Showing posts with label Decisions of CM based on the Report Submitted by the Commission of Inquiry about Incident of Sterlite Factory. Show all posts
Showing posts with label Decisions of CM based on the Report Submitted by the Commission of Inquiry about Incident of Sterlite Factory. Show all posts

Wednesday, May 26, 2021

Decisions of CM based on the Report Submitted by the Commission of Inquiry about Incident of Sterlite Factory

Decisions of the Honble Chief Minister based on the report submitted by the Commission of Inquiry to inquire into the causes and circumstances leading to the opening of fire resulting in death and injuries to persons at Sterlite Factory, Thoothukudi

செய்தி வெளியீடு எண்‌:157 

நாள்‌:26.05.2021

செய்தி வெளியீடு

தூத்துக்குடியில்‌ 22-5-2018 அன்று ஸ்டெர்லைட்‌ தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்‌ கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின்‌ காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள்‌ குறித்தும்‌, பொது மற்றும்‌ தனியார்‌ சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள்‌ குறித்தும்‌ விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன்‌ அவர்கள்‌ தலைமையிலான விசாரணை ஆணையத்தின்‌ இடைக்கால அறிக்கை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களிடம்‌ 14-5-2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.


சென்னை உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன்‌ அவர்கள்‌ தலைமையிலான விசாரணை ஆணையத்தின்‌ இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப்‌ பரிசீலித்தது. ஆணையத்தின்‌ பரிந்துரையின்‌ அடிப்படையில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 21-5-2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய புலனாய்வுத்‌ துறைக்கு மாற்றம்‌ செய்யப்பட்ட வழக்குகளைத்‌ தவிர 38 வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெற்றிடவும்‌, அதில்‌ தொடர்புடைய கீழ்க்கண்ட அரசியல்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ மீதான வழக்குகளையும்‌ திரும்பப்‌ பெற்றிட உத்தரவிட்டார்கள்‌.

 1.திரு.ஆர்‌.நல்லகண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர்‌, இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி.

2. திரு.வைகோ, பொதுச்‌ செயலாளர்‌, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌.

3. திரு.கே.பாலகிருஷ்ணன்‌, மாநில பொதுச்‌ செயலாளர்‌, இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி (மார்க்சிஸ்ட்‌)

4. திரு. டி.டி.வி.தினகரன்‌, துணைப்‌ பொதுச்‌ செயலாளர்‌, அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகம்‌.

5. திருமதி பிரேமலதா விஜயகாந்த்‌, மாநில மகளிரணித்‌ தலைவர்‌, தேசிய முற்போக்கு திராவிட கழகம்‌.

6. திரு. எல்‌.கே.சுதீஷ்‌, மாநில துணைச்‌ செயலாளர்‌, தேசிய முற்போக்கு திராவிட கழகம்‌.

7 திரு.௮னிதா ஆர்‌.இராதாகிருஷ்ணன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ மற்றும்‌ தற்போது மாண்புமிகு அமைச்சர்‌ (மீன்வளம்‌) , தூத்துக்குடி மாவட்டச்‌ செயலாளர்‌ (தெற்கு), திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌

8. திரு.அழகு முத்துபாண்டியன்‌, மாவட்டச்‌ செயலாளர்‌, இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி.

9. திரு. ராஜா, மாவட்டச்‌ செயலாளர்‌, இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி (மார்க்சிஸ்ட்‌)

10. திரு.ஹென்றி தாமஸ்‌, மாவட்டச்‌ செயலாளர்‌, அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகம்‌.

ரர. திருமதி பூமயில்‌, மாவட்டச்‌ செயலாளர்‌, இந்திய ஜனநாயக மகளிர்‌ சங்கம்‌ (DWFI)

12. திரு.ஆர்தர்‌ மச்சோடா, துணைச்‌ செயலாளர்‌, ஆம்‌ ஆத்மி கட்சி.

13. திரு.பாலசிங்‌, ஒன்றியச்‌ செயலாளர்‌, திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9