Complete Lockdown - Relaxation to Industries manufacturing essential commodities, medical supplies and Continuous Process Industries
செய்தி வெளியீடு
கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்காக, 24.5.2021 அன்று முதல் முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது மிக இன்றியமையாத சில பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் (Industries Manufacturing Essential Commodities and Medical Supplies) மற்றும் தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறைத் தொழிற்சாலைகள் (Continuous Process Industries) ஆகியவை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்கு கிடங்குகள், தொலை தொடர்பு சேவைகள், அத்தியாவசிய தரவு மையங்கள் பராமரிப்பு பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த ம்சாழிந்சலை பணியாளர்கள் பணிக்கு சென்று வர E - Registration முறையில் https://eregister.tnega.org/ பதிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே பதிவு செய்துள்ள வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்கள் (Buses, Vans, Tempos and Cars) ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி புதுப்பித்து அளிக்கப்படும். இரு சக்கர வாகனங்களில் பணியாளர்கள்
பணிக்கு சென்று வர 25.5.2021 முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆதலால், இத்தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களை பணிக்கு அழைத்து வர நான்கு சக்கர வாகனங்களை (Buses, Vans, Tempos and Cars) ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த நான்கு சக்கர வாகனங்களை (E - Registration) முறையில் https://eregister.tnega.org/ வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். E - Registration செய்து அதனடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்களின் அடிப்படையில் காவல் துறையினர் இவ்வாகனங்களை அனுமதிப்பர்.
இரு சக்கர வாகனங்களின் அனுமதிகளை தவிர மற்ற விலக்களிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான E - Registration தானாகவே புதுப்பிக்கப்படும்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை - 9