Honble Chief Minister has requested the public to follow the instructions of the Government to contain the spread of COVID-19
செய்தி வெளியீடு எண்:144
நாள்:24.05.2021
செய்தி வெளியீடு
இன்று (24.05.2027 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள காணொலியில், மாநிலத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்கான அரசின் விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
இவ்வாறு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறேன். இது அனைத்தையும்விட முக்கியமானது கொரோனா தடுப்பு பணிகள் தான். கடந்த இரண்டு வாரங்களில் 17,000 புதிய படுக்கைகள் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 7,800 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், 30 இயற்கை மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டி ருக்கிறது. தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டோம். தினமும் 1.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக 2,100 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். 6000 செவிலியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றிக் கொண்டு வருகிறோம்.