Statement of the Principal Secretary to Government on release of water from Parappalaru Dam for irrigation.
செய்தி வெளியீடு எண்: 89
நாள்:17.05.2021
செய்தி வெளியீடு
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையிலிருந்து 6 குளங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரியுள்ள வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திலுள்ள 6 குளங்களான, முத்து பூபால சமுத்திரம், பெருமாள்குளம், சடையகுளம், செங்குளம், இராமசமுத்திரம் மற்றும் ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகியவற்றின் மொத்தம் 1222.85 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் பொருட்டு, 18.5.2021 முதல் 17 நாட்களுக்கு, பரப்பலாறு அணையிலிருந்து மொத்தம் 102.00 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது .
அரசு முதன்மைச் செயலாளர்
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9