செய்தி வெளியீடு எண்:224
நாள்:04.06.2021
செய்தி வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆவின் பால் லிட்டர் ரூபாய் 3/- விலை குறைத்து ஆணை பிறப்பித்தார், உத்தரவை மீறி கூடுதலாக விற்பனை செய்த 10 சில்லறை விற்பனையாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய மாண்புமிகு பால் வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் அவர்கள் உத்தரவு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் பொதுமக்கள் அணைவரும் பயன்பெறும் வகையில் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்துள்ளார்கள், அதில் இரண்டாவதாக மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு பால் வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் அவர்கள் நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் 16.05.2021 அன்று துவக்கி வைத்தார்.
விற்பனை விலை:-
இந்த அரச க்கு ஏற்ப அனைத்து ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து, ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து மாண்புமிகு பால் வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில், ஆவின் மேலாண்மை இயக்குநர் அவர்களால் உடனடியாக சிறப்பு குழுவை அமைத்து சென்னையில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் 21.05.2021 அன்று 11 சில்லறை விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.