Sunday, September 27, 2015

Condolence Message of the Honble Chief Minister on Mecca incident

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 25.9.2015

மெக்கா புனித ஹஜ் பயணத்தின் போது, 24.9.2015 அன்று சவூதி அரேபியாவின், மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 700க்கும் மேற்பட்ட புனித ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்பதையும், 800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பதையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேலும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வாயிலாக புனித யாத்திரை மேற்கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதின் முகமது இப்ராகிம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியைச் சேர்ந்த முகைதீன் பிச்சை மற்றும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ரெமிஜன் ஆகியோர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்



Wednesday, September 23, 2015

Bakrid Festival Greetings message from CM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “பக்ரீத்” திருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த “பக்ரீத்” திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய முன் வந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூரும் தினமே பக்ரீத் திருநாளாகும். இறைவனின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாள் இந்நாளாகும்.



இத்தியாகத் திருநாளில், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள், எளியவர்களிடம் கருணை காட்டுங்கள், சிந்தனையிலும், நடத்தையிலும், தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.

உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று கூறி, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


Sunday, September 20, 2015

Direct Recruitment for the Directorate of Tamil Etymological Dictionary Project


The Directorate of Tamil Etymological Dictionary Project is proposed to appoint following posts by direct recruitment. This Directorate comes under the administrative control of the Tamil Development and Information Department.

Sl.No. Name of the post and number Scale of Pay Minimum Educational Qualification Communal rotation of appointment
1. Record Clerk – 1 post Rs. 4,800-10,000 + Grade Pay 1,400 Must possess a completed S.S.L.C. Open Competition – Priority
2. Computer Operator – 1 post. Monthly Rs. 5,000/- Consolidated Pay S.S.L.C. Passed, Higher grade in Tamil & English typewriting and Certificate in DTP course Open Competition 

 Priority means Intercaste Marriage, Destitute Widows, Physically Handicapped, Ex-servicemen, etc., Maximum age limit is 30 for O.C., 35 for Scheduled Castes, 32 for Backward Communities and Most Backward Communities-Denotified Communities as on 1.7.2015. Age relaxation will be given as per Tamil Nadu Govt. rules.

 Those who are qualified and interested, can apply in White Paper contains Name, Date of Birth, Religion and Community, Priority Category with self attested Xerox copy of Certificates and affix a Passport size Photo. Duly filled up application must be sent by Regd. Post or in Person, on or before 06-10-2015 at 5.30 p.m. to the Director (Full Addl. Charge), Directorate of Tamil Etymological Dictionary Project, C-48, 1st Floor, T.N.H.B. Office Complex, 2nd Avenue, Anna Nagar, Chennai – 600 040. For further details contact 044-26215023 during Office hours.

 Director (Full Addl. Charge),
 Directorate of Tamil Etymological
 Dictionary Project, Chennai-6000 040.

Friday, September 18, 2015

Arasu Cable TV Corporation Ltd, Chennai on e-service

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தலைமைச்யெலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.

இச்சேவை மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த 13,28,647 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுமட்டுமின்றி இச்சேவை மையங்கள் மூலமாக 4,36,352 நபர்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த 337 சேவை மையங்களிலும் ஆதார் அட்டையினை பதிவு செய்யும்போது வழங்கப்பட்ட கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியினை மாற்றம் செய்ய விரும்புவோர் இச்சேவை மையங்களை அணுகி தங்களது புதிய கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை பத்து ரூபாய் செலுத்தி மாற்றம் செய்துக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்தப்புதிய சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலாண்மை இயக்குநர்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

Job opportunity in Kuwait for Heavy Vehicle Drivers

From the Overseas Manpower Corporation Ltd., Chennai -  Job opportunity in Kuwait for Heavy Vehicle Drivers

செய்தி வெளியீடு

குவைத் நாட்டில், இந்திய தொலைதொடர்பு திட்டப்பணிகளுக்காக எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 22 முதல் 35 வயதிற்குட்பட்ட கேபிள் பொருத்துவதற்கான பள்ளம் தோண்டுதல் தொடர்பில் அனுபவம் பெற்ற லேபர்கள் தேவைப்படுகிறார்கள்.


மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று செல்லத்தக்க குவைத் ஓட்டுநர் உரிமம் 1பெற்று குவைத் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு இரண்டு வருடங்கள் முடிவுற்ற கனரக வாகன ஓட்டுநர்களும் தேவைப்படுகிறார்கள்.

இந்திய கனரக ஓட்டுநர் உரிமம் மற்றும் ஜிசிசி (GCC) கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் மேற்கண்ட பணிக்கு தகுதியுடையவர் ஆவர். இருப்பினும், குவைத் நாட்டில் கனரக ஒட்டுநர் உரிமம் பெறும் வரை அவர்கள் லேபராக பணிபுரிய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30 மாதங்களுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரண்டு நகல்கள், நீலநிற பின்னணியில் எடுக்கப்பட்ட ஐந்து புகைப்படத்துடன் 19.09.2015 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு எண் 42, ஆலந்துhர் சாலை, திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் குவைத் நாட்டின் சட்டதிட்டத்திற்கேற்ப இதர சலுகைகளும் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் தொடர்பான விவரங்களை  www.omcmanpower.com என்ற இந்நிறுவன இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-22502267 /22505886/8220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.