Honble Chief Minister inaugurated the special vaccination camp at Kolathur Assembly Constituency and inspected the COVID Special Ambulances.
Monday, May 17, 2021
Sun Group Handed Over Cheque for CMPRF
Thiru Kalanithi Maran, Chairman, Sun Group called on the Honble Chief Minister and handed over a cheque for Rs 10 Crores towards State Disaster Fund for Corona Relief Works.
செய்தி வெளியீடு எண்: 084
நாள்:17.05.2021
செய்தி வெளியீடு
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கும், இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசிற்கு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவை உள்ளதால், அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு உதவிடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (17.5.2021 முகாம் அலுவலகத்தில், சன் குழுமத்தின் சார்பில் அதன் தலைவர் திரு. கலாநிதி மாறன் அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, திருமதி துர்கா ஸ்டாலின் மற்றும் திருமதி காவேரி கலாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9
Thursday, May 13, 2021
Statement of the Honble Minister on Ramzan celebration
" Statement of the Honble Minister for Minorities Welfare and Non Resident Tamils Welfare on Ramzan celebration."
செய்தி வெளியீடு எண்:045
நாள்:19.05.2021
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களின் அறிக்கை
“ரமலான் (14.5.202] பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாகப் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்த ஊரடங்கு 10.5.2021 முதல் 24.5.2021 வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் “முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பிர்” என்று ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொரோனா நோய்த் தொற்றும், அதை தடுக்க ஊரடங்கும் நடைமுறையில் இருக்கின்ற இந்தத் தருணத்தில், அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும், மதம் சார்ந்த விழாக்களையும் தவிர்த்து, தொற்றைக் குறைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.
சிறுபான்மையின மக்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையையும் நன்கு அறிந்த இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு ரமலான் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9
Official Letter to the PM by Tamil Nadu CM
செய்தி வெளியீடு எண்: 049
நாள்:13.05.2021
" Text of the D.O. letter addressed by the Honble Chief Minister to the Honble Prime Minister of India."
கோவிட் தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, ஜி.எஸ்.டி. கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இந்தப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் (Zero Rate) என நிர்ணயிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரியுள்ளார்கள்.
நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் மேல்வரி விதிப்பால் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோனா தொற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி (Adhoc Grants-in-Aid) அளிக்கப்பட வேண்டும்.
இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற்கொள்ளத் தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவிகிதம் என்ற அளவிலிருந்து மேலும் ஒரு சதவிகிதம் உயர்த்த வேண்டும்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9