கலை பண்பாட்டுத்துறை
தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம்
சென்னை-8
2015 ஆம் ஆண்டிற்கான தேசிய பாலஸ்ரீ விருதுக்கான சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள்
கலைகளில் புதுமை படைத்திடும் குழந்தைகளை ஊக்கப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் பாலஸ்ரீ (NATIONAL BAL SHREE AWARD) எனும் தேசிய விருது புதுதில்லியில் உள்ள தேசிய பாலபவனால் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருது மேடைக்கலை (Creative Performance), அறிவியற்கலை (Creative Scientific Innovation), படைப்புக்கலை (Creative Art) மற்றும் எழுத்துக்களை (Creating Writing) ஆகிய நான்கு முதன்மைப் பிரிவுகளில் இடம்பெறும் 16 உபபிரிவுகளில், புதுமைகள் படைத்திடும் கற்பனை திறமையுடைய 10 லிருந்து 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு வழங்கப்படுகிறது. பாலஸ்ரீ (NATIONAL BAL SHREE AWARD) விருது தெரிவு மாவட்ட அளவில், மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் என மூன்று கட்டங்களாக நடைபெறும்.
2015 ஆம் ஆண்டிற்கான பாலஸ்ரீ விருதுக்கான (Under Revised National Bal Shree Selection-2015) முதற்கட்ட தெரிவுகள், சென்னை மாவட்ட அளவில், சென்னை-28, இராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் 10.10.2015 மற்றும் 11.10.2015 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது. 10.10.2015 அன்று காலை 9.30 மணி முதல் மேடைக்கலையில் (Creative Performance)கருவியிசை/தாளவாத்தியம், குரலிசை, நாட்டியம், நாடகம் மற்றும் பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைகளிலும் மற்றும் அறிவியல் கலையில் (Creative Scientific Innovation) அறிவியல் மாதிரி உருவாக்கம், அறிவியல் செயல்முறை திட்டம், அறிவியலில் புதிர்களுக்கு தீர்வு காணுல், அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவற்றிலும் போட்டிகள் நடைபெற உள்ளது. அதே போன்று 11.10.2015 அன்று காலை 9.30 மணி முதல் படைப்புக்கலையில் (Creative Art) வரைகலை (டிசைனிங் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் ஆர்ட்), ஓவியம், சிற்பம், கைவினை உள்ளிட்டவற்றிலும் மற்றும் எழுத்துக்கலையில் (Creating Writing) கவிதை, கதை, கட்டுரை, வசனம் மற்றும் நாடகம் போன்றவற்றிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவ, மாணவியர்கள் தங்களது பிறப்புச் சான்று (Birth Certificate) மற்றும் பள்ளியில் பயின்று வருவதற்கான சான்றிதழ் (School Bonafide Certificate) சமர்ப்பித்தல் வேண்டும். 1.4.1999-31.3.2005-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். போட்டிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், கருவிகளையும் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளே கொண்டு வர வேண்டும்.
உள்ளூர் அளவிலான இத்தேர்வில் தெரிவு செய்யப்படுவோர், அடுத்து சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தெரிவில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்.044-28192152.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9