Monday, June 21, 2021

CM Inaugurated Educational Programmes for Students

 Honble Chief Minister inaugurated the educational programmes for the students studying in I to XII classes though Kalvi TV Channel in the function held at Anna Centenary Library.

செய்தி வெளியீடு எண்‌:298

 நாள்‌: 19.06.2021

செய்தி வெளியீடு

அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கி, கல்வித்‌ தொலைக்காட்சியில்‌ 1 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்கள்‌. அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வியை ஊக்குவிக்கும்‌ வண்ணமாக, அம்மாணவர்களுக்கு அரசு, பாடநூல்களை வழங்கி வருகிறது.

2021- 2022ஆம்‌ கல்வியாண்டிற்கான மாணவர்‌ சேர்க்கை தமிழ்நாடு முழுவதும்‌ சிறப்பாக நடைபெற்று வரும்‌ நிலையில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (19.6.2021) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாட நூல்களை வழங்கியும்‌, கொரோனா பெருந்தொற்று பரவல்‌ காரணமாக பள்ளி செல்ல இயலாமல்‌ இருக்கும்‌ மாணவர்கள்‌, வீட்டில்‌ இருந்தபடியே கல்வி பயில ஏதுவாக 1 முதல்‌ 12 வரை அனைத்து வகுப்புகளுக்கும்‌ உரிய அனைத்து பாடங்களுக்குமான கல்வித்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்கள்‌. இத்திட்டம்‌ சுமார்‌ 292 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்படுகிறது. இதனால்‌, அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 69 இலட்சம்‌ மாணவர்கள்‌ பயன்‌ பெறுவர்‌.



அதனைத்‌ தொடர்ந்து, அம்மாணவ, மாணவியர்களுடன்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ நலம்‌ விசாரித்து, அவர்களுக்கு பேனா மற்றும்‌ சாக்லேட்டுகளை வழங்கி கலந்துரையாடினார்கள்‌.

இந்நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ திரு.எ.வ. வேலு, மாண்புமிகு மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ திரு. மா. சுப்பிரமணியன்‌, மாண்புமிகு பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ திரு.அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, பள்ளிக்‌ கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை- 9

Friday, June 18, 2021

Applications Invited for State Awards on Independence Day, 2021

செய்தி வெளியீடு எண்‌:287

 நாள்‌:17.06.2021

செய்தி வெளியீடு

மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக மாநில அளவில்‌ சிறப்பாக பணிபுரிபவர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்‌.30.06.2021.

 Commissionerate for Welfare of the Differently Abled - Applications invited for State Awards under various categories to be presented on Independence Day, 2021 - Last date 30th June 2021


மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக மாநில அளவில்‌ சிறப்பாக பணிபுரிபவர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களை தேர்வுக்‌ குழு மூலம்‌ தேர்வு செய்து, அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ ஊக்குவித்து  கெளரவிக்க ப்படுவதால்‌. அதனை கண்டு தமிழகத்தில்‌ உள்ள  மாற்றுத்‌ திறனாளிகளுக்கான மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக பணிபுரிபவர்கள்‌ மேலும்‌ சிறப்பாக பணிபுரிய வேண்டும்‌, என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்‌ பொருட்டு, கீழ்காணும்‌ விருதுகள்‌ சுதந்திர தின விழா 15 ஆகஸ்டு 2021 அன்று வழங்கப்படவுள்ளது.

  • மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலனுக்காக அரும்பபணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம்.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு மிக அதிக அளவில்‌ வேலைவாய்ப்பு அளித்த தனியார்‌ நிறுவனம்.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்.
  • சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆணையர்.

மேற்காணும்‌ விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, 

மாற்றுத் திறனாளிகள் னால ஆணையர், 

மாற்றுத்திறனாளிகள் னால ஆணையரகம் , 

எண்‌.5, லேடி வெலிங்டன்‌ கல்லூரி வளாகம்‌, 

காமராஜர்‌ சாலை, 

சென்னை - 5 

அல்லது 

சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலர்‌ அவர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன்‌ 30.06.2021 அன்று பிற்பகல்‌ 5.45 மணிக்குள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலர்‌ அவர்களிடம்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமோ சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டு கொள்ளப்படுகிறது. 

மேலும்‌, விண்ணப்பப்‌ படிவங்களை https://awards.tn.gov.in/  https://awards.tn.gov.in/register.php என்ற வலைத்தளத்திலும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌, மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள்‌ தேர்வுக்‌ குழுவினரால்‌ தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும்‌ விருதாளர்களுக்கு விருதுகள்‌ சுதந்திர தின விழா நிகழ்வில்‌ மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ வழங்கப்படும்‌ என தெரிவிக்கப்படுகிறது.

DR. A.P.J. அப்துல் கலாம் விருது 2021 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதிவு செய்வதற்கான கடைசி நாள் 15.07.2021.

கல்பனா சாவ்லா விருது 2021 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதிவு செய்வதற்கான கடைசி நாள் 30.06.2021. 

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

TN IT Minister's Statement on Arasu Cable TV

செய்தி வெளியீடு எண்‌: 288 நாள்‌:17.06.2021

செய்தி வெளியீடு 

     தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனம்‌ கட்டணமின்றி, இலவசமாக செட்டாப்‌ பாக்ஸ்களை வழங்கி 200க்கும்‌ மேற்பட்ட சேனல்களை பொதுமக்களுக்கு ரூ.140+GST என்ற குறைந்த மாத சந்தா தொகையில்‌ வழங்கி வருகிறது. இது மற்ற நிறுவனங்களை விட மிக குறைந்த கட்டணம்‌ ஆகும்‌.

      குறைந்த கட்டணத்தில்‌ அதிகமான சேனல்‌ வழங்கி வருகின்றது. தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்தின்‌ சேவையை விரும்பும்‌ பொதுமக்கள்‌ அந்த பகுதியில்‌ உள்ள அரசு கேபிள்டிவி சேவையை வழங்கும்‌ ஆபரேட்டரிடம்‌ கேட்டு பெறலாம்‌. அவ்வாறு பொது மக்களுக்கு அரசின் சேவையை கேபிள் ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண்‌ 18004252911 மூலம்‌ பொதுமக்கள்‌ புகார்‌ செய்யலாம்‌.

        தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்தின்‌ செட்டாப்‌ பாக்ஸ்கள்‌ பழுது அடைந்தாலோ, ( ந்திர கட்டணம்‌ செலுத்தாமல்‌ துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, அல்லது சந்தாதாரர்‌ குடிபெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றாலோ, அல்லது தனியார்‌ செட்டாப்‌ பாக்ள்‌ பயன்படுத்‌ லோ, இந்நிறுவனத்தின்‌ செட்டாப்‌ பாக்ஸ்‌ மற்றும்‌ ரிமோட்‌ அடாப்டர்‌ ஆகியவற்றை அந்த பகுதியில்‌ உள்ள அரசு செட்டாப்‌ பாக்ஸை வழங்கிய அரசு கேபிள்‌ டிவி ஆபரேட்டர்களிடம்‌ திரும்ப ஒப்படைக்க வேண்டும்‌. உள்ளூர்‌ கேபிள்‌ ஆபரேட்டர்களுக்கு ஒப்பந்தத்தின்‌ அடிப்படையிலேயே செட்டாப்‌ பாக்ஸ்கள்‌ வழங்கப்பட்டுள்ளதால்‌ அதனை அவர்கள்‌ அரசு கேபிள்‌ டிவி அலுவலகத்தில்‌ திரும்ப ஒப்படைக்க வேண்டும்‌.



       ஒரு சில கேபிள்‌ டிவி ஆபரேட்டர்கள்‌, தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி சேவையை வழங்குவதற்காக இந்நிறுவனத்திடமிருந்து செட்டாப்‌ பாக்ஸ்களை பெற்று கொண்டு, அதை பொது மக்களுக்கு ங்காமல்‌, தங்கள்‌ சுய லாபத்திற்‌ தனியார்‌ நிறுவன செட்டாப்‌ பாக்ள்‌ பொது மச்‌ வழங்கி அரசு நிர்ணயம்‌ செய்த தொகையை விட கூடுதலாக வசூல்‌ செய்வதாக, புகார்கள்‌ வந்த வண்ணம்‌ உள்ளது.

        தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்திற்கு இவ்வாறு வருவாய்‌ இழப்பீடு ஏற்படுத்தும்‌ கேபிள்‌ டிவி ஆபரேட்டர்கள்‌ மீதும்‌, தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்தின்‌ செட்டாப்‌ பாக்ஸ்‌கள்‌ மூன்று மாதங்களுக்கு மேலாக செயலாக்கம்‌ செய்யாமலும்‌, அவ்வாறு செயலாக்கம்‌ செய்யாத செட்டாப்‌ பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காத கேபிள்‌ டிவி ஆபரேட்டர்கள்‌ மீதும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌.

மாண்புமிகு தகவல்‌ தொழில்நுட்பவியல்‌ துறை அமைச்சர்‌

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Thursday, June 17, 2021

TN CM Called On PM and Presented The Memorandum

செய்தி வெளியீடு எண்‌:290

செய்தி வெளியீடு

நாள்‌:17.06.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (17.6.2027 புதுடில்லியிலுள்ள பிரதமர்‌ இல்லத்தில்‌, மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள்.

Memorandum presented to Shri Narendra Modi, Hon’ble Prime Minister of India by M.K.Stalin, Hon’ble Chief Minister of Tamil Nadu on17.06.2021.






Wednesday, June 16, 2021

CM Handed Over Financial Assistance to the Children Who Have Lost Their Parents to COVID-19

செய்தி வெளியீடு எண்‌:279
 நாள்‌: 16.06.2021
              
செய்தி வெளியீடு

Honble Chief Minister handed over financial assistance to the children who have lost their parents to COVID-19

      மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ கொரோனா நோய்த்‌ தொற்றால்‌ பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கினார்கள்‌.

      தமிழகத்தில்‌ கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும்‌ குழந்தைகளின்‌ எதிர்காலத்தை பாதுகாத்திடும்‌ வகையில்‌, அந்த குழந்தைகளுக்கு தலா 5 இலட்சம்‌ ரூபாய்‌ வைப்பீடு, கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ தாய்‌ அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும்‌ தந்‌ைத அல்லது தாய்க்கு 3 இலட்சம்‌ ரூபாய்‌ நிவாரணத்‌ தொகை, கொரோனா தொற்றால்‌ பெற்றோர்களை இழந்து உறவினர்‌ / பாதுகாவலரின்‌ ஆதரவில்‌ வளரும்‌ குழந்தைகளின்‌ பராமரிப்புச்‌ செலவாக மாதந்தோறும்‌ தலா 3 ஆயிரம்‌ ரூபாய்‌ உதவித்‌ தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள்‌ மற்றும்‌ விடுதிகளில்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ தங்குவதற்கு இடம்‌, இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக்‌ கட்டணம்‌ மற்றும்‌ விடுதிக்‌ கட்டணம்‌ உள்ளிட்ட அனைத்தையும்‌ அரசே ஏற்றுக்‌ கொள்ளும்‌ என்பது போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ 29.5.2021 அன்று அறிவித்தார்கள்‌.




     அந்த அறிவிப்புகளை செயல்படுத்திட சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறையால்‌ அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளுடன்‌ அரசாணை வெளியிடப்பட்டது.

    அவற்றில்‌ முக்கியமான நிவாரண உதவிகளான கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும்‌ குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில்‌ தலா 5 இலட்சம்‌ ரூபாய்‌ வைப்பீடு செய்து, அக்குழந்தை 18 வயது நிறைவடையும்‌ போது, அந்தத்‌ தொகையை அக்குழந்தைக்கு வட்டியோடு வழங்கும்‌ வகையில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (16.6.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌, 5 குழந்தைகளுக்கு அவர்களது பெயரில்‌ தலா 5 இலட்சம்‌ ரூபாய்‌ தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும்‌ அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்‌ (Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited) வைப்பீடு செய்தமைக்கான சான்றிதழ்களை, அக்குழந்தைகளின்‌ பாதுகாவலர்களிடம்‌ வழங்கினார்கள்‌.

     மேலும்‌, கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ தாய்‌ அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும்‌ தந்‌ைத அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத்‌ தொகையாக 3 இலட்சம்‌ ரூபாய்‌ வழங்கிடும்‌ வகையில்‌, பெற்றோர்களில்‌ ஒருவரை இழந்து தவிக்கும்‌ 5 குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின்‌ தந்‌ைத / தாய்க்கு உடனடி நிவாரணத்‌ தொகையாக தலா 3 இலட்சம்‌ ரூபாய்க்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

    இந்நிகழ்வின்போது, மாண்புமிகு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை அமைச்சர்‌ திருமதி பி. கீதா ஜீவன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ. இறையன்பு, இ.ஆ.ப., சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திரு.ஷம்பு கல்லோலிகர்‌, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை செயலாளர்‌ மற்றும்‌ சமூக பாதுகாப்புத்‌ துறை ஆணையர்‌ திரு.ஆர்‌. லால்வேனா, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9