Tuesday, November 3, 2015
Statement of CM on Calamity Relief Fund Assistance
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 4.11.2015.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எதிர் வரும் டிசம்பர் மாதம் முடிய பருவமழை தொடர்ந்து நீடிக்கும். கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நான் அரசு உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி, பருவமழையின் போது உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்படக் கூடும். அவ்வாறு பருவ மழையால் பாதிக்கப்படுவோருக்கு உரிய நிவாரண உதவிகளை விரைந்து வழங்கவும் நான் உத்தரவிட்டுளேன். பருவமழை காரணமாக ஏற்படும் உயிரிழப்பு, கால்நடை இழப்பு, சேதமடைந்த குடிசைகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்கிட நான் ஆணையிட்டுள்ளேன்.
அதன்படி,
மழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 4 லட்சம் ரூபாய்;
முழுவதும் சேதமடைந்த நிரந்தர வீடு ஒன்றுக்கு 95,100 ரூபாய்;
முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 5,000 ரூபாய்;
பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாய்;
மற்றும் 10 கிலோ அரிசி, உடை மற்றும் 1 லிட்டர் மண்ணெண்ணெய்;
பசு மற்றும் எருமை மாடு உயிரிழப்புக்கு 30,000 ரூபாய்;
ஆடு, பன்றி உயிரிழப்புக்கு 3,000 ரூபாய்;
கோழி உயிரிழப்புக்கு 100 ரூபாய்;
என நிவாரண உதவித் தொகைகள் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், வெள்ளம் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, ஒரு புடவை, ஒரு வேட்டி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றுடன் 1,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். முகாம்களில் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவையும் வழங்கப்படும்.
மழையால் பாதிக்கப்படும் நெல் மற்றும் நீர்ப்பாசனம் பெறும் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500/- ரூபாய்; மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410/- ரூபாய்; நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000/- ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டுளேன்.
முழுவதும் பாதிக்கப்படும் கட்டு மரம் ஒன்றுக்கு 32,000/- ரூபாய் வழங்கவும், பகுதி பாதிக்கப்பட்டு பழுது பார்க்கப்பட வேண்டிய கட்டு மரங்களுக்கு 10,000 ரூபாய் வீதமும், முழுவதும் பாதிக்கப்படும் FRP வல்லம் ஆகியவற்றிற்கு 50 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில், அதிகபட்சம் 75,000 ரூபாய் வரையிலும்; பகுதி சேதமடையும் FRP வல்லம் ஆகியவற்றுக்கு 20,000 ரூபாய் என்ற வீதத்திலும்; முழுமையாக சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு 35 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் என்ற வீதத்திலும்; பகுதி சேதமடையும் எந்திரப் படகுகளுக்கு பழுது பார்க்கும் செலவில் 60 சதவீதம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய், கட்டுமரங்களுக்கான வலை சேதமடைந்தால் 10,000 ரூபாய்; படகுகளின் வெளிப்புறம் பொருத்தப்படும் எந்திரங்களுக்கு 5,000 ரூபாய் என்ற வீதங்களில் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
பருவமழையினால் சாலைகள், பாலங்கள், இதர அரசு கட்டடங்கள் ஆகியவற்றிற்கு சேதம் ஏற்பட்டால் அவற்றை சீரமைக்க உரிய கருத்துருக்களை உடனுக்குடன் அனுப்ப அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்
Tamil Nadu Government Multi Super Speciality Hospital - Guidelines and Protocols
வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள்
Guidelines & Protocols
Guidelines & Protocols
Sunday, November 1, 2015
CM on the Bonus payable to the employees of Government and State undertakings
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 1.11.2015
‘உழைப்பே உயர்வு தரும்’ ‘உழைப்பவர் வளம் பெறுவர்’ என்ற முதுமொழிக்கேற்ப, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்தாக அமைபவர்கள் தொழிலாளர் பெருமக்கள் ஆவார்கள். தொழிலாளர்களின் முன்னேற்றமே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முழுமை அடையச் செய்யும். உற்பத்தியை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதிலும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. எனவே தான் அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
- தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
- தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையுடன் கூடுதலாக 10 விழுக்காடு கருணைத் தொகை தற்போது வழங்கப்படும்.
- லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.
- தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
- தமிழ்நாடு பாடநுhல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
- தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
- ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
- தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் அனைத்து தகுதியுள்ள பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
- தமிழ்நாடு ஜரிகை ஆலை நிறுவனத்தில் பணிபுரியும் தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 464 தொழிலாளர்களுக்கு 242 கோடியே 41 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும்.
அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும்.
ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்
Subscribe to:
Posts
(
Atom
)