Sunday, July 11, 2021

CM Received CMPRF from Thiru Vijayakanth at his Residence

Honble Chief Minister visited Thiru Vijayakanth, General Secretary, DMDK at his residence and received the donation he offered for CMPRF towards Corona Relief works.



TN Minister for Rural Industries inspected the Craft Tourism Village

 மாமல்லபுரத்தில்‌ ரூ.1.80 கோடி மதிப்பில்‌ நிறைவேற்றப்படும்‌ கைவினை சுற்றுலாக்‌ கிராமத்தினை மாண்புமிகு ஊரகத்‌ தொழில்துறை அமைச்சர்‌ திரு. தா.மோ.அன்பரசன்‌ ஆய்வு.

 Honble Minister for Rural Industries inspected the Craft Tourism Village planned at Mamallapuram by the Tamil Nadu Handicrafts Development Corporation (TNHDC) 

பூம்புகார்‌ என்று அழைக்கப்படும்‌ தமிழ்நாடு கைத்திறத்‌ தொழில்கள்‌ வளர்ச்சிக்‌ கழகம்‌, தமிழகக்‌ கைவினைஞர்களின்‌ திறமை மற்றும்‌ உழைப்பினால்‌ தயாரிக்கப்படும்‌ பித்தளை, பஞ்சலோகம்‌, மரம்‌ மற்றும்‌ கற்களால்‌ ஆன கைவினைப்பொருட்களின்‌ விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காகச்‌ செயல்பட்டு வருகிறது.


இக்கழகத்தின்‌ மூலம்‌ ஒன்றிய மற்றும்‌ மாநில அரசின்‌ நிதியுதவியினைக்‌ கொண்டு ரூ. 5 கோடி மதிப்பீட்டில்‌ புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நகர்ப்புறக்‌ கண்காட்சித்திலை மாண்புமிகு ஊரகத்‌ தொழில்துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. இத்திடலில்‌ கைவினைக்‌ கலைஞர்களின்‌ விற்பனையை ஊக்கப்படுத்த 36 அரங்குகளும்‌, பொதுமக்களுக்காக உணவுக்கூடங்கள்‌, ஓய்வு அறை, காட்சி அரங்கம்‌, குழந்தைகள்‌ பூங்கா, கைவினைஞர்கள்‌ தங்குமிடம்‌ மற்றும்‌ வாகன நிறுத்துமிடம்‌ ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்திற்கு வருகை தரும்‌ சுற்றுலாப்‌ பயணிகளையும்‌, கைவினைஞர்களையும்‌ இணைக்கும்‌ வகையில்‌ ரூ.5.61 கோடி செலவில்‌ “கைவினை சுற்றுலாக்‌ கிராமம்‌” எனும்‌ திட்டம்‌ வகுக்கப்பட்டது. இதில்‌ முதல்‌ கட்டமாக ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, காரணைக்‌ கிராமத்தில்‌ வசிக்கும்‌ கைவினைஞர்களின்‌ குடியிருப்புகளை அழகுபடுத்துதல்‌, ஐந்துரத வீதியில்‌ அமைந்துள்ள கைவினைஞர்களின்‌ உற்பத்தி நிலையங்களைப்‌ புதுப்பித்தல்‌, மாமல்லபுர நுழைவு வாயிலில்‌ கலைநயத்துடன்‌ அமைக்கப்பட்டுவரும்‌ ஸ்தூபி பணிகள்‌ ஆகியவற்றை மாண்புமிகு ஊரகத்‌ தொழில்துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. ஆய்வுக்குப்பின்‌ அரசு அலுவலர்களுடன்‌ ஆலோசனை மேற்கொண்ட மாண்புமிகு அமைச்சர்‌ அவர்கள்‌, மேற்கொள்ளப்படும்‌ பணிகள்‌ உயர்தரத்துடனும்‌, கலைநயத்துடனும்‌, வெளிநாட்டுச்‌ சுற்றுலாப்‌ பயணிகளைக்‌ கவரும்‌ வகையிலும்‌, மாமல்லபுரச்‌ சிறப்பினை உலகுக்கு எடுத்துரைக்கும்‌ வகையிலும்‌ சிறப்பான முறையில்‌ மேற்கொள்ள அறிவுறுத்தினார்‌.

இவ்வாய்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு.ஜி.செல்வம்‌, தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள்‌ வளர்ச்சிக்‌ கழகத்தின்‌ மேலாண்‌ இயக்குநர்‌ திருமதி. ஷோபனா, இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.பாலாஜி மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.


Thursday, July 8, 2021

CM Announced Cash Incentive for Olympic Sportsmen

 ஜப்பான்‌ டோக்கியோவில்‌ நடைபெறவுள்ள ஒலிம்பிக்‌ போட்டிகளில்‌ பங்கேற்கும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த தடகள வீரர்களுக்கு ஊக்கத்‌ தொகை - மாண்புமிகு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அறிவிப்பு.

Honble Chief Minister has announced cash incentive for Sportsmen from Tamil Nadu who are participating in the Olympics, Japan.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விளையாட்டில்‌ ஆர்வத்தைப்‌ பெருக்கவும்‌ அவர்கள்‌ தேசிய மற்றும்‌ சர்வதேசப்‌ போட்டிகளில்‌ பங்குகொள்ளவும்‌ அரசு தேவையான பயிற்சிகளையும்‌, ஊக்கத்தொகைகளையும்‌ தொடர்ந்து வழங்கி வருகிறது.

அந்த வகையில்‌, ஜப்பான்‌ டோக்கியோவில்‌ 23.7.2021 முதல்‌ 8.8.2021 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக்‌ போட்டிகளில்‌ தடகள விளையாட்டில்‌ 4 % 400 மீட்டர்‌ தொடர்‌ ஓட்டத்தில்‌ ஆண்கள்‌ பிரிவில்‌ பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த திரு. எஸ்‌. ஆரோக்கிய ராஜீவ்‌ மற்றும்‌ திரு.நாகநாதன்‌ பாண்டி மற்றும்‌ 4 % 400 மீட்டர்‌ தொடர்‌ ஒட்டத்தில்‌ கலப்புப்‌ பிரிவில்‌ செல்வி.சுபா வெங்கடேசன்‌, செல்வி. தனலஷ்மி சேகர்‌ மற்றும்‌ செல்வி. ரேவதி வீரமணி என மொத்தம்‌ 5 தடகள வீரர்களுக்கு அரசின்‌ சிறப்பு ஊக்கத்‌ தொகையாக தலா ரூபாய்‌ 5 இலட்சம்‌ வீதம்‌ ரூபாய்‌ 25 இலட்சம்‌ வழங்க மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.

இவ்வீரர்களில்‌, திரு. எஸ்‌. ஆரோக்கிய ராஜீவ்‌ அவர்கள்‌ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்‌ தொகை வழங்கும்‌ திட்டம்‌, செல்வி. சுபா வெங்கடேசன்‌ அவர்கள்‌ சர்வதேச அளவிலான போட்டிகளில்‌ பதக்கங்கள்‌ வெல்வதற்கு ஊக்குவிக்கும்‌ திட்டம்‌ ஆகிய உயரிய திட்டங்களின்கீழ்ப்‌ பயிற்சி பெற்றவர்களாவார்கள்‌.

ஏற்கனவே, ஜப்பான்‌, டோக்கியோ ஒலிம்பிக்‌ போட்டிகளில்‌ கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த 6 வீரர்களுக்குத்‌ தலா ரூபாய்‌ 5 இலட்சம்‌ வீதம்‌ மொத்தம்‌ ரூபாய்‌ 30 இலட்சம்‌ அரசின்‌ சிறப்பு ஊக்கத்தொகையினைக்‌ கடந்த 26-6-2021 அன்றும்‌, மேலும்‌ ஒலிம்பிக்‌ போட்டிகளில்‌ கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி.சி.ஏ. பவானி தேவி அவர்களுக்கு ரூபாய்‌ 5 லட்சம்‌ சிறப்பு ஊக்கத்‌ தொகையினை 20- 6- 2021 அன்றும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ வழங்கப்பட்டுள்ளது.

Wednesday, July 7, 2021

Honble Minister Statement for Water Resources on Mekedatu issue

 காவேரி ஆற்றின்‌ குறுக்கே மேகதாதுவில்‌ அணைக்கட்டும்‌ திட்டத்தை சட்டத்திற்குட்பட்டு கர்நாடகா செயல்படுத்தும்‌ என்று கர்நாடகா முதலமைச்சர்‌ திரு எடியூரப்பா அவர்கள்‌ தொலைக்காட்சி மற்றும்‌ நாளிதழ்களுக்கு அறிக்கை வழங்கியுள்ளார்‌.

இந்நிலையில்‌, மேகதாது பிரச்சனைக்‌ குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஜீலை 4-ஆம்‌ தேதி கர்நாடக முதலமைச்சருக்கு எழுதிய பதில்‌ கடிதத்தில்‌ தமிழ்நாடு விவசாயிகள்‌ இலட்சக்கணக்கான ஏக்கரில்‌ குறுவை மற்றும்‌ சம்பா நெல்‌ பயிர்‌ செய்வதற்கு காவேரி நீரையே நம்பியிருக்கும்‌ நிலையில்‌ அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்‌ மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும்‌. அதை செயல்படுத்தக்‌ கூடாது என கடுமையாக வலியுறுத்தியுள்ளார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழ்நாட்டு விவசாயிகளின்‌ நலன்களை பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணைக்கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளையும்‌ தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதை தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும்‌ தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்‌.


இவ்வாறு தனது அறிக்கையில்‌ மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்‌ துறை அமைச்சர்‌ திரு. துரைமுருகன்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

On suspension of 3 Engineers - Highways and Minor Ports Department

 தரமற்ற சாலைகள்‌ அமைத்த நெடுஞ்சாலைத்துறை 3 பொறியாளர்கள்‌ தற்காலிக பணி நீக்கம்‌

சிவகங்கை மாவட்டம்‌, ஆண்டிச்சியூரணி - ஒட்டாணம்‌ இடையே தரமற்ற சாலைகள்‌ அமைக்கப்படுவதாக மாண்புமிகு பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ அவர்களுக்கு புகார்‌ வந்தது. அப்புகாரின்‌ அடிப்படையில்‌ மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ அச்சாலையை ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌. அதன்பேரில்‌, சாலை பணிகளை ஆய்வு செய்ய தரக்கட்டுபாடு குழுவினருடன்‌ நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குநர்‌ திருமதி.கீதா அவர்கள்‌ சிவகங்கை மாவட்டம்‌, ஆண்டிச்சியூரணி - ஒட்டாணம்‌ இடையே அமைக்கப்பட்ட சாலைப்‌ பணிகளை நேரில்‌ ஆய்வும்‌ முறையான விசாரணையும்‌ மேற்கொண்டார்‌.

அந்த ஆய்வில்‌ சாலையின்‌ தரம்‌ மற்றும்‌ அமைப்பில்‌ குறைபாடு உள்ளது உறுதி செய்யப்பட்டது. தரமற்ற சாலைகள்‌ அமைத்த அலுவலர்களான உதவி கோட்டப்பொறியாளர்‌ திரு. மாரியப்பன்‌, உதவி பொறியாளர்‌ திரு.மருதுபாண்டி மற்றும்‌ தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளர்‌ திரு.நவநீதி ஆகியோரை தற்காலிக பணி நீக்கம்‌ செய்து நெடுஞ்சாலைத்‌ துறை கண்காணிப்பு பொறியாளர்‌ (கட்டுமானம்‌ மற்றும்‌ பராமரிப்பு) திரு.செந்தில்‌ அவர்கள்‌ உத்திரவிட்டுள்ளார்கள்‌. மேலும்‌, சாலை பணி ஒப்பந்ததாரர்‌ தர்ஷன்‌ அன்ட்‌ கோ-வின்‌ ஒப்பந்தத்தை ரத்து செய்தும்‌ உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு நெடுஞ்சாலைத்‌ துறை செய்தி குறிப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.