Friday, August 14, 2015

Application for the post of Livestock Inspector- Grade II

Independence Day Greeting message of the Honble Chief Minister -2015

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சுதந்திரத் திருநாள் வாழ்த்துச் செய்தி

ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய்த் திருநாட்டை மீட்டு, நாட்டு மக்களும் அவர்தம் வருங்கால சந்ததியினரும் சுதந்திர காற்றை சுவாசித்திட, தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து, நாட்டு விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர் தியாகம் செய்த தன்னலமற்ற சுதந்திர போராட்ட தியாகச் செம்மல்களின் நாட்டுப் பற்றையும் தியாக உணர்வையும் போற்றி நினைவுகூரும் நன்னாள் இந்த சுதந்திரத் திருநாளாகும்.


இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிடும் வகையில் எனது தலைமையிலான அரசு, தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 9,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும்; அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 4,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும்; வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரது வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை 2,000 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி வருகிறது.

மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பறிய தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து போற்றிடும் வகையில் பல்வேறு தியாகிகளின் மணிமண்டபங்களை எனது தலைமையிலான அரசு எழுப்பி சிறப்பித்து வருவதுடன், தியாகிகளின் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை புதுப்பித்து, புனரமைத்து, பராமரித்து வருகிறது. அந்த வகையில், 2014-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் அமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னத்தையும், 2015-ஆம் ஆண்டு விருதுநகரில் அமைக்கப்பட்ட தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாற்றில் அமைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தையும் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தேன்.

“இமயம் தொட்டுக் குமரி மட்டும் இங்கிருக்கும் யாவரும்
இந்தியாவின் மக்களென்ற சொந்தம் காணச் செய்குவோம்”

                       -- என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் பாடல் வரிகளுக்கேற்ப, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன், நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளமிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்கிடவும், அனைத்து தரப்பு மக்களும் சாதி,மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறி, அனைவருக்கும் எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்

Thursday, August 13, 2015

Congratulatory Letter to Mr. Sunder Pichai.

Text of the congratulatory letter dated 12.8.2015 addressed by Selvi J Jayalalithaa, Hon’ble Chief Minister of Tamil Nadu to Mr. Sundar Pichai, Chief Executive Officer-Designate, “Google”, is reproduced below:-

“Congratulations on your appointment as the Chief Executive Officer of Google Inc. It is a matter of pride for Tamil Nadu that a person with roots in the State has attained such a high position in a highly competitive environment through ability and dint of hard work. You have set a wonderful example for the youth of the State.



On behalf of the people and Government of Tamil Nadu I congratulate you on your elevation and wish you all success in your new position.”

Issued by: Director of Information and Public Relations, Chennai – 9
Date: 12.8.2015

Advertisement for the post of IT Consultant


Job opportunity in Oman and Kuwait.

செய்தி வெளியீடு எண்:401                                                                       நாள் :13.08.2015

ஓமன் நாட்டிலுள்ள ஒரு முன்னணி நிறுவனத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவத்துடன் 22 முதல் 32 வயதிற்குட்பட்ட இயந்திரம்இயக்குபவர்கள் (Machine Operators) தேவைப்படுகிறார்கள்.

மேலும், குவைத் நாட்டில், இந்திய தொலைதொடர்பு திட்டப்பணிகளுக்காக எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 22 முதல் 35 வயதிற்குட்பட்ட கேபிள் பொருத்துவதற்கான பள்ளம் தோண்டுதல் தொடர்பில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற லேபர்கள் மற்றும் செல்லத்தக்க குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள கனரக வாகன ஓட்டுநர்களும், ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களும் தேவைப்படுகிறார்கள். இந்திய கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் குவைத் கனரக ஒட்டுநர் உரிமம் பெறும் வரைஅவர்கள் லேபராக பணிபுரிய வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் தொடர்புடைய நாட்டின் சட்டதிட்டத்திற்கேற்ப இதர சலுகைகளும் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் தொடர்பான விரிவான விவரங்கள் மற்றும் ஊதிய விவரங்களை www.omcmanpower.com என்ற இந்நிறுவன இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரண்டு நகல்கள் மற்றும் நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படத்துடன், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மன்னார்புரம்) 30.8.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறும் முதற்கட்டத் தேர்விற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

 நிர்வாக இயக்குநர்

 வெளியீடு:
 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9