Sunday, September 13, 2015

Civil Supplies Grievances Redressal camps - Sep 2015



குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சென்னையில் 16 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு இணைப்பில் குறிப்பிட்டுள்ள மையங்களில் செப்டம்பர் 2015 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் 12.09.2015 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அப்பகுதியை சுற்றி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 16 மண்டல பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Civil Supplies Grievances Redressal Camps are being held in Chennai city every month for the redressal of public grievances regarding changes in the family cards, deficiencies in the functioning of Fair Price Shops or PDS commodities supplied or regarding unfair trade practices or deficiencies in the goods sold by the private sector in the market. Civil Supplies Grievances Redressal camps for the month of SEPTEMBER 2015 will be held on 12.09.2015 at 10.00 am at the places given in the Annexure. Officials from Civil Supplies and Consumer Protection Department, Co-operative Department and TamilNadu Civil Supplies Corporation would participate in the camps. General Public belonging to Fair Price Shops around this location can avail this opportunity to get their grievances redressed. Speedy action will be taken on the petitions received during this meeting to redress the grievances. Cardholders in the respective Zones in Chennai City are requested to avail this opportunity.

 Principal Secretary/ Commissioner

No comments :

Post a Comment