Tuesday, May 18, 2021

Tamil Nadu Private Job Portal Service

 The Department of Employment and Training acts as a facilitator to match the job aspirations of the youth with the manpower requirements of the employers in the private sector.

Use of the Tamil Nadu Private Job Portal Services

     Job postings, Job seeker profile database and other features of the portal may be used only by Job Seekers seeking employment or career information and by Employers seeking suitable candidates. The term ‘post’ or ‘upload’ as used herein shall mean information that the User submits, publish or display in the portal.

     Candidates registering in the portal are responsible for their Profiles, content and accuracy of any material uploaded therein by them and search for and evaluate job opportunities at their sole discretion.

    The Department does not screen or censor the personal data including Job profiles posted and makes no representations about any details or any content provided by the job seekers in the portal.

Click Here for the Job Website.

    

    The Department is not involved in the actual transaction between Employers and the registered Job-seekers in the portal and not to be considered to be an employer with respect to the site and shall not be responsible for any employment decisions, for whatever reason, made by any entity posting jobs in this portal.

     The Department will have grounds to terminate the services of the private job portal against the Employer for any misrepresentation or otherwise misleading the public regarding the nature or the business activities or the job offerings posted in the www.tnprivatejobs.tn.gov.in .

        The Department of Employment and Training reserves the right in its sole discretion to remove User Content, job postings, job profiles or other material from the site from time to time for the purpose of managing the database and to ensure effective user experience without any intimation to the Users .

         The Department reserves the right to remove any job posting or content from the site, which in the reasonable exercise of discretion, does not comply with the above Terms and Conditions or detrimental to the public interest .

         The Department of Employment and Training reserves the right to initiate appropriate Civil and /or Criminal proceedings against the Users for violation of any of the above Terms and Conditions or in contravention of any other legal provisions enacted by the Central and State Governments from time to time in the interest of the public.

Government on Release of Water from Parappalaru Dam for Irrigation

 Statement of the Principal Secretary to Government on release of water from Parappalaru Dam  for irrigation.

செய்தி வெளியீடு எண்‌: 89 

நாள்‌:17.05.2021

செய்தி வெளியீடு

     திண்டுக்கல்‌ மாவட்டம்‌, ஒட்டன்சத்திரம்‌ வட்டம்‌, பரப்பலாறு அணையிலிருந்து 6 குளங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர்‌ திறந்துவிட கோரியுள்ள வேளாண்‌ பெருமக்களின்‌ வேண்டுகோளினை ஏற்று, திண்டுக்கல்‌ மாவட்டம்‌, ஒட்டன்சத்திரம்‌ வட்டத்திலுள்ள 6 குளங்களான, முத்து பூபால சமுத்திரம்‌, பெருமாள்குளம்‌, சடையகுளம்‌, செங்குளம்‌, இராமசமுத்திரம்‌ மற்றும்‌ ஜவ்வாதுபட்டி பெரியகுளம்‌ ஆகியவற்றின்‌ மொத்தம்‌ 1222.85 ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசனம்‌ பெறும்‌ பொருட்டு, 18.5.2021 முதல்‌ 17 நாட்களுக்கு, பரப்பலாறு அணையிலிருந்து மொத்தம்‌ 102.00 மில்லியன்‌ கன அடி தண்ணீர்‌ திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது .

அரசு முதன்மைச்‌ செயலாளர்‌

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9

Government on Release of Water from Palar Porundalar Dam for Irrigation

 Statement of the Principal Secretary to Government on release of water from Palar Porundalar Dam for irrigation.

செய்தி வெளியீடு எண்‌: 88 

நாள்‌:17.05.2021

செய்தி வெளியீடு

திண்டுக்கல்‌ மாவட்டம்‌, பழனி வட்டம்‌, பாலாறு பொருந்தலாறு அணையின்‌ தாடாகுளம்‌ வேளாண்‌ பெருமக்களின்‌ கோரிக்கையினை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம்‌ இரண்டாம்‌ போக பாசனத்திற்கு முழு பாசன பரப்பான 844 ஏக்கருக்கும்‌ பாசன வசதி அளிக்கும்‌ பொருட்டு, 18.5.2021 முதல்‌ 120 நாட்களுக்கு, நாள்‌ ஒன்றுக்கு 20 கன அடி வீதம்‌ 207.36 மில்லியன்‌ கன அடி தண்ணீர்‌ திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.


அரசு முதன்மைச்‌ செயலாளர்‌

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9

Monday, May 17, 2021

Government on Release of Water from Aliyar Dam for Irrigation

Statement of the Principal Secretary to Government on release of water from Aliyar Dam for irrigation.

செய்தி வெளியீடு எண்‌: 87 

நாள்‌:17.05.2021

செய்தி வெளியீடு

            கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, ஆனைமலை வட்டம்‌, எலவக்கரை குளத்து பாசன விவசாயிகளின்‌ கோரிக்கையினை ஏற்று ஆழியார்‌ அணையிலிருந்து எலவக்கரை குளத்தின்‌ கீழ்‌ பாசனம்‌ பெறும்‌ ஆயக்கட்டு நிலங்களுக்கு 18.05.2021 முதல்‌ 11 நாட்களுக்கு நாள்‌ ஒன்றுக்கு 61 கன அடி வீதம்‌ மொத்தம்‌ 57.00 மில்லியன்‌ கன அடி தண்ணீர்‌ திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.



அரசு முதன்மைச்‌ செயலாளர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Goondas Act Against Those Selling Remdesivir and Oxygen Cylinders at Higher Prices

செய்தி வெளியீடு எண்‌: 72 

நாள்‌:15.05.2021

செய்தி வெளியீடு

மக்களின்‌ உயிர்‌ காக்கும்‌ ரெம்டெசிவர்‌ மருந்துகள்‌ மற்றும்‌ ஆக்சிஜன்‌ சிலிண்டர்களைப்‌ பதுக்கியும்‌. மீதும்‌ குண்டர்‌ சட்டத்தின்கீழ்‌ கடும்‌ நடவடிக்கை!

காவல்‌ துறையினருக்கு மாண்புமிகு முதலமைச்சர்‌ உத்தரவு 

       மக்களின்‌ உயிர்‌ காக்கும்‌ பெரும்‌ பொறுப்பை முதன்மை கடமையாகக்‌ கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர்‌ எதிராகச்‌ செயல்படுபவர்களின்‌ போக்கை கடுமையான நடவடிக்கைகளால்‌ கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

        உலகளாவிய அளவிலும்‌, குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும்‌ கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும்‌ நெருக்கடி வளையத்தில்‌ இருந்து தமிழகமும்‌ தப்பிக்கவில்லை. நாள்தோறும்‌ அதிகரித்து வரும்‌ நோய்த்‌ தொற்று எண்ணிக்கையையும்‌, இறப்புகளையும்‌ முழுமையாகக்‌ கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்‌ முழு வீச்சில்‌ முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களுக்கான இந்த அரசு இரவு பகல்‌ பாராது செயல்பட்டு வருகிறது. மேலும்‌ இப்பணியில்‌ அனைவரும்‌ அவரவர்‌ ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்‌ எனக்‌ கேட்டுக்‌ கொண்டதற்கேற்ப, நல்லோர்‌ அனைவரும்‌ தங்கள்‌ ஒத்துழைப்பையும்‌ பங்களிப்பையும்‌ வழங்கி வருகிறார்கள்‌. எளிய மக்கள்கூட தங்கள்‌ அன்றாட வாழ்வாதாரத்தில்‌ ஏற்படும்‌ பாதிப்பைத்‌ தாண்டி, அரசின்‌ உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும்‌ கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின்‌ உயிரைக்‌ காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்‌. அதேநேரத்தில்‌, சில சமூக விரோதிகள்‌ ரெம்டெசிவர்‌ மருந்துகளைப்‌ பதுக்கி, கள்ளச்சந்தையில்‌ மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்‌.


          அதுபோலவே, ஆக்சிஜன்‌ சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர்‌ விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும்‌ வருகின்றன. பேரிடர்‌ காலத்தில்‌ இத்தகைய செயல்களில்‌ ஈடுபடுவது மிகக்‌ கடுமையான குற்றமாகும்‌.

       தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவர்‌ மருந்து விநியோகம்‌, ஆக்சிஜன்‌ உற்பத்தி, படுக்கைகள்‌ எண்ணிக்கை அதிகரித்தல்‌, கட்டுப்பாட்டு மையங்கள்‌ வாயிலாக உடனுக்குடன்‌ சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

         தமிழ்நாட்டில்‌ வாழும்‌ ஒவ்வொருவரின்‌ உயிரின்‌ மீதும்‌ அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும்‌ நிலையில்‌, அதற்கு மாறாக, ரெம்டெசிவர்‌ மருந்துகளை பதுக்குவோர்மீதும்‌, ஆக்சிஜன்‌ சிலிண்டர்களின்‌ விலையை உயர்த்தி விற்பனை செய்வோர்மீதும்‌ குண்டர்‌ சட்டத்தின்கீழ்‌ கடும்‌ நடவடிக்கை எடுக்க காவல்‌ துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9