Showing posts with label Honble Minister on Post Requests Facility in HRCE Website. Show all posts
Showing posts with label Honble Minister on Post Requests Facility in HRCE Website. Show all posts

Monday, May 24, 2021

Honble Minister on Post Requests Facility in HRCE Website

 Statement of the Honble Minister for Hindu Religious and Charitable Endowments on Post Requests facility in HRCE Website

செய்தி வெளியீடு எண்‌: 146 நாள்‌:24.05.2021

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மாண்புமிகு மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலில்‌ மாண்புமிகு இந்துசமயஅறநிலையத்துறை அமைச்சர்‌ இரு. பி.கே. சேகர்பாபு அவர்களின்‌ செய்சுக்‌ குறிப்பு,

நாள்‌:24.5.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ இரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலில்‌, திருக்கோயில்கள்‌ தொடர்பாக பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்கள்‌ தங்களது கோரிக்கைகளைப்‌ பஇவு செய்துட ஏதுவாக "கோரிக்கைகளைப்‌ ப௫விடுக" எனும்‌ புதிய இணையவழி திட்டம்‌ அறிமுகம்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ இரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌, இந்துசமயஅறறிலையத்‌ துறை மற்றும்‌ இந்துசமய அறநிலையத்துறையின்‌ கழ்‌ இயங்கும்‌ இருக்கோயில்கள்‌ ஆகியவற்றின்‌ செயல்பாட்டில்‌ முழு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்‌ என உத்தரவிட்டுள்ளார்கள்‌. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவிற்கு ஏற்ப இத்துறை மற்றும்‌ இத்துறையின்‌ ஒழ்‌ உள்ள திருக்கோயில்கள்‌ செயல்பாட்டில்‌ வெளிப்படைத்தன்மையைக்‌ கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருஇன்றன. அவற்றுள்‌ ஒன்றானது கீழ்கண்ட அறிவிப்பு:

இந்துசமய அறநிலையத்‌ துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள திருக்‌கோயில்களுக்குச்‌ சொந்தமான நிலங்கள்‌, மனைகள்‌, மற்றும்‌ கட்டடங்கள்‌ பெருமளவில்‌ உள்ளன. இவற்றின்‌ வாடகைத்‌ தொகை, குத்தகைத்‌ தொகை மற்றும்‌ குத்தகை நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து இந்துசமயஅறநிலையத்‌ துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள்‌ வரப்‌ பெறுஇன்றன. மேலும்‌ இருக்கோயில்களின்‌ திருப்பணிகள்‌, இருவிழாக்கள்‌ மற்றும்‌ இதர வைபவங்கள்‌ குறித்தும்‌ பக்தர்களும்‌ பொதுமக்களும்‌ பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்‌ வைக்கின்றனர்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி இருக்கோயில்கள்‌ தொடர்பாக பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்கள்‌, தங்களது கோரிக்கைகளைப்‌ பஇவு செய்துட ஏதுவாக  "கோரிக்கைகளைப்‌ பதுவிடுக” எனும்‌ ஒர்‌ புதிய திட்டம்‌ இந்துசமயஅறறிலையத்‌ துறையின்‌ இணையதளமான hrce.tn.gov.in/ ல்‌ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்கள்‌ "கோரிக்கைகளைப்‌ பதிவிடுக" எனும்‌ இட்டத்தினைப்‌ பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளைப்‌ பதிவிடுமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

கோரிக்கைகளைப்‌ பதிவு செய்ய விரும்புவோர்‌ தங்களது அலைபேசி எண்‌ (கட்டாயம்‌) மற்றும்‌ மின்னஞ்சல்‌ முகவரி (கட்டாயம்‌ அல்ல) ஆஇயவற்றைக்‌ குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்‌. கோரிக்கைகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌. தேவைப்படின்‌ ஸ்கேன்‌ (Scan) செய்யப்பட்ட ஆவணங்களையும்‌ பதிவேற்றம்‌ செய்யலாம்‌. கோரிக்கைகளைப்‌ பதுவு செய்த பின்னர்‌ தங்களது அலைபேசி எண்‌ மற்றும்‌ மின்னஞ்சல்‌ முகவரிக்கு ஓர்‌ ஒப்புகை அட்டை அனுப்பப்படும்‌. தங்களது கோரிக்கைகள்‌ இந்துசமயஅறறிலையத்‌ துறை ஆணையருக்கு தக்க நடவடிக்கை எடுக்கும்‌ பொருட்டு இணைய வழியாக அனுப்பப்படும்‌.



கோரிக்கைகளின்‌ மீதான நடவடிக்கைகள்‌ இந்துசமய அறநிலையத்‌ துறை ஆணையரின்‌ நேரடி கண்காணிப்பில்‌ இருக்கும்‌. அதுமட்டுமன்றி, கோரிக்கைகளின்‌ மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்‌ விவரம்‌ என்னால்‌ விரிவாக ஆய்வு செய்யப்படும்‌. சமர்ப்பிக்கப்படும்‌ கோரிக்கைகளின்‌ மீது 60௦ தினங்களுக்குள்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌. பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்கள்‌, ஒப்புகை அட்டையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள பஇவுஎண்ணை உள்ளீடு செய்து கோரிக்கைகள்‌ மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம்‌ வாயிலாக அறிந்து கொள்ளலாம்‌.

LINK to Post the Request

எனவே, பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்கள்‌ இந்த இட்டத்தினை நன்கு பயன்படுத்தி துறை மற்றும்‌ இருக்கோயில்கள்‌ செயல்பாட்டினை மேம்படுத்திட உதவிடுமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9