Honble Minister for Fisheries – Fishermen Welfare and Animal Husbandry chaired a review meeting of the department.
செய்தி வெளியீடு எண்: 029
நாள்:10.05.2021
பத்திரிக்கை செய்தி
கால்நடை பராமரிப்புத்துறை
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலக மாநாட்டுக் கூட்ட அரங்கத்தில் 10.05.2021 அன்று மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வுக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர், திரு அ.ஞானசேகரன், இ.ஆ.ப., தலைமை அலுவலக கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள் கிராமபுற பொருளாதார முன்னேற்றத்திற்கு கால்நடைகளின் பங்கு மிக முக்கிய இடம் அளிப்பதால், தற்போது உள்ள கொரோனா பெருந்தொற்று சூழலிலும் கால்நடை வளர்போர் பாதிக்கா வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க விவசாய பெருமக்கள் பயன்பெரும் வகையில் புதிய தொழில்நுட்ப யுக்திகள் மூலம் தேவையான மாற்றங்கள் கால்நடை துறையில் மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கிடும் வகையில் துறை அலுவலர்கள் பணி புரியும் படி அறிவுறித்தினார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வேலை வாய்ப்பினை அதிகரிக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறையில் அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட உள்ள தடைகளை உடனடியாக நீக்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்க வழி வகை செய்திட அறிவுறித்தினார்.
மேலும் புதிய தொழில்நுட்ப அணுகுமுறையின் மூலம் கால்நடை வளர்போருக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றி அவர்களின் விருப்பத்திற்கேற்ப பெண் கன்றுகளை உருவாக்கிட வழி வகை செய்ய வேண்டும் எனவும் மேலும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட துறையிலுள்ள பணியாளர்கள் திறம்பட பணிபுரிய அறிவுறித்தினார்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9