Monday, June 28, 2021

Rural Development Minister chaired a review meeting of District Rural Development Agencies through Video Conference.

செய்தி வெளியீடு எண்‌:332 

நாள்‌:26.06.2021

செய்தி வெளியீடு

ஊரகப்‌ பகுதிகளில்‌ குடிநீர்‌, தெருவிளக்குகள்‌, சுகாதாரம்‌ மற்றும்‌ அடிப்படை வசதிகளை சிறப்பாக செயல்படுத்த மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ ஆய்வின்போது அறிவுறுத்தல்‌.

Honble Minister for Rural Development chaired a review meeting of District Rural Development Agencies through Video Conference.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ (25.6.2021 அன்று தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களின்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும்‌ ஊராட்சிகள்‌ மேம்பாடு சார்ந்த பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து காணொலி வாயிலாக கூடுதல்‌ ஆட்சியர்கள்‌(வளர்ச்சி) / திட்ட இயக்குநர்கள்‌, உதவி இயக்குநர்கள்‌(ஊராட்சி) மற்றும்‌ அனைத்து அலுவலர்களிடமும்‌ சென்னை - சைதாப்பேட்டை பனகல்‌ மாளிகையில்‌ அமைந்துள்ள ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அலுவலகத்தில்‌ ஆய்வு செய்தார்‌.

ஊரகப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்களுக்குத்‌ தேவையான குடிநீர்‌, தெருவிளக்குகள்‌, சுகாதாரம்‌, துப்புரவு பணிகள்‌ போன்ற அடிப்படைப்‌ பணிகளில்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்தி, அப்பணிகளை 100 சதவீதம்‌ சிறப்புடன்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்று ஆய்வின்போது அலுவலர்களுக்கு மாண்புமிகு அமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுரைகள்‌ வழங்கினார்‌.

கடந்தாண்டுகளில்‌ எடுக்கப்பட்டு இன்னும்‌ முடிக்கப்படாமல்‌ நிலுவையில்‌ உள்ள தொகுப்பு வீடுகள்‌, சாலைப்‌ பணிகள்‌, குடிநீர்‌ இணைப்புப்‌ பணிகள்‌, கழிப்பறை கட்டும்‌ பணிகள்‌ உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்‌ அவர்கள்‌ இப்பணிகளை விரைவுபடுத்தி முடிக்கவேண்டும்‌ என அறிவுரைகள்‌ வழங்கினார்‌. குறிப்பாக, பிரதம மந்திரி வீடுகள்‌ கட்டும்‌ திட்டத்தில்‌ 2016-17ம்‌ ஆண்டு முதல்‌ 2019-20ம்‌ ஆண்டு வரை மொத்தம்‌ 2,15,752 வீடுகள்‌ இன்னும்‌ நிலுவையில்‌ உள்ளதை ஆய்வு செய்த அமைச்சர்‌ அதை விரைவாக முடிக்க வேண்டும்‌ என்று அறிவுரைகள்‌ வழங்கினார்‌.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்கீழ்‌ இன்றைய நிலவரப்படி 13 இலட்சம்‌ தொழிலாளர்கள்‌ பணியில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌. இது ஒரு குறிப்பிடத்‌ தகுந்த சாதனையாகும்‌. ஏனெனில்‌, கோவிட்‌-19 பெருந்தொற்று காரணமாக கடந்த மே மாதம்‌ இறுதியில்‌ 3.25 இலட்சம்‌ தொழிலாளர்களே இப்பணியில்‌ ஈடுபட்டிருந்தனர்‌. தற்போது தமிழக அரசின்‌ தீவிர முயற்சியின்‌ காரணமாக கொரோனா தொற்று பெருமளவில்‌ குறைந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ பணிசெய்யும்‌ தொழிலாளர்களின்‌ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைப்‌ பாராட்டிய அமைச்சர்‌ அவர்கள்‌, இது மேலும்‌ உயர வேண்டும்‌ என்று அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்கினார்கள்‌.

அதுபோலவே, ஜல்‌ ஜீவன்‌ மிஷன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2020-21ஆம்‌ ஆண்டில்‌ எடுக்கப்பட்ட குடிநீர்‌ பணிகள்‌ விரைவுபடுத்தப்பட்டு மக்களுக்கு குடிநீர்‌ வழங்கவும்‌ அறிவுரைகள்‌ வழங்கினார்‌. சாலைப்‌ பணிகளில்‌ பிரதம மந்திரி கிராம சாலைகள்‌ திட்டத்தில்‌ 2016-17ஆம்‌ ஆண்டிலிருந்து 2020-21 வரை எடுக்கப்பட்டு இன்னும்‌ நிலுவையில்‌ உள்ள சாலைப்‌ பணிகளைக்‌ குறிப்பிட்ட அமைச்சர்‌ அவர்கள்‌ அப்பணிகளை முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர செயல்திட்டம்‌ தீட்டவும்‌ அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்கினார்‌. அதுபோல நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி மற்றும்‌ தமிழ்நாடு ஊரகச்‌ சாலைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்கீழ்‌ நிலுவையிலுள்ள பணிகளையும்‌, தூய்மை பாரத இயக்கத்தின்கீழ்‌ நிலுவையிலுள்ள தனிநபர்‌ கழிப்பறைகள்‌ கட்டுதல்‌, சமுதாய சுகாதார வளாகங்கள்‌, நுண்உர உற்பத்தி மையங்கள்‌ ஆகிய பணிகளையும்‌ விரைந்து முடிக்க அறிவுரைகள்‌ வழங்கினார்‌.

மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைப்படி, பிற துறைகள்‌ ஒருங்கிணைப்பு மூலமாக ஊரகப்‌ பகுதிகளின்‌ முழுமையான வளர்ச்சிக்கு ஊரக வளர்ச்சித்‌ துறை அலுவர்கள்‌ வழி காணவேண்டும்‌ என அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌. ஊரக வளர்ச்சித்‌ துறையில்‌ உள்ள பணிகளுடன்‌ விவசாயம்‌, கால்நடை, தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, சமூகநலம்‌, ஆவின்‌ போன்ற பிற துறைப்‌ பணிகளையும்‌ ஒருங்கிணைத்து செய்யும்போது கிராமங்கள்‌ விரைவான வளர்ச்சியும்‌, தன்னிறைவும்‌ பெறும்‌ என அமைச்சர்‌ அவர்கள்‌ அனைத்து அலுவலர்களுக்கும்‌ அறிவுரைகள்‌ வழங்கினார்‌.

மாண்புமிகு அமைச்சர்‌ அவர்களின்‌ இக்காணொலி ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ (6 கோபால்‌,இஆப., ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை இயக்குநர்‌ திரு பிரவீன்‌ 1. நாயர்‌, இஆப., மற்றும்‌ அரசு உயரதிகாரிகள்‌ பங்கேற்றனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

No comments :

Post a Comment