Wednesday, June 16, 2021

CM Handed Over Financial Assistance to the Children Who Have Lost Their Parents to COVID-19

செய்தி வெளியீடு எண்‌:279
 நாள்‌: 16.06.2021
              
செய்தி வெளியீடு

Honble Chief Minister handed over financial assistance to the children who have lost their parents to COVID-19

      மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ கொரோனா நோய்த்‌ தொற்றால்‌ பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கினார்கள்‌.

      தமிழகத்தில்‌ கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும்‌ குழந்தைகளின்‌ எதிர்காலத்தை பாதுகாத்திடும்‌ வகையில்‌, அந்த குழந்தைகளுக்கு தலா 5 இலட்சம்‌ ரூபாய்‌ வைப்பீடு, கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ தாய்‌ அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும்‌ தந்‌ைத அல்லது தாய்க்கு 3 இலட்சம்‌ ரூபாய்‌ நிவாரணத்‌ தொகை, கொரோனா தொற்றால்‌ பெற்றோர்களை இழந்து உறவினர்‌ / பாதுகாவலரின்‌ ஆதரவில்‌ வளரும்‌ குழந்தைகளின்‌ பராமரிப்புச்‌ செலவாக மாதந்தோறும்‌ தலா 3 ஆயிரம்‌ ரூபாய்‌ உதவித்‌ தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள்‌ மற்றும்‌ விடுதிகளில்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ தங்குவதற்கு இடம்‌, இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக்‌ கட்டணம்‌ மற்றும்‌ விடுதிக்‌ கட்டணம்‌ உள்ளிட்ட அனைத்தையும்‌ அரசே ஏற்றுக்‌ கொள்ளும்‌ என்பது போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ 29.5.2021 அன்று அறிவித்தார்கள்‌.




     அந்த அறிவிப்புகளை செயல்படுத்திட சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறையால்‌ அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளுடன்‌ அரசாணை வெளியிடப்பட்டது.

    அவற்றில்‌ முக்கியமான நிவாரண உதவிகளான கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும்‌ குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில்‌ தலா 5 இலட்சம்‌ ரூபாய்‌ வைப்பீடு செய்து, அக்குழந்தை 18 வயது நிறைவடையும்‌ போது, அந்தத்‌ தொகையை அக்குழந்தைக்கு வட்டியோடு வழங்கும்‌ வகையில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (16.6.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌, 5 குழந்தைகளுக்கு அவர்களது பெயரில்‌ தலா 5 இலட்சம்‌ ரூபாய்‌ தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும்‌ அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்‌ (Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited) வைப்பீடு செய்தமைக்கான சான்றிதழ்களை, அக்குழந்தைகளின்‌ பாதுகாவலர்களிடம்‌ வழங்கினார்கள்‌.

     மேலும்‌, கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ தாய்‌ அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும்‌ தந்‌ைத அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத்‌ தொகையாக 3 இலட்சம்‌ ரூபாய்‌ வழங்கிடும்‌ வகையில்‌, பெற்றோர்களில்‌ ஒருவரை இழந்து தவிக்கும்‌ 5 குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின்‌ தந்‌ைத / தாய்க்கு உடனடி நிவாரணத்‌ தொகையாக தலா 3 இலட்சம்‌ ரூபாய்க்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

    இந்நிகழ்வின்போது, மாண்புமிகு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை அமைச்சர்‌ திருமதி பி. கீதா ஜீவன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ. இறையன்பு, இ.ஆ.ப., சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திரு.ஷம்பு கல்லோலிகர்‌, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை செயலாளர்‌ மற்றும்‌ சமூக பாதுகாப்புத்‌ துறை ஆணையர்‌ திரு.ஆர்‌. லால்வேனா, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

CM Visited Fair Price Shops and Inspected

 செய்தி வெளியீடு எண்‌:281

 நாள்‌: 16.06.2021

செய்தி வெளியீடு

Honble Chief Minister visited Fair Price shops and inspected the handing over of the 2nd instalment of Corona Relief and supply of essential commodities to the Rice Card Holders

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (16.6.202] சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனம்‌ மற்றும்‌ லாயிட்ஸ்‌ காலனியில்‌ அமைந்துள்ள 4 நியாய விலைக்‌ கடைகள்‌, என மொத்தம்‌ 6 நியாய விலைக்‌ கடைகளுக்கு நேரில்‌ சென்று, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்‌ தொகை இரண்டாம்‌ தவணையாக 2000 ரூபாய்‌ மற்றும்‌ 14 அத்தியாவசிய மளிகைப்‌ பொருட்கள்‌ வழங்கும்‌ பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்‌. நியாய விலைக்‌ கடை ஊழியர்கள்‌ பொதுமக்களுக்கு காலதாமதமின்றி பொருட்களை வழங்கி, சிறப்பாக பணியாற்ற வேண்டும்‌ என்று அறிவுறுத்தினார்கள்‌.


நியாய விலைக்‌ கடைகளில்‌ ரேஷன்‌ பொருட்கள்‌ தங்குதடையில்லாமல்‌ கிடைக்கிறதா என்பது குறித்து பொதுமக்களிடம்‌ கேட்டறிந்தார்‌. அதனைத்‌ தொடர்ந்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்‌ தொகை இரண்டாம்‌ தவணையாக 2 ஆயிரம்‌ ரூபாய்‌ மற்றும்‌ 14 அத்தியாவசிய மளிகைப்‌ பொருட்கள்‌ அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்‌.

இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள்‌ உடனிருந்தார்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Friday, June 11, 2021

CM has Formed Committee to Examine Impact of NEET

 Honble Chief Minister has formed a committee headed by retired Justice Thiru A K Rajan to examine impact of NEET on socially deprived aspirants.

செய்தி வெளியீடு எண்‌:256 நாள்‌: 10.06.2021

செய்தி வெளியீடு

     தமிழ்நாட்டில்‌ மருத்துவ மாணவர்‌ சேர்க்கையில்‌ நீட்‌ தேர்வின்‌ தாக்கம்‌ குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர்‌ திரு. ஏ.கே. இராஜன்‌ தலைமையில்‌ உயர்நிலைக்‌ குழு அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஆணை

     மருத்துவ மாணவர்‌ சேர்க்கையில்‌ நீட்‌ தேர்வு முறையானது சமுதாயத்தின்‌ பின்தங்கிய நிலையில்‌ உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும்‌, அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள்‌ ஏற்பட்டிருந்தால்‌, அவற்றை சரி செய்யும்‌ வகையில்‌, இம்முறைக்கு மாற்றாக அனைவரும்‌ பயன்பெறத்தக்க வகையிலான மாணவர்‌ சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்‌ பற்றியும்‌, அவற்றிற்கான சட்ட வழிமுறைகள்‌ பற்றியும்‌ முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப்‌ பரிந்துரைகளை அளித்திட ஒய்வு பெற்ற நீதியரசர்‌ திரு. ஏ.கே. இராஜன்‌ அவர்கள்‌ தலைமையில்‌, கல்வியாளர்கள்‌ மற்றும்‌ சம்பந்தப்பட்ட அலுவலர்கள்‌ அடங்கிய உயர்நிலைக்‌ குழு ஒன்று அமைக்கப்படும்‌ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்‌.

    இந்த அறிவிப்பின்படி, ஒய்வு பெற்ற நீதியரசர்‌ திரு. ஏ.கே. இராஜன்‌ அவர்கள்‌ தலைமையில்‌, கீழ்க்காணும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்ட குழுவினை அமைத்து மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இன்று (10-6-2021) உத்தரவிட்டுள்ளார்கள்‌ :


     இந்தக்‌ குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின்‌ நலனைப்‌ பாதுகாத்திடத்‌ தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள்‌ அரசுக்கு அளிக்கும்‌. இந்தப்‌ பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

CM Inspected the Extension,Renovation and Restoration Work in Progress at Kallanai

     Honble Chief Minister inspected the extension, renovation and restoration work in progress at Kallanai, Thanjavur District, chaired a review meeting and seen the photography exhibition arranged on the desilting works in progress.



Statement on Sale and Reissue of Stock from Finance (Ways and Means - II) Department

 செய்தி வெளியீடு எண்‌:257

 நாள்‌:10.06.2021

நிதி (வழிவகைகள்‌-11)த்‌ துறை,

செய்தி வெளியீடு

    தமிழ்நாடு அரசு ரூபாய்‌ 1000.00 கோடி மதிப்புள்ள பங்குகள்‌ வடிவிலான 4 ஆண்டுகால பிணையப்‌ பத்திரங்கள்‌ மற்றும்‌ மறுவெளியீட்டின்‌ வாயிலாக ரூ.1000.00 கோடி மதிப்புள்ள 6.96 சதவீத தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்‌ கடன்‌ 2056 ஏலத்தின்‌ மூலம்‌ விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம்‌ இந்திய ரிசர்வ்‌ வங்கியால்‌, மும்பையில்‌ உள்ள அதன்‌ மும்பை கோட்டை அலுவலகத்தில்‌ ஜூன்‌ 15, 2021 அன்று நடத்தப்படும்‌. போட்டி ஏலக்‌ கேட்புகள்‌ முற்பகல்‌ 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும்‌ போட்டியற்ற ஏலக்‌ கேட்புகள்‌ முற்பகல்‌ 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும்‌ இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில்‌ [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில்‌ (Electronic format) ஜூன்‌ 15, 2021 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.



   Government of Tamil Nadu has announced the sale of 4 year securities for Rs.1000.00 crore and Re-issue of 6.96% Tamil Nadu State Development Loan 2056 for Rs.1000.00 crore in the form of Stock to the Public by auction. The auction will be conducted by the Reserve Bank of India at its Mumbai Office, Fort, Mumbai, on June 15, 2021. Competitive bids between 10.30 A.M. and 11.30 A.M. and non-competitive bids between 10.30 A.M. and 11.00 A.M. shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System on June 15, 2021.

 அரசு கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌

நிதித்துறை, சென்னை-9.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9