" Statement of the Honble Minister for Minorities Welfare and Non Resident Tamils Welfare on Ramzan celebration."
செய்தி வெளியீடு எண்:045
நாள்:19.05.2021
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களின் அறிக்கை
“ரமலான் (14.5.202] பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாகப் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்த ஊரடங்கு 10.5.2021 முதல் 24.5.2021 வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் “முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பிர்” என்று ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொரோனா நோய்த் தொற்றும், அதை தடுக்க ஊரடங்கும் நடைமுறையில் இருக்கின்ற இந்தத் தருணத்தில், அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும், மதம் சார்ந்த விழாக்களையும் தவிர்த்து, தொற்றைக் குறைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.
சிறுபான்மையின மக்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையையும் நன்கு அறிந்த இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு ரமலான் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9