Showing posts with label WHATSAPP Number to Provide Information about Disasters. Show all posts
Showing posts with label WHATSAPP Number to Provide Information about Disasters. Show all posts

Thursday, June 10, 2021

WHATSAPP Number to Provide Information about Disasters

 செய்தி வெளியீடு எண்‌. 246

 நாள்‌: 08.06.2021

செய்தி வெளியீடு

    பேரிடர்‌ காலங்களில்‌ பொது மக்கள்‌ தங்கள்‌ பகுதிகளில்‌ ஆபத்துகள்‌ குறித்தான தகவல்களை தெரிவிக்க தனி வாட்ஸ்‌ அப்‌ எண்‌. (WhatsApp) மற்றும்‌ இணைய வாயிலாக தகவல்‌ பதிவு - புதிதாக அறிமுகம்‌

     பேரிடர்‌ காலங்களில்‌ இவ்வசதியினை பொது மக்கள்‌ பயன்படுத்தி கொள்ள மாண்புமிகு வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ திரு. கே.கே.எஸ்‌.எஸ்‌.ஆர்‌. இராமச்சந்திரன்‌ தகவல்

   ‌ பேரிடர்‌ காலங்களில்‌, பாதிப்பிற்குள்ளாகும்‌ மக்களுக்கு பேரிடர்‌ குறித்தான தகவல்களை குறித்த நேரத்தில்‌ தெரியப்படுத்தும்‌ ஒரு அமைப்பு முறையினை உருவாக்குவது மிக முக்கியமானதாகும்‌. இந்திய வானிலை ஆய்வு மையம்‌, இந்திய தேசிய கடல்சார்‌ தகவல்‌ மையம்‌, மத்திய நீர்வள ஆணையம்‌ போன்ற அமைப்புகளிடமிருந்து பெறப்படும்‌ கனமழை, வெள்ளம்‌, புயல்‌, நிலநடுக்கம்‌, சுனாமி போன்ற பேரிடர்கள்‌ குறித்தான எச்சரிக்கைத்‌ தகவல்கள்‌ TNSMART செயலி மூலமும்‌, TWITTER, FACEBOOK உள்ளிட்ட சமூக வலைதலங்கள்‌ மூலமும்‌, அச்சு மற்றும்‌ மின்னணு ஊடகங்கள்‌ வாயிலாகவும்‌ பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



     மேலும்‌, பேரிடர்கள்‌ மற்றும்‌ விபத்துக்களை தடுக்கும்‌ வகையில்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏதுவாக, பொதுமக்கள்‌ தகவல்‌ தெரிவிக்கவும்‌, படம்‌ எடுத்து அனுப்பும்‌ வகையிலும்‌ 24 மணி நேரமும்‌ இயங்கும்‌ மாநில அவசரக்‌ கட்டுப்பாட்டு மையத்தில்‌ பேரிடர்‌ முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனிப்பட்ட வாட்சப்‌ WHATSAPP எண்‌. 94458 69848 துவக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு 775௯௦ மூலம்‌ வரப்பெறும்‌ பேரிடர்கள்‌ தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள்‌ தொடர்புடைய அலுவலர்கள்‌ / துறைகளுக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

>>More About Statement of the Honble Minister for Revenue and Disaster Management