24/7 HelpLine Numbers for Continuous Process Industries and other Industries manufacturing Essential Commodities.
செய்தி வெளியீடு எண்: 033
நாள்:11.05.2021
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, அத்தியாவசிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு உதவிட 24/7 தொலைபேசி வழி உதவி சேவை மையம் அமைத்தல்.
கோவிட் பெருந்தொற்று முழு ஊரடங்கு தொடர்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், 9.5.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தொழில் சங்கத்தினர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்கள். அக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இந்த முழு ஊரடங்கு காலகட்டத்தில் தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (Continuous process Industries), அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் (Essential Commodities) மற்றும் கட்டுமானப் பணிகள் ஆகியவை தொடர்ந்து செயல்படுவதில் ஏற்படும் இடர்பாடுகளை களையும் பொருட்டு 24/7 தொலைபேசி வழி உதவி சேவை மையம் தொடங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் தொழில் துறை ஓர் உதவி சேவை மையத்தினை தொடங்கியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்/சந்தேகங்கள் மற்றும் தேவையான உதவிகளுக்கு கீழ்க்கண்ட அலுவலர்களின் அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இது தொடர்பாக covidsupport@investtn.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் அணுகலாம்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9