Showing posts with label CM reviewed the activities of Human Resources Management Department. Show all posts
Showing posts with label CM reviewed the activities of Human Resources Management Department. Show all posts

Monday, August 2, 2021

CM reviewed the activities of Human Resources Management Department

அரசு அலுவலர்களின்‌ பணித்திறன்‌ உயர்த்தும்‌ வகையில்‌ பயிற்சிகள்‌; மக்கள்‌ பயன்பெறும்‌ ப அரசு சே ர்‌ அமைய வேண்டும்‌” - மேலாண்மைத்‌ துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவுறுத்தல்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (31.07.2021) மச்‌ செயலகத்தில்‌, மனிதவள மேலாண்மைத்துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


இக்கூட்டத்தில்‌, அரசு அலுவலர்களுக்குச்‌ சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன்‌ மூலம்‌, அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, அதன்மூலம்‌ மக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சேவைகளின்‌ தரத்தை உயர்த்த வேண்டும்‌ என்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌. மேலும்‌, போட்டித்‌ தேர்வுகளில்‌ நமது மாநில மாணவர்கள்‌ அதிக அளவில்‌ தேர்ச்சி பெறும்‌ வண்ணம்‌ பல்வேறு வகைப்பட்ட சிறப்புப்‌ பயிற்சிகளை வடிவமைத்து, அரசு பயிற்சி நிலையங்கள்‌ மூலம்‌ வழங்க வேண்டும்‌ எனவும்‌ வலியுறுத்தினார்‌. தமிழ்நாட்டுப்‌ மாணவர்களிடையே, மாநில மற்றும்‌ ஒன்றிய அரசுப்பணிகள்‌ தொடர்பான போட்டித்‌ தேர்வுகள்‌ / தகுதிகள்‌ / தேவையான பயிற்சிகள்‌ குறித்த விழிப்புணர்வை முதலில்‌ ஏற்படுத்தவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.

மேலும்‌, குடும்பத்தில்‌ முதல்‌ தலைமுறைப்‌ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள்‌ மூலம்‌ அரசுப்‌ பணியிடங்களில்‌ முன்னுரிமை வழங்கவும்‌, தகவல்‌ பெறும்‌ உரிமைச்‌ சட்டத்தின்கீழ்‌ அனைத்துத்‌ துறைகளிடமும்‌ இணையதளம்‌ மூலம்‌ தகவல்‌ பெறும்‌ வசதிகளை மேம்படுத்தவும்‌ அறிவுறுத்தினார்‌.

அரசு அலுவலர்களின்‌ மனிதவள ஆற்றலினை மேம்படுத்தவும்‌, தமிழக இளைஞர்களின்‌ அரசு வேலைவாய்ப்பினைப்‌ பெருக்குவதற்கும்‌, அண்ணா மேலாண்மைப்‌ பயிற்சி மையம்‌ மற்றும்‌ போட்டித்‌ தேர்வுப்‌ பயிற்சி மையங்களின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ கட்டமைப்புகளை உயர்த்திடவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.

பவானிசாகரில்‌ உள்ள அடிப்படைப்‌ பயிற்சி மையத்தால்‌ அரசுப்‌ பணியாளர்களுக்கான பயிற்சியினைக்‌ காணொலிக்‌ காட்சி வாயிலாக இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்தலாம்‌ என்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, மாண்புமிகு நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.பழனிவேல்‌ தியாகராஜன்‌, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறைக்‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ திரு.ச.கிருஷ்ணன்‌, இ,ஆ.ப., மனிதவள மேலாண்மைத்‌ துறைச்‌ செயலாளர்‌ திருமதி.மைதிலி கே.ராஜேந்திரன்‌, இ,ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.