Thursday, June 10, 2021

Honble Minister for Rural Development chaired a meeting on providing loan facilities for Self Help Groups

 செய்தி வெளியீடு:249

 நாள்‌ 08.06.2021

Honble Minister for Rural Development chaired a meeting on providing loan facilities for Self Help Groups 

      மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு. கே.ஆர்‌. பெரியகருப்பன்‌ அவர்களின்‌ தலைமையில்‌ சுய உதவிக்‌ குழுக்களுக்கு வங்கிக்‌ கடன்‌ இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில்‌ நுண்நிதி நிறுவனங்கள்‌ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு. கேஆர்‌. பெரியகருப்பன்‌ அவர்களின்‌ தலைமையில்‌, சுய உதவிக்‌ குழுக்களுக்கு வங்கிக்‌ கடன்‌ இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில்‌ நுண்நிதி நிறுவனங்கள்‌ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து, மகளிர்‌ திட்ட அலுவலர்கள்‌, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள்‌ மற்றும்‌ மண்டல மேலாளர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று (08.06.2021) சென்னை, நுங்கம்பாக்கம்‌, அன்னை தெரசா மகளிர்‌ வளாக கூட்டரங்கில்‌ நடைபெற்றது.

      தமிழகத்தில்‌ உள்ள மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ மற்றும்‌ பெண்களுக்கு குறு நிதி நிறுவனங்கள்‌ கடன்‌ வழங்குவதிலும்‌, கடனை திரும்ப வசூலிப்பதிலும்‌ எழுந்துள்ள சிக்கல்கள்‌ குறித்த விபரங்கள்‌ அரசின்‌ கவனத்திற்கு வந்ததால்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 19.05.2021 அன்று மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ அவர்களுக்கும்‌, இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ ஆளுநருக்கும்‌ கடிதம்‌ வாயிலாக சுய உதவிக்‌ குழுக்களுக்கு கடன்‌ வழங்குவதிலும்‌, சுய உதவிக்‌ குழுக்கள்‌ கடனை திரும்பச்‌ செலுத்துவதிலும்‌ சலுகைகள்‌ வழங்குமாறு கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

     மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி, 13.05.2021 அன்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடனும்‌, 21.05.2021 அன்று நுண்நிதி நிறுவனங்களுடனும்‌, 25.05.2021 அன்று சிறு கடன்‌ வழங்கும்‌ வங்கிகளுடனும்‌ மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ காணொலி மூலம்‌ கலந்துரையாடல்‌ மேற்கொண்டார்‌.

      இந்நிலையில்‌, சுய உதவிக்‌ குழுக்களிடம்‌ நுண்நிதி நிறுவனங்கள்‌ கடன்‌ வசூலிப்பதில்‌ கடுமையான போக்கினை கையாளுகின்றன என்ற விபரம்‌ அரசின்‌ கவனத்திற்கு வந்துள்ளதைத்‌ தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தல்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு. கேஆர்‌. பெரியகருப்பன்‌ அவர்கள்‌, இன்று (08.06.2021) சுய உதவிக்‌ குழு உறுப்பினர்களின்‌ பிரச்சனைகளை காணொலி வாயிலாக கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்‌.

>>Click Here For More


No comments :

Post a Comment