மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை புனரமைத்து, புத்துயிர் அளித்து, அதன் ஒளிபரப்பு சேவையை தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 02.09.2011 அன்றும், சென்னை மாநகர ஒளிபரப்பு சேவையை 20.10.2012 அன்றும் துவக்கி வைத்தார்கள். குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 14.09.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் “இல்லந்தோறும் இணையம்” என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கிடும் என்றும், அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் ஆகியவற்றுடன் சேர்த்து, புதிதாக இணைய வழி தொலைக்காட்சி சேவைகளும் (Internet Protocol Television – IPTV) வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுடன் இணைந்து செயல்படுத்தும். தமிழ்நாடு முழுவதும் அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்கான உரிமத்தினை (ISP Licence) மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த விரும்பும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், தங்களது விருப்பத்தினை இந்நிறுவனத்தின் வலைதளத்தில் (www.tactv.in) உள் நுழைவு (Log-in) செய்து, “இணையதள சேவைகள்”– “Internet Services” என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பதிவினை 05.10.2015 அன்று காலை 10.00 மணி முதல் 20.10.2015 அன்று மாலை 5.00 மணி வரை மேற்கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.