Monday, June 28, 2021

The land owned by Arulmighu Anandavalli sametha Agastheeswarar Temple, Chromepet was Retrieved

செய்தி வெளியீடு எண்‌: 341

 நாள்‌: 28.06.2021

 The land owned by Arulmighu Anandavalli sametha Agastheeswarar Temple, Chromepet was retrieved in the presence of the Honble Minister for Hindu Religious and Charitable Endowments and the Honble Minister for Rural Industries.

       மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி, செங்கல்பட்டு மாவட்டம்‌, குரோம்பேட்டை அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர்‌ திருக்கோயிலுக்குச்‌ சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள்‌ மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்‌ திரு. பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு ஊரக தொழில்‌ துறை அமைச்சர்‌ திரு.த.மோ.அன்பரசன்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ அகற்றப்பட்டன.


    செங்கல்பட்டு மாவட்டம்‌, பல்லாவரம்‌ வட்டத்திற்கு உட்பட்ட குரோம்பேட்டை, நெமிலிச்சேரி அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர்‌ திருக்கோயிலுக்குச்‌ சொந்தமான நிலம்‌ புல எண்‌ 5/2 - 1.49 ஏக்கர்‌ மற்றும்‌ புல எண்‌. 63 - 0.58 ஏக்கர்‌ என மொத்தம்‌ ரூ.15 கோடி மதிப்புள்ள 2.02 ஏக்கர்‌ நிலத்தில்‌ பல வருடங்களாக 11 நபர்களால்‌ வணிக நோக்கத்தில்‌ ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுடிருந்தது. கடந்த 2017 ம்‌ ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன்‌ கீழ்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2018-ம்‌ ஆண்டு வெளியேற்று உத்தரவு பிறப்பிக்கபட்டது. அதன்‌ தொடர்ச்சியாக, மேற்படி நிலத்தில்‌ உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற சென்னை மாண்புமிகு உயர்நீதி மன்றம்‌, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌ மற்றும்‌ இணை ஆணையரின்‌ உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று (28.06.2021) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்‌ திரு.பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு ஊரக தொழில்‌ துறை அமைச்சர்‌ திரு.த.மோ.அன்பரசன்‌, பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.இ.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌ திரு. ஜெ. குமரகுருபரன்‌, இ.ஆ.ப. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ திரு.ஆ.ர.ராகுல்நாத்‌ இ.ஆ.ப., ஆகியோர்‌ முன்னிலையில்‌ ஆக்கிரமிப்புகள்‌ அகற்றப்பட்டன.


இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம்‌ மண்டல இணை ஆணையர்‌ திரு. ஜெயராமன்‌, செங்கல்பட்டு உதவி ஆணையர்‌ திருமதி கவேனிதா, திருக்கோயில்‌ செயல்‌ அலுவலர்‌ திரு.சக்தி மற்றும்‌ பணியாளர்கள்‌ ரூ.15 கோடி மதிப்புள்ள 2.02 ஏக்கர்‌ பரப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை திருக்கோயில்‌ வசம்‌ கொண்டுவந்தனர்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

No comments :

Post a Comment