Monday, August 2, 2021

CM reviewed the activities of Human Resources Management Department

அரசு அலுவலர்களின்‌ பணித்திறன்‌ உயர்த்தும்‌ வகையில்‌ பயிற்சிகள்‌; மக்கள்‌ பயன்பெறும்‌ ப அரசு சே ர்‌ அமைய வேண்டும்‌” - மேலாண்மைத்‌ துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவுறுத்தல்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (31.07.2021) மச்‌ செயலகத்தில்‌, மனிதவள மேலாண்மைத்துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


இக்கூட்டத்தில்‌, அரசு அலுவலர்களுக்குச்‌ சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன்‌ மூலம்‌, அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, அதன்மூலம்‌ மக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சேவைகளின்‌ தரத்தை உயர்த்த வேண்டும்‌ என்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌. மேலும்‌, போட்டித்‌ தேர்வுகளில்‌ நமது மாநில மாணவர்கள்‌ அதிக அளவில்‌ தேர்ச்சி பெறும்‌ வண்ணம்‌ பல்வேறு வகைப்பட்ட சிறப்புப்‌ பயிற்சிகளை வடிவமைத்து, அரசு பயிற்சி நிலையங்கள்‌ மூலம்‌ வழங்க வேண்டும்‌ எனவும்‌ வலியுறுத்தினார்‌. தமிழ்நாட்டுப்‌ மாணவர்களிடையே, மாநில மற்றும்‌ ஒன்றிய அரசுப்பணிகள்‌ தொடர்பான போட்டித்‌ தேர்வுகள்‌ / தகுதிகள்‌ / தேவையான பயிற்சிகள்‌ குறித்த விழிப்புணர்வை முதலில்‌ ஏற்படுத்தவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.

மேலும்‌, குடும்பத்தில்‌ முதல்‌ தலைமுறைப்‌ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள்‌ மூலம்‌ அரசுப்‌ பணியிடங்களில்‌ முன்னுரிமை வழங்கவும்‌, தகவல்‌ பெறும்‌ உரிமைச்‌ சட்டத்தின்கீழ்‌ அனைத்துத்‌ துறைகளிடமும்‌ இணையதளம்‌ மூலம்‌ தகவல்‌ பெறும்‌ வசதிகளை மேம்படுத்தவும்‌ அறிவுறுத்தினார்‌.

அரசு அலுவலர்களின்‌ மனிதவள ஆற்றலினை மேம்படுத்தவும்‌, தமிழக இளைஞர்களின்‌ அரசு வேலைவாய்ப்பினைப்‌ பெருக்குவதற்கும்‌, அண்ணா மேலாண்மைப்‌ பயிற்சி மையம்‌ மற்றும்‌ போட்டித்‌ தேர்வுப்‌ பயிற்சி மையங்களின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ கட்டமைப்புகளை உயர்த்திடவும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.

பவானிசாகரில்‌ உள்ள அடிப்படைப்‌ பயிற்சி மையத்தால்‌ அரசுப்‌ பணியாளர்களுக்கான பயிற்சியினைக்‌ காணொலிக்‌ காட்சி வாயிலாக இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்தலாம்‌ என்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, மாண்புமிகு நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.பழனிவேல்‌ தியாகராஜன்‌, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறைக்‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ திரு.ச.கிருஷ்ணன்‌, இ,ஆ.ப., மனிதவள மேலாண்மைத்‌ துறைச்‌ செயலாளர்‌ திருமதி.மைதிலி கே.ராஜேந்திரன்‌, இ,ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.


CM to Ministers and high level officers on preparation of Budget 2021-2022

 விவசாயிகள்‌ மற்றும்‌ துறை வல்லுநர்கள்‌, பல்வேறு சங்கப்‌ பிரநிதிகளைக்‌ கலந்தாலோசித்து மக்களுக்கும்‌ பொருளாதாரத்துக்கும்‌ பயன்தரத்‌ தக்க வகையில்‌ இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையும்‌ விவசாயத்‌ துறைக்கான முதல்‌ தனி நிதிநிலை அறிக்கையும்‌ அமைய வேண்டும்‌ - மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவுறுத்தல்‌. 

திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ அளித்த தேர்தல்‌ வாக்குறுதியை நிறைவேற்றும்‌ பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளைச்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ தாக்கல்‌ செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு வரலாற்றில்‌ முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும்‌ விவசாயிகள்‌ நலத்துறை சார்பாகத்‌ தனியே ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல்‌ செய்யப்படவுள்ளது.


வேளாண்மை மற்றும்‌ விவசாயிகள்‌ நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள்‌, விவசாய நிபுணர்கள்‌ மற்றும்‌ விவசாயசங்கங்கள்‌ ஆகியோரைக்‌ கலந்தாலோசித்து விவசாயம்‌ செழிக்கவும்‌ விவசாயிகள்‌ அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப்‌ பெறும்‌ வகையில்‌ சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்களையும்‌ அரசு உயர்‌ அலுவலர்களையும்‌ அறிவுறுத்தினார்‌.

Statement of the Honble Chief Minister on containment of COVID-19

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ வேண்டுகோள்‌

நாட்டு மக்கள்‌ அனைவருக்கும்‌ என்னுடைய அன்பான வணக்கம்‌!

கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த பதினெட்டு மாத காலமாக நாட்டையும்‌ நாட்டு மக்களையும்‌ வாட்டி வதைத்து வருகிறது. மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌; அரசு ஏற்படுத்தி வைத்துள்ள மருத்துவக்‌ கட்டமைப்புகள்‌; ஊரடங்குக்‌ கட்டுப்பாடுகள்‌; நம்முடைய மருத்துவர்கள்‌ மற்றும்‌ செவிலியர்களின்‌ தன்னலம்‌ கருதாத சேவை ஆகியவற்றின்‌ காரணமாக கொரோனாவின்‌ இரண்டாவது அலையைக்‌ கட்டுப்படுத்தி இருக்கிறோம்‌. கட்டுப்படுத்தி இருக்கிறோமே தவிர, முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை.


கொரோனா என்பது ஒருவரிடம்‌ இருந்து மற்றொருவருக்கு தொற்றும்‌ நோயாக இருப்பதால்‌ அதை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும்‌ முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை. முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகக்‌ கருதப்பட்ட நாடுகளில்‌ கூட மீண்டும்‌ பரவத்‌ தொடங்கி இருக்கிறது.

கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில்‌ மீண்டும்‌ தொற்றுப்‌ பரவல்‌ அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும்‌ கூடுதலாகி வருகிறது. மக்கள்‌ தொகை அதிகமாகவும்‌, நெரிசலாக வாழும்‌ சூழலும்‌ உள்ள நாட்டில்‌ தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்துவதில்‌ பல்வேறு சிரமங்கள்‌ இருந்தாலும்‌ மக்களைக்‌ காக்கும்‌ பெரும்‌ பொறுப்பு அரசின்‌ கையில்‌ இருக்கிறது என்பதை நான்‌ உணர்ந்துள்ளேன்‌. அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும்‌ வருகிறோம்‌.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கொரோனா பரவல்‌ கட்டுப்பாட்டுக்கு வந்தது. தளர்வுகள்‌ அறிவிக்கப்படும்‌ போது லேசாகப்‌ பரவத்‌ தொடங்குகிறது. இதனைக்‌ கவனத்தில்‌ வைத்து மக்கள்‌ செயல்பட வேண்டும்‌ என்று மன்றாடிக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

Read More...

Final Electoral Roll of the Muslim Members of the State Legislature to select member of WAQF Board

 FINAL ELECTORAL ROLL OF MUSLIM MEMBERS OF THE STATE LEGISLATURE FOR ELECTION OF MEMBERS OF TAMIL NADU WAQF BOARD

    The Final Electoral Roll of the Muslim Members of the State Legislature, who will vote to elect members of the Tamil Nadu Waqf Board have been finalized and it will be published on 03.08.2021. The Electoral roll will be published in the Offices of the Election Authority and Principal Secretary to Government, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department, Namakkal Kavingar Maaligai, Second Floor, Secretariat, Chennai-600 009, the Chief Executive Officer, Tamil Nadu Waqf Board, Chennai –600 001 and all Offices of Zonal Superintendents of Waqfs.


2. The schedule for conduct of election will be issued shortly and the Election Notification will be published by the Election Authority in the Tamil Nadu Government Gazette.

Read More in Tamil...

On release of water from Thirumoorthy Dam for irrigation

       பரம்பிக்குளம்‌ ஆழியாறு திட்ட திருமூர்த்தி நீர்த்தேக்கத்‌ திட்டக்குழு விவசாயிகளின்‌ கோரிக்கையினை ஏற்று, திருப்பூர்‌ மாவட்டம்‌, திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம்‌ ஆழியாறு திட்டத்தில்‌ பாலாறு படுகை நான்காம்‌ மண்டலப்‌ பாசனப்‌ பகுதிகளில்‌ உள்ள பாசன நிலங்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 03.08.2021 முதல்‌ 135 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு ஐந்து சுற்றுகளாக மொத்தம்‌ 9500 மி.க. அடிக்கு மிகாமல்‌ தண்ணீர்‌ திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்‌ மூலம்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, பொள்ளாச்சி கிணத்துக்கடவு, சூலூர்‌ வட்டங்கள்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டம்‌, உடுமலை, மடத்துக்குளம்‌, பல்லடம்‌, திருப்பூர்‌, காங்கேயம்‌ மற்றும்‌ தாராபுரம்‌ வட்டங்களில்‌ உள்ள 94068 ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசன வசதி பெறும்‌.