From the Overseas Manpower Corporation Ltd., Chennai - Job opportunity in Kuwait for Heavy Vehicle Drivers
செய்தி வெளியீடு
மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று செல்லத்தக்க குவைத் ஓட்டுநர் உரிமம் 1பெற்று குவைத் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு இரண்டு வருடங்கள் முடிவுற்ற கனரக வாகன ஓட்டுநர்களும் தேவைப்படுகிறார்கள்.
இந்திய கனரக ஓட்டுநர் உரிமம் மற்றும் ஜிசிசி (GCC) கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் மேற்கண்ட பணிக்கு தகுதியுடையவர் ஆவர். இருப்பினும், குவைத் நாட்டில் கனரக ஒட்டுநர் உரிமம் பெறும் வரை அவர்கள் லேபராக பணிபுரிய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30 மாதங்களுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரண்டு நகல்கள், நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து புகைப்படத்துடன் 19.09.2015 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு எண் 42, ஆலந்துhர் சாலை, திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் குவைத் நாட்டின் சட்டதிட்டத்திற்கேற்ப இதர சலுகைகளும் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் தொடர்பான விவரங்களை www.omcmanpower.com என்ற இந்நிறுவன இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-22502267 /22505886/8220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.