செய்தி வெளியீடு எண்:281
நாள்: 16.06.2021
செய்தி வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.6.202] சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனம் மற்றும் லாயிட்ஸ் காலனியில் அமைந்துள்ள 4 நியாய விலைக் கடைகள், என மொத்தம் 6 நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். நியாய விலைக் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி பொருட்களை வழங்கி, சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் தங்குதடையில்லாமல் கிடைக்கிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடனிருந்தார்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
No comments :
Post a Comment