அடிப்படையில்‌, அனைத்து சட்டமன்ற கட்சிகளின்‌ தலைவர்களுடன்‌ ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின்‌ அடிப்படையில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ பின்வரும்‌ சட்டமன்ற உறுப்பினர்களைக்‌ கொண்ட ஆலோசனைக்‌ குழு அமைக்கப்படுகிறது.

ஆலோசனைக்‌ குழு உறுப்பினர்கள்‌

3. மேற்படி ஆலோசனை குழுவானது அவசர அவசியம்‌ கருதி நோய்த்‌ தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்தும்‌ வழிமுறைகள்‌ குறித்து ஆலோசனைகள்‌ பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும்‌. இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர்‌ உறுப்பினர்‌ செயலராக செயல்படுவார்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறை, 

சென்னை - 9.