Monday, July 26, 2021

CM Chaired Review Meeting with the Activities of Geology and Mining Department.

 Tamil Nadu PR Honble Chief Minister chaired a meeting to review the activities of Geology and Mining Department.

“சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ சூழலியல்‌ பாதிக்‌ ஐ சுரங்கப்‌ பணி மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக்‌ கொள்கையை உருவாக்க வேண்டும்‌” - புவியியல்‌ மற்றும்‌ சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம்‌ மற்றும்‌ தமிழ்நாடு மேக்னசைட்‌ நிறுவனம்‌ ஆகியவற்றின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அறிவுறுத்தல்‌.


 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (24.07.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌, புவியியல்‌ மற்றும்‌ சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம்‌ மற்றும்‌ தமிழ்நாடு மேக்னசைட்‌ நிறுவனம்‌ ஆகியவற்றின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌, சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ சூழலியல்‌ பாதிக்காமல்‌ சுரங்கப்‌ பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக்‌ கொள்கையை (Sustainable Mining Policy) உருவாக்க வேண்டும்‌ என்று அறிவுறுத்திய மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, செயற்கை மணல்‌ தயாரிப்பு மற்றும்‌ விற்பனையை ஒழங்குமுறைப்படுத்த புதிய கொள்கை உருவாக்குவது குறித்தும்‌, கனிம வருவாயை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள்‌ குறித்தும்‌ ஆலோசனை நடத்தினார்‌.

பயன்பாட்டில்‌ இல்லாத குவாரிகளைக்‌ கண்டறிந்து, வாய்ப்புள்ள இடங்களில்‌ அக்குவாரிகளை மழைநீர்‌ சேகரிப்பு அமைப்புகளாக மாற்றி பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்குக்‌ கொண்டு வரவும்‌, பொதுமக்கள்‌ மற்றும்‌ கால்நடைகளுக்குப்‌ பாதிப்பு விளைவிப்பதாக உள்ள பயனற்ற கல்குவாரிகளை மறுசீரமைப்பு செய்து, பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌ என்றும்‌ அறிவுறுத்தினார்‌.

Read More...

Supply of Coronona cash relief and essential commodities bag through Fair Price Shops.

 From Food and Civil Supplies Department - Supply of Coronona cash relief and essential commodities bag through Fair Price Shops.

1) கொரோனா பெருந்தொற்றுக்‌ காரணமாக வாழ்வாதாரம்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும்‌ வகையில்‌ மே 15, 2021 முதல்‌, முதல்‌ தவணையாக ரூ.2000/- மற்றும்‌ ஜுன்‌ 15, 2021 முதல்‌ ரூ.2000/- ஆக மொத்தம்‌ ரூ.4000/- உதவித்தொகை, அரிசி பெறும்‌ குடும்ப அட்டைதாரர்களுக்குத்‌ தொடர்ந்து விநியோகம்‌ செய்யப்பட்டு வருகிறது. மேலும்‌, இக்குடும்பங்களுக்கு முழு ஊரடங்கின்போது தேவைப்படும்‌ மளிகைப்‌ பொருட்கள்‌ வழங்கிடும்‌ பொருட்டு 14 மளிகைப்‌ பொருட்கள்‌ அடங்கிய தொகுப்புப்‌ பையினை ஜுன்‌ 15ஆம்‌ தேதி முதல்‌ அரிசி பெறும்‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்‌ கடைகள்‌ வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.


2) 99 சதவீதத்திற்கும்‌ மேலாக அட்டைதாரர்கள்‌ தற்பொழுது நிவாரணத்தொகை மற்றும்‌ மளிகைப்‌ பொருட்கள்‌ தொகுப்பினைப்‌ பெற்றுள்ள நிலையில்‌, இதுவரை பெறாதோர்‌ 31.07.2021க்குள்‌ அவர்களுக்குரிய பொது விநியோகத்திட்ட அங்காடிகளில்‌ பெற்றுக்கொள்ளக்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. கொரோனா பாதிப்பு மற்றும்‌ இதர காரணங்களால்‌31.07.2021க்குள்‌ பெற இயலாத, 15.06.2021 அன்றைய தேதியில்‌ தகுதியுடன்‌ இருந்த, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 01.08.2021 முதல்‌ மாவட்ட வழங்கல்‌ அலுவலர்‌ நிலையிலான அலுவலரிடம்‌ நியாயவிலைக்‌ கடை மூலமாகத்‌ தகவல்‌ தெரிவித்து அனுமதிபெற்று அதன்பின்‌ அவர்களுக்கு உரிய நியாயவிலைக்‌ கடையிலிருந்தே வழங்கும்‌ முறை பின்பற்றப்படும்‌.

3) நிகழும்‌ 2021ஆம்‌ ஆண்டு மே 10 முதல்‌ புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த சற்றேறக்குறைய மூன்று இலட்சம்‌ மனுதாரர்களுக்குக்‌ குடும்ப அட்டைகள்‌ அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இக்குடும்ப அட்டைதாரர்கள்‌ 01.08.2021 முதல்‌ இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில்‌ ரேசன்‌ பொருட்களைத்‌ தொடர்ந்து பெற வழிவகை செய்யத்‌ தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டு வருகின்றன. ஆதலால்‌, புதிய குடும்ப அட்டைதாரர்கள்‌ 2021 ஆகஸ்ட்‌ முதல்‌ வாரத்திலிருந்து இன்றியமையாப்‌ பொருட்களைத்‌ தங்குதடையின்றிப்‌ பெற்றுக்கொள்ளலாம்‌.

4) அட்டைதாரர்கள்‌ அனைவரும்‌ கொரோனா நோய்த்‌ தொற்று தீரும்‌ வரை முகக்கவசம்‌ அணிந்து, தனி மனித இடைவெளியினைப்‌ பின்பற்றி, அவசியத்‌ தேவையின்றிப்‌ பொது வெளிக்கு வராமல்‌ தங்களையும்‌ காத்து சமூகத்தினையும்‌ காத்து கொரோனா தொற்றினை வென்றிடுவோம்‌.

Wednesday, July 21, 2021

CM Inaugurated New Projects and Signed MoUs with 35 companies.

  Honble Chief Minister inaugurated the completed projects, laid foundation stone for the new projects and MoUs were signed with 35 companies in the Investors Conclave organized by the Industries Department.

Today, (20.7.2021), the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru M.K. Stalin participated in the Investors Conclave organized by the Industries Department in ITC Grand Chola. During the event, 35 MoUs were exchanged with a cumulative investment of Rs. 17,141 crores and employment opportunities to 55,054 persons.

The Hon’ble Chief Minister also laid the foundation stone for 9 projects with an investment commitment of Rs. 4,250 crores and employment opportunities to 21,630 persons.

Apart from this, the Hon’ble Chief Minister of Tamil Nadu also inaugurated 5 projects with an investment commitment of Rs. 7,117 crores and employment opportunities to 6,798 persons.

The total investment committed in the above 49 projects is Rs. 28,508 crores and employment opportunities to 83,482 persons. 






Thursday, July 15, 2021

Free Enrolment of Traders for Three Months on TNTWB

 தமிழ்நாடு வணிகர்‌ நல வாரியத்தில்‌ மூன்று மாதத்திற்கு இலவச நிரந்தர உறுப்பினருக்கான சேர்க்கை.

Free Online enrolment of Traders for Three Months on Tamil Nadu Traders Welfare Board (TNTWB).

வணிகப்‌ பெருமக்களின்‌ நலனுக்காக இந்தியாவிலேயே முதன்‌ முதலாகத்‌ “தமிழ்நாடு வணிகர்‌ நல வாரியம்‌” என்ற அமைப்பு தமிழ்நாடு வணிகவரித்‌ துறையில்‌ 1989- ஆம்‌ ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

வணிகர்‌ நல வாரிய உறுப்பினர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு கீழ்க்கண்ட ஏழு வகையான நலத்திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகிறது:- 1. குடும்பநல உதவி 2. மருத்துவ உதவி 3. கல்வி உதவி 4. விளையாட்டுப்‌ போட்டி 5. தீவிபத்து 6. நலிவுற்ற வனரிகர்களுக்கு நிதி உதவி 7. சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை.


மேற்கூறிய நலத்திட்டங்கள்‌ மூலம்‌ 1989- ஆம்‌ ஆண்டு முதல்‌ 31.05.2021 வரை பயனடைந்தோர்‌ 8,873 உறுப்பினர்கள்‌. இதுவரை செலவிடப்பட்‌। மொத்ததொகை ரூ.3,05,73,000/- . மாண்புமிகு வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ அவர்களால்‌ 16.06.2021- யில்‌ தமிழ்நாடு வணிகவரித்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ தமிழ்நாடு வணிகர்‌ நல வாரியத்தில்‌ உறுப்பினராக சேர வணிகர்களுக்கு இணையவழி வசதி சேவை தொடங்கி  வைக்கப்பட்டது (http://www.tn.gov.in./tntwb/tamil) or https://ctd.tn.gov.in.  வணிகர்கள்‌ இந்த இணையவழி சேவையினை எங்கிருந்தும்‌ பயன்படுத்திக்கொள்ளலாம்‌. மேலும்‌, இணையவழியில்‌ பதிவு செய்ய சிரமம்‌ ஏற்படின்‌, அருகில்‌ உள்ள வணிகவரி வரிவிதிப்பு அலுவலகத்தை அணுகி தங்களின்‌ பதிவை மேற்கொள்ளலாம்‌. இதற்கு வரிவிதிப்பு அலுவலத்தில்‌ இணையம்‌ சார்ந்த சேவை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வணிகர்கள்‌ இந்த இணையம்‌ சார்ந்த சேவையினை பயன்படுத்த சிரமம்‌ இருப்பின்‌ அருகில்‌ உள்ள வரிவிதிப்பு அலுவலகங்களின்‌ உறுப்பினர்‌ சேர்க்கைக்கான படிவம்‌ பெற்று பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன்‌ நேரிடையாகவும்‌ சமர்ப்பிக்கலாம்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வணிகர்‌ நல வாரியத்தை சீரமைத்து உறுப்பினர்‌ சேர்க்கையை செம்மைப்படுத்தி திறம்பட செயல்படும்‌ வகையில்‌ சிறு மற்றும்‌ குறு வணிகர்களின்‌  வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இந்த வாரியத்தின்‌ மூலம்‌ நலத்திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக சரக்கு மற்றும்‌ சேவை வரி (GST) சட்டத்தில்‌ பதிவு பெற்று “விற்று முதல்‌ அளவு” (Turn Over)‌ ரூ.40,00,000/- (ரூபாய்‌ நாற்பது இலட்சம்‌ மட்டும்‌) உட்பட்ட சிறு வணிகர்கள்‌ மற்றும்‌ சரக்கு மற்றும்‌ சேவை வரி (GST) சட்டத்தின்‌ கீழ்‌ பதிவு பெறாத குறு வணிகர்கள்‌ இந்த வாரியத்தில்‌ உறுப்பினர்களாக சேர, சேர்க்கைக்‌ கட்டணத்‌ தொகையான ரூ.500/- ஐ வசூலிப்பதிலிருந்து மூன்று மாதங்களுக்கு 15.07.2021 முதல்‌ விலக்களித்து ஆணையிட்டுள்ளார்‌.

எனவே வணிகர்கள்‌, தமிழ்நாடு வணிகர்‌ நல வாரியத்தில்‌ உறுப்பினராக பதிவு செய்து பயன்பெற கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.


Applications Invited for Various Awards for Thiruvalluvar Day

     தமிழுக்கும்‌ தமிழ்‌ வளர்ச்சிக்கும்‌ பாடுபடும்‌ தமிழறிஞர்களைச்‌ சிறப்பிக்கும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச்‌ சிறப்பித்து வருகிறது. அவ்வகையில்‌ எதிர்வரும்‌ தைத்‌ திங்கள்‌ 2ஆம்‌ நாள்‌ நடைபெறவுள்ள திருவள்ளுவர்‌ திருநாளில்‌ கீழ்க்காணும்‌ விருதுகள்‌ வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகளுக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்‌ படிவம்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ மாய ாகாரிபவிவள்ர்பால்‌.௦௦ா. என்ற வலைத்தளத்தில்‌ இலவசமாகப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. விண்ணப்பிப்பவர்கள்‌ தன்விவரக்‌ குறிப்புகளுடன்‌ நிழற்படம்‌ இரண்டு, எழுதிய நூல்களின்‌ பெயர்ப்பட்டியலுடன்‌ அந்நூல்களில்‌ ஒருபடி வீதம்‌ தமிழ்‌ வளர்ச்சி இயக்குநர்‌, தமிழ்‌ வளர்ச்சி இயக்ககம்‌, தமிழ்‌ வளர்ச்சி வளாகம்‌ முதல்‌ தளம்‌, தமிழ்ச்‌ சாலை, எழும்பூர்‌, சென்னை-600 008 என்ற முகவரிக்கு 16.08.2021 ஆம்‌ நாளுக்குள்‌ அனுப்ப வேண்டும்‌.

(தொ.பே.எண்‌. 044-28190412, 044-28190413, மின்னஞ்சல்‌ முகவரி: tamilvalarchithurai@gmail.com)

1. திருவள்ளுவர்‌ விருது - 2022 திருக்குறள்‌ நெறி பரப்புவோருக்கு)

2. மகாகவி பாரதியார்‌ விருது -... 2021 (பாரதியாரின்‌ படைப்புகள்‌ அனைத்தையும்‌ முழுமையாகப்‌ பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப்‌ பற்றிய கவிதைகள்‌ மற்றும்‌ பாரதியின்‌ புகழ்‌ பரப்பும்‌ வகையில்‌ கவிதை, உரைநடை நூல்கள்‌ படைத்தோர்‌, பிற வகையில்‌ தொண்டு செய்தோர்‌, செய்பவர்களுக்கு).

3. பாவேந்தர்‌ பாரதிதாசன்‌ விருது -2021 (சிறந்த கவிஞருக்கு)

4. தமிழ்த்தென்றல்‌ திரு.வி.க. விருது - 2021 (சிறந்த தமிழ்‌ எழுத்தாளருக்கு)

5. கி.ஆ.பெ. விசுவநாதம்‌ விருது - 2021 (சிறந்த தமிழ்‌ அறிஞருக்கு)

6.பெருந்தலைவர்‌ காமராசர்‌ விருது - (தெருவெங்கும்‌ பள்ளிகள்‌ திறந்து, இலவசக்‌ 2021 கல்வித்திட்டம்‌, சத்துணவுத்‌ திட்டம்‌ முதலிய திட்டங்கள்‌ மூலமாகத்‌ தமிழ்ச்‌ சமுதாயம்‌ கல்வி எனும்‌ கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளர்‌ அவர்களின்‌ அடிச்சுவட்டில்‌, தமிழக மக்களுக்குத்‌ தொண்டாற்றி வரும்‌ ஒருவருக்கு)

7. பேரறிஞர்‌ அண்ணா விருது -2021 (தமிழ்ச்‌ சமுதாயம்‌ முன்னேற்றம்‌ காண அயராது பாடுபடும்‌ ஒருவருக்கு)