மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் தமிழக அரசு விருதுகள், 3.12.2013 மாற்றுத் திறனாளிகள் நாளன்று வழங்கப்படவுள்ளது.
வ.எண் | விருதுகள் விவரம் | விருதுகள் எண்ணிக்ளை | விருது விவரம் |
1) | சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர் - கை, கால் பாதிக்கப்பட்டவர்,பார்வையற்றவர், காதுகேளாதவர்,மனவளர்ச்சி குன்றியவர் மற்றும் தொழுநோயால் குணமடைந்தவர் | 5 விருதுகள் | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
2) | சிறந்த ஆசிரியர் - பார்வையற்றவர், காதுகேளாதவர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் | 3 விருதுகள் | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
3) | சிறந்த சமூகப் பணியாளர் | 1 விருது | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
4) | சிறந்த நிறுவனம் | 1 விருது | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
5) | மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் பணி அமர்த்திய நிறுவனம் | 1 விருது | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் |
6) | சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் | 2 விருதுகள் | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்; |
மொத்தம் | 13 விருதுகள் | 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் | |
மேற்காணும் விருதுகள் பெற,
முதன்மைச் செயலாளர் மற்றும்
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்,
ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை,
கே.கே. நகர்,
சென்னை - 78
அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று முதன்மைச் செயலாளர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களுக்கு 4.11.2013க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments :
Post a Comment