Friday, June 4, 2021

Aavin Cancels Outlet Permission for Selling High Price

 செய்தி வெளியீடு எண்‌:224

 நாள்‌:04.06.2021

செய்தி வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஆவின்‌ பால்‌ லிட்டர்‌ ரூபாய்‌ 3/- விலை குறைத்து ஆணை பிறப்பித்தார்‌, உத்தரவை மீறி கூடுதலாக விற்பனை செய்த 10 சில்லறை விற்பனையாளர்களின்‌ உரிமத்தை ரத்து செய்ய மாண்புமிகு பால்‌ வளத்துறை அமைச்சர்‌ திரு. சா.மு.நாசர்‌ அவர்கள்‌ உத்தரவு.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ முதலமைச்சராகப்‌ பொறுப்பேற்ற பின்‌ பொதுமக்கள்‌ அணைவரும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 5 முக்கிய அரசாணைகள்‌ பிறப்பித்துள்ளார்கள்‌, அதில்‌ இரண்டாவதாக மக்களின்‌ நலன்‌ கருதி, ஆவின்‌ பால்‌ விலையை லிட்டர்‌ ஒன்றுக்கு மூன்று ரூபாய்‌ வீதம்‌ குறைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைக்கிணங்க மாண்புமிகு பால்‌ வளத்துறை அமைச்சர்‌ திரு. சா.மு.நாசர்‌ அவர்கள்‌ நந்தனம்‌ ஆவின்‌ தலைமை அலுவலகத்தில்‌ 16.05.2021 அன்று துவக்கி வைத்தார்‌.

விற்பனை விலை:-

இந்த அரச க்கு ஏற்ப அனைத்து ஆவின்‌ பார்லர்கள்‌ மற்றும்‌ சில்லறை விற்பனை கடைகளில்‌ லிட்டர்‌ ஒன்றுக்கு மூன்று ரூபாய்‌ குறைத்து, ஆவின்‌ பால்‌ விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து மாண்புமிகு பால்‌ வளத்துறை அமைச்சர்‌ திரு. சா.மு.நாசர்‌ அவர்களின்‌ உத்தரவின்‌ அடிப்படையில்‌, ஆவின்‌ மேலாண்மை இயக்குநர்‌ அவர்களால்‌ உடனடியாக சிறப்பு குழுவை அமைத்து சென்னையில்‌ உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும்‌ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்‌ அடிப்படையில்‌ 21.05.2021 அன்று 11 சில்லறை விற்பனை உரிமங்கள்‌ ரத்து செய்யப்பட்டன.

Click here for More

Friday, May 28, 2021

Schedule for certificate verification of Physician Assistant

 

Click Here For the Document

Certificate Verification schedule for Dialysis Technician Grade - II

Statement of the Honble Chief Minister on Extension of lockdown in Tamil Nadu

செய்தி வெளியீடு எண்‌:173

 நாள்‌:28.05.2021

ஊரடங்கு மேலும்‌ வ ட்டிப்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களது அறிக்கை

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்காக, மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில்‌ 25-3-2020 முதல்‌ தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்கீழ்‌, ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன்‌ அமலில்‌ இருந்து வருகிறது.

இந்நிலையில்‌, கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக்‌ கட்சித்‌ தலைவர்களுடன்‌ நடத்திய ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌, சட்டமன்றக்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ தெரிவித்த கருத்துகளின்‌ அடிப்படையிலும்‌, முன்னதாக மருத்துவ வல்லுநர்கள்‌ மற்றும்‌ மக்கள்‌ பிரதிநிதிகளின்‌ கருத்துகளைக்‌ கேட்டறிந்தும்‌, ஆலோசனை மற்றும்‌ கருத்துகளைப்‌ பரிசீலித்தும்‌, கொரோனா பெருந்தொற்று நோய்ப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல்‌ தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.



இந்த ஊரடங்கு வரும்‌ 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும்‌ நிலையில்‌, நோய்த்‌ தொற்றின்‌ தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும்‌, நோய்த்‌ தொற்று பரவாமல்‌ தடுத்து, மக்களின்‌ விலைமதிப்பற்ற உயிர்களைக்‌ காக்கும்‌ நோக்கத்திலும்‌, இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும்‌ ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்‌.

எனினும்‌, பொதுமக்கள்‌ அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும்‌ நோக்கத்தில்‌, அனைத்து மாவட்டங்களிலும்‌ நடைமுறையில்‌ இருந்துவரும்‌ நடமாடும்‌ காய்கறி / பழங்கள்‌ விற்பனை தொடர்புடைய துறைகள்‌

மூலம்‌ தொடர்ந்து நடைபெறும்‌. மேலும்‌, மளிகைப்‌ பொருட்களை அந்தந்தப்‌ பகுதிகளில்‌ உள்ள மளிகைக்‌ கடைகளால்‌ வாகனங்கள்‌ அல்லது தள்ளுவண்டிகள்‌ மூலம்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ அனுமதியுடன்‌, குடியிருப்புப்‌ பகுதிகளுக்குச்‌ சென்று விற்பனை செய்யவும்‌, ஆன்லைன்‌ மற்றும்‌ தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்‌ கோரும்‌ பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும்‌ காலை 7-00 மணி முதல்‌ மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர, பொது மக்களின்‌ சிரமத்தை குறைக்கும்‌ வகையில்‌, 13 மளிகைப்‌ பொருட்கள்‌ அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌, வரும்‌ ஜூன்‌ மாதம்‌ முதல்‌ வழங்கிட, கூட்டுறவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்‌.

கொரோனா நோய்த்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்த, பொது மக்களின்‌ நலன்‌ கருதி தமிழ்நாட்டில்‌ முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்‌, பொது மக்கள்‌ அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில்‌ வருவதையும்‌ கூட்டங்களையும்‌ தவிர்க்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.

மேலும்‌, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில்‌ குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில்‌ முகக்‌ கவசம்‌ அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்வது ஆகியவற்றை கட்டாயம்‌ பின்பற்றவும்‌, நோய்த்தொற்று அறிகுறிகள்‌ தென்பட்டவுடன்‌, பொதுமக்கள்‌ உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

மக்கள்‌ அனைவரும்‌ அரசின்‌ முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Text of the intended remarks of Honble Minister for Finance during the 43rd GST Council meeting

 As per instructions of the Honble Chief Minister, Honble Minister for Finance and Human Resources Management attended the 43rd GST Council Meeting through Video Conference and delivered address 

செய்தி வெளியீடு எண்‌:177 

 நாள்‌:28.05.2021

[29.5.2021 அன்று காணொளி காட்சி மூலம்‌ நடைபெற்ற 43வது சரக்குகள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரி மன்ற கூட்டத்தில்‌ மாண்புமிகு நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்‌ முனைவர்‌. பழனிவேல்‌ தியாகராஜன்‌ அவர்களின்‌ உரையில்‌ உத்தேசிக்கப்பட்ட கருத்துக்கள்‌]

மதிப்பிற்குரிய மாண்புமிகு மத்திய நிதியமைச்சர்‌ மற்றும்‌ சரக்கு மற்றும்‌ சேவை வரி (ஜி.எஸ்‌.டி.) மன்றத்தின்‌ தலைவர்‌ அவர்களுக்கும்‌, ஜி.எஸ்‌.டி. மன்றத்தின்‌ மாண்புமிகு உறுப்பினர்கள்‌ அனைவருக்கும்‌, பிற மதிப்புமிக்க சிறப்பு அழைப்பாளர்கள்‌. மரியாதைக்குரிய தலைவர்‌ அம்மையார்‌ அவர்களே,



முதலாவதாக, இந்த மாமன்றத்தில்‌ தமிழ்நாடு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில்‌ நான்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌. எனது மாநிலத்தின்‌ சார்பாக பங்கேற்பதற்கு என்னைப்‌ பரிந்துரைத்த தமிழக அரசுக்கு எனது நன்றியைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இந்தக்‌ குழுவில்‌ நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில்‌ பங்களிப்பை வழங்கிடவும்‌, இந்த மன்றத்தின்‌ பரிசீலனையில்‌ உள்ள பல்வேறு விஷயங்களில்‌ தமிழக அரசின்‌ கருத்துகளை முன்வைக்கவும்‌ நான்‌ ஆவலுடன்‌ காத்திருக்கிறேன்‌.

Click Here For Full Statements in Tamil

Click Here For Full Statements in English

Thursday, May 27, 2021

Meeting for Regularizing Online Classes for School and College Students

 செய்தி வெளியீடு எண்‌:160 

 நாள்‌:26.05.2021

செய்தி வெளியீடு

பள்ளி, கல்லூரிகளில்‌ ஆன்லைன்‌ வகுப்புகள்‌ முறையாக நடைபெறுவதை கண்காணிப்ப து மாண்புமி லமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌.

     கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும்‌ கல்வி நிறுவனங்கள்‌ மூடப்பட்டு வகுப்புகள்‌ இணைய வழியாக (online) கடந்த சுமார்‌ ஒராண்டாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளின்‌ செயல்பாடுகள்‌ குறித்து சமீபத்தில்‌ வரப்பெற்ற சில செய்திகளின்‌ தன்மையைக்‌ கருத்தில்‌ கொண்டு இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும்‌ அதில்‌ தவறுகள்‌ நடக்கும்‌ பட்சத்தில்‌ அதன்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும்‌ ஆலோசனை செய்வதற்கு மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று தலைமைச்‌ செயலகத்தில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


      சமீபத்தில்‌ இணைய வகுப்பு ஒன்றில்‌ நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள்‌ குறித்தும்‌ அதன்‌ மீது மேற்கொள்ளப்பட்டு வரும்‌ நடவடிக்கை குறித்தும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆய்வு செய்தார்கள்‌. இதுபோன்ற சம்பவங்கள்‌ மீண்டும்‌ நடைபெறக்‌ கூடாது என்றும்‌ சட்டபூர்வமான நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள்‌ மீது எடுக்கப்படும்‌ என்றும்‌ மற்ற பள்ளி கல்லூரிகளில்‌ இதுபோன்ற நிகழ்வுகள்‌ நடக்காமல்‌ இருப்பதற்கு பின்வரும்‌ முடிவுகளையும்‌, உத்தரவுகளையும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவித்துள்ளார்கள்‌.

  • இணைய வழியாக நடத்தப்படும்‌ வகுப்புகள்‌ அந்தந்த பள்ளியினால்‌ பதிவு (record) செய்யப்பட வேண்டும்‌ என்றும்‌ இப்பதிவினை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம்‌ மற்றும்‌ பெற்றோர்‌ ஆசிரியர்‌ சங்கப்‌ பிரதிநிதிகள்‌ இருவரைக்‌ கொண்ட குழுவால்‌ அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும்‌;
  • இணைய வழி வகுப்புகள்‌ நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக்‌ கல்வித்‌ துறை ஆணையர்‌, கல்லூரி கல்வி இயக்குநர்‌, கணினி குற்றத்‌ தடுப்பு பிரிவு மற்றும்‌ பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்‌ தொடர்பான காவல்‌ அலுவலர்கள்‌, கல்வியாளர்கள்‌ மற்றும்‌ உளவியல்‌ நிபுணர்கள்‌ கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்‌ என்றும்‌, அக்குழு, மாநிலத்திலுள்ள பள்ளிகள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களில்‌ பாலியல்‌ தொல்லைகள்‌ தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும்‌ இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும்‌ வழிகாட்டு நெறிமுறையினை ஒரு வார காலத்திற்குள்‌ சமர்ப்பிக்க வேண்டுமென்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.
  • இணைய வகுப்புகளில்‌ முறையற்ற வகையில்‌ நடந்துகொள்வோர்‌ மீது “போக்சோ” சட்டத்தின்‌ கீழ்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ எனவும்‌ மாணவ, மாணவிகள்‌ தங்கள்‌ புகார்களைத்‌ தெரிவிக்க ஒரு Helpline எண்‌ உருவாக்கவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.
  • மேலும்‌, இணைய வகுப்புகள்‌ குறித்து வரும்‌ புகார்களை மாநிலத்தின்‌ கணினி குற்றத்‌ தடுப்புக்‌ (Cyber Crime) காவல்‌ பிரிவில்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ நிலையில்‌ உள்ள அலுவலர்‌ உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும்‌ ஏற்படாத வகையில்‌ விசாரித்து துரிதமான நடவடிக்கைகள்‌ எடுக்க வேண்டுமெனவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டார்கள்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9