Statement From the Honble Minister for Commercial Taxes and Registration
செய்தி வெளியீடு எண்:243
நாள்:07.06.2021
செய்தி வெளியீடு
வணிகத்தில் ஈரூபடாத: சில அமைப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் வரி செலுத்தும் நபராக பதிவு செய்து அதன் மூலம் சரக்கு அல்லது சேவைகளை வழங்காமல், போலிப் பட்டியல்கள் மூலம் பயனாளருக்கு மோசடியாக உள்ளீட்ரு வரி வரவை மாற்றுவது தமிழ்நாரு வணிகவரித் துறைக்கு தெரிய வருகிறது.
இந்த பயனாளர்கள் இது போன்ற மாயையான பரிவர்த்தனைகளில் உள்ளீட்ரு வரி வரவு எருப்பதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பருத்தி வருகின்றனர்.
போலிப் பட்டியல்கள் வழங்குதல், போலிப் பட்டியலகள் வழங்குவதற்கு எவ்வகையிலேனும் உடந்தையாக இருத்தல் மற்றும் போலிப் பட்டியல்கள் மீது உள்ளீட்ரு வரி வரவு எருத்தல் ஆகியவை தமிழ்நாரு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், 2017-ன்படி அதிக பட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும். மேலும் மோசடியாக பெறப்பட்ட உள்ளீட்ரு வரி வரவு, அதற்குண்டான வட்டி மற்றும் அபராதத் தொகையுடன் வசூலிக்கப்பரும்.
எனவே மேலே கூறப்பட்ட குற்றங்களில் ஈருபரும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழ்நாரு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், 2017-ன்படி கரும் நடவடிக்கை எருக்கப்பரும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இது போன்ற தவறுகளை கண்காணிக்கத் தவறும் வணிகவரித் துறை அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எருக்கப்பரும் எனவும் மாண்புமிகு அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்ருள்ளது.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
No comments :
Post a Comment