Wednesday, November 11, 2015

CM chaired a meeting on the preventive measures and the action taken for the North East Monsoon

 Honble Chief Minister chaired a meeting with Honble Ministers and Secretaries on the preventive measures and the action taken for the North East Monsoon

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடனேயே கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் நான் உத்தரவிட்டிருந்தேன். உயிரிழப்புகள் மற்றும் பல்வேறு சேதங்களுக்கான நிவாரண உதவித் தொகைகளை உயர்த்தி நான் ஆணையிட்டேன். பருவமழை பாதிப்பை விரைந்து எதிர்கொண்டு நிவாரணப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். இது தொடர்பாக ஒரு அறிக்கையினையும் நான் 4.11.2015 அன்று வெளியிட்டிருந்தேன்.

எனது உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் மின்வாரியம் ஆகியவை உள்ளிட்ட அரசுத் துறைகள் மிகுந்த விழிப்புடன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முடிய 440 மி.மீ. மழை பெறப்படும். வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக கடந்த மூன்று நாட்களில் 300 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட சராசரி மழை அளவு 697 மி.மீ. ஆகும். தற்போது வரை 500 மி.மீ. மழை பெய்துள்ளது. எனவே, கடலூர் மாவட்டத்தில் பெருமழை காரணமாக சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

8.11.2015 மற்றும் 9.11.2015 ஆகிய நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 266 மி.மீ. மழை பெய்துள்ளதால், கடலூர் மாவட்டம் மழையால் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மழை பெய்துள்ளதால், 9.11.2015 அன்று மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. ககன்தீப் சிங் பேடி அவர்களை அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்க நான் உத்தரவிட்டதின்பேரில், 9.11.2015 அன்று முதல் திரு ககன்தீப் சிங் பேடி அவர்கள் தலைமையில் உயர் அதிகாரிகள் கடலூரில் முகாமிட்டு வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கென அனுப்பப்பட்ட திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குழு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான பணிகளை துரிதமாக  மேற்கொண்டுள்ளது. ஊரக வளர்ச்சி இயக்குநர் திரு பாஸ்கரன் இஆப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு பிரகாஷ் இஆப., தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு விஜயராஜ்குமார், இஆப., தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு சாய்குமார் இஆப., பேரூராட்சிகள் இயக்குநர் திரு மகரபூஷணம், இஆப., தொழில் துறை கூடுதல் செயலாளர் திரு எம்.எஸ் சண்முகம் இஆப., கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் திரு.ஆபிரகாம், இஆப., பொது சுகாதாரத் துறை இயக்குநர் திரு குழந்தைசாமி ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25000 பேர், நகரப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 4000 பேர் என மொத்தம் 29000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதிகளில் மூன்று பொது சமையல் கூடங்களும், கிராமப் பகுதிகளில் எட்டு பொது சமையல் கூடங்களும் இயங்கி வருகின்றன. இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தலா 2 துணை ஆட்சியர்கள் தலைமையில், 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நான்கு துணை ஆட்சியர்கள் மற்றும் 23 சார் நிலை அலுவலர்கள் கொண்ட குழுக்கள், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெருமழை காரணமாக 2000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் மின் விநியோகம் தடைபட்டது.

கடலூர் மாவட்டத்தில் 8 கூட்டுக் குடிநீர் திட்டங்களில், 7 திட்டங்களுக்கான மின் ஊட்டிகளும், 180 ஊரக மின் ஊட்டிகளில் 153ம், நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து 51 மின் ஊட்டிகளும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு சீரான முறையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின் விநியோகத்தை சீரமைக்க, வெளி மாவட்டங்களிலிருந்து 2000 மின் வாரிய ஊழியர்கள் கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்காணும் பணிகளை மின் வாரிய தலைவர் தலைமையில், தலைமைப் பொறியாளர் மற்றும் சார் நிலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் மின் விநியோகம் தடைப்பட்டிருந்த 683 கிராம ஊராட்சிகளில், 430 கிராம ஊராட்சிகளில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள கிராமப் பகுதிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு வருகிறது.

 மின் விநியோகம் தடைபட்டிருந்த போது ஜெனரேட்டர்கள் மூலம் நகரப் பகுதிகளில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டது. இன்னமும் மின் விநியோகம்  சீர் செய்யப்படாத கிராம ஊராட்சிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மற்றும் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) ஆகியோர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 37 நகரும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தொற்றுநோய் ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரவனாற்றில் வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் வடலூர் - கும்பகோணம் நெடுஞ்சாலைப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் வடிந்ததும், முறையாக பயிர் சேதத்தினை ஆய்வு செய்து நான் ஏற்கெனவே அறிவித்த நிவாரண தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் மீன்பிடி கிராமத்திலிருந்து சுமார் 100 FRP வல்லங்கள் கெடிலம் ஆற்று வெள்ளத்தினால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்புப் படை உதவியுடன் நேற்றும், இன்றும் வான்வழித் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதில், இரண்டு இடங்களில் சுமார் 40 வல்லங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு கடலோர காவல் படையுடன் இணைந்து மாநில மீன்வளத் துறை மேற்கொண்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் 90 கால்நடை மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை கால்நடைகளுக்கு உரிய தடுப்பூசி போடுவதுடன் தேவையான சிகிச்சையையும் அளித்து வருகின்றன

. தற்போதைய வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் கடலூர் மாவட்டத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். அதே போன்று கால்நடை இழப்பு மற்றும் குடிசைகள் சேதங்கள் ஆகியவற்றுக்கும் நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், மேற்பார்வையிடவும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் மாண்புமிகு நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.நத்தம் இரா. விசுவநாதன், மாண்புமிகு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்  துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் திரு. கே.ஏ.ஜெயபால், மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார் ஆகியோரை கடலூர் மாவட்டத்திற்கு நான் அனுப்பி வைத்துள்ளேன்.

இதர மாவட்டங்களிலும் மழை பாதிப்பு இல்லாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேதங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


Tamil Nadu Small Industries Corporation (TANSI) - Vacancy Notification for the post of Chemist

Vacancy Available

Advertisement No. 213/EB1/2010

Applications are invited from eligible candidates for one post of CHEMIST


Number of vacancies01 [General Turn]
Qualification :

Graduate in Chemistry from a recognized University.
Experience :

Post-qualification experience of 2 years in Government or Public Sector Undertaking in the field of paint and allied products manufacturing process.
Scale /Pay Band :

PB2 - Rs. 9,300-34,800 + G.P. Rs.4,300/- with Dearness Allowance and other usual Allowances as applicable to the post.
Place of Posting : Chennai.
Age :
Catogery
SC/ST
MBC
BC
BC(M)
OC
Age Limit as on 1.1.2015
35
32
32
32
30

Last date for receipt of application: 30.11.2015


Application form may be downloaded from the Website of TANSI or obtained from the Manager (Administration) in person. The filled up application along with a Passport size photo and photo copies of testimonials may be sent by post duly addressed to the General Manager, TANSI, A-28, Thiru-Vi-Ka Industrial Estate, Chennai – 600032 to reach him before 30.11.2015 Afternoon.

Download Application form




CM Statement on Administrations to gear up for rains

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு உயர்அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்கள். இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, மின்வாரியம், காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் வடக்குப் பகுதியிலுள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

சென்னை மாநகரில் 131 பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் சென்னை மாநகராட்சி நிர்வாகம் 4000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களைக் கொண்டு பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றியது. மேலும், சாலைகளில் விழுந்துகிடந்த 125 மரங்கள் அகற்றப்பட்டு சாலை போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. குறிப்பாக பொது மக்கள் தீபாவளிக்காக பல்வேறு பொருள்களை வாங்கும் கடைவீதிகளில் சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு 8000 உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டன. சென்னை மாநகராட்சியிலும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு நிவராணப்பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின் பேரில் சென்னை மாநகரில் மழை நிவாரணப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி, மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர்

திருமதி பா வளர்மதி, மாண்புமிகு கைத்தறி (ம) துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ் கோகுல இந்திரா, மாநகராட்சி மேயர் திரு சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர் திரு விக்ரம் கபூர், இஆப மற்றும் உயர் அதிகாரிகள் மழைநீரை அகற்றும் பணிகளைப் மேற்பார்வையிட்டு சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். இந்திய வானிலை மையம் அறிக்கையின்படி வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூருக்கு அருகிலேயே நிலை கொண்டு மாலை 8.45 மணியளவில் கரையை கடந்தது. இதனால் கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர்ந்து அதிகளவில் மழை பெய்யும் என்றும் வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரளவிற்கு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மணிக்கு 45கி மீ முதல் 55 கி மீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.

இன்று (9.11.2015) காலை முதல் கடலூர் மாவட்டத்தில் 13.7 செ.மீ மழை பெய்துள்ளது. பரங்கிப்பேட்டையில் அதிகபட்சமாக 32 செ.மீ மழை பெய்துள்ளது. தமிழ் நாடு மின்சார வாரியம் முன்னெச்சரிக்கை

நடவடிக்கையாக இன்று காலையிலிருந்து கடலூர் மாவட்டத்தில் மின்சாரத்தை துண்டித்துள்ளது. மாலையிலிருந்து படிப்படியாக மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. பண்ருட்டி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 650 நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விருத்தாச்சலம் வட்டத்திலுள்ள வடக்கு வேலூர் கிராமம் மழை நீரால் சூழப்பட்டதால் 150 குடும்பங்கள் மேடான பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் நிவாரணக்குழு கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் பொதுப் பணித்துறை கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கரையோரங்களில் வாழும் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் குடிநீர் மற்றும் பால் விநியோகம் எவ்வித தடங்கலுமின்றி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் நிவராணம் மற்றும் சீரமைப்புப்பணிகளை மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு எம் சி சம்பத், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் திரு டி கே எம் சின்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை அதிகாரிகள் மழை நீர் அகற்றல் மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டத்தில் மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு பி வி ரமணா, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை அதிகாரிகள் மழை நீர் அகற்றல் மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து செல்லும் போது திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் இம்மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை அனுப்ப உத்தரவிட்டதின் பேரில் கடலூர் மாவட்டத்திற்கு திரு ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு திரு பிரதீப் யாதவ் இ.ஆ.ப, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு திரு ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் திரு மஞ்சுநாதா இ.கா.ப அவர்கள் கடலூரில் முகாமிட்டுள்ளார்.

Monday, November 9, 2015

Greeting message of the Honble Chief Minister on account of Deepavali Festival

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் “தீபாவளி” வாழ்த்துச் செய்தி

நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.



தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


Friday, November 6, 2015

Statement From the Health and Family Welfare Department

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை

547 சிறப்புப்பிரிவு உதவிமருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் அறிவிப்பு:-

2012–ஆம் ஆண்டில், நாட்டிலேயே முதன் முறையாக, மருத்துவப் பணியாளர்களை தேர்வுசெய்ய, மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்தால் மக்கள்நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையில் இதுவரை 14,208 மருத்துவர் மற்றும் இதரபணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, 2013-14-ஆம் ஆண்டில் 3015 உதவிமருத்துவர் பணியிடங்களும், 2014-15 ஆம் ஆண்டில் 2645 உதவிமருத்துவ அலுவலர்களின் காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது அரசு மருத்துவ நிலையங்களில் 34 சிறப்புபிரிவுகளில் காலியாகவுள்ள 547 உதவிமருத்துவர் (Assistant Surgeon in 34 different Specialities) பணியிடங்களை விரைவாக நிரப்ப ஏதுவாக வாக்-இன் (Walk-in selection process) தேர்வு முறை என்ற எளிய முறையில் சிறப்புப்பிரிவு பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்து அதன் தொடர்ச்சியாக, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 547 சிறப்புப்பிரிவு உதவி மருத்துவர்களை நியமிக்க 25.10.2015 அன்று விரிவான அறிவிப்பினை www.mrb.tn.gov.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் 16.11.2015 வரை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.mrb.tn.gov.in) ஆன்-லைன் (Walk-in selection process)மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு, நடைமுறையிலுள்ள இடஒதுக்கீடு விதிமுறைகளுக்குட்பட்டு வாக்-இன் (றுயடம-in ளநடநஉவiடிn யீசடிஉநளள) தேர்வுமுறையின் மூலம் காலியாக உள்ள 547 சிறப்புப்பிரிவு மருத்துவ பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள மருத்துவர்கள் அனைவரும் 16.11.2015-க்குள் www.mrb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க கோரப்படுகிறார்கள்.