மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 18.9.2015
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி அமராவதி பிரதானக் கால்வாய் கிராம நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு 19.9.2015 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்
No comments :
Post a Comment