Wednesday, May 19, 2021

CM Redressed the Grievances Received Under Ungal Thoguthiyil Muthalamaichar Thurai

Honble Chief Minister redressed the grievances received under Ungal Thoguthiyil Muthalamaichar Thurai.

 செய்தி வெளியீடு எண்‌: 95 

நாள்‌:18.05.2021

           செய்தி வெளியீடு

“உங்கள்‌ தொகுதியில்‌ முதலமைச்சர்‌ துறை'” உருவாக்கப்பட்ட 10 தினங்களுக்குள்‌ குறைதீர்ப்புப்‌ பணிகள்‌ துவக்கம்‌ - மனுதாரர்களுக்கு பயன்களை வழங்கினார்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌

உங்கள்‌ தொகுதியில்‌ முதலமைச்சர்‌ துறையின்‌ கீழ்‌ பெறப்பட்ட மனுக்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்‌ திட்ட உதவிகள்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ இன்று (18.05.2021) வழங்கப்பட்டன.

மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தேர்தல்‌ பரப்புரையில்‌ “உங்கள்‌ தொகுதியில்‌ ஸ்டாலின்‌”? என்ற நிகழ்வின்‌ மூலம்‌ பெறப்பட்ட மனுக்கள்‌ 100 நாட்களுக்குள்‌ தீர்வு காணும்‌ பொருட்டு “உங்கள்‌ தொகுதியில்‌ முதலமைச்சர்‌”? என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர்‌ நியமிக்கப்பட்டு, 9-5-2021 அன்று அவரிடம்‌ அனைத்து மனுக்களும்‌ ஒப்படைக்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும்‌ 72 மரப்பெட்டிகளிலும்‌ மற்றும்‌ 275 அட்டை பெட்டிகளிலும்‌ சுமார்‌ 4 இலட்சம்‌ மனுக்கள்‌ இதுவரை இத்துறையில்‌ பெறப்பட்டன.

பெறப்பட்ட அனைத்து மனுக்களும்‌ மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின்‌ ஆளுமை (SMS) மூலம்‌ பராமரிக்கப்படும்‌ வலைதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்படுகிறது. இதுவரை சுமார்‌ 70,000 மனுக்கள்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மனுவும்‌ வலைதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டவுடன்‌ தனித்தன்மையுடன்‌ கூடிய அடையாள எண்‌ வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன்‌ கூடிய குறுஞ்செய்தி (61/45) மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில்‌ கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள்‌ மற்றும்‌ அதன்‌ உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும்‌ கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும்‌ மாவட்ட அலுவலர்கள்‌ மேற்கொள்கிறார்கள்‌.

இதுவரை சென்னை, திருவள்ளூர்‌, இராணிப்பேட்டை, வேலூர்‌, திருவாரூர்‌, தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின்‌ மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத்‌ திட்டம்‌ செயல்படத்‌ தொடங்கியதை குறிக்கும்‌ வகையில்‌, பத்து (10) பயனாளிகளை நேரில்‌ அழைத்து அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ நலத்‌ திட்ட உதவிகளை இன்று வழங்கினார்‌. ஆதம்பாக்கம்‌, சென்னையைச்‌ சேர்ந்த திருமதி. ராணி அவர்களுக்கு முதியோர்‌ உதவித்‌ தொகையும்‌, பரங்கிமலை, சென்னையைச்‌ சார்ந்த திருமதி. N. நித்யா அவர்களுக்கு, விதவை உதவித்‌ தொகையும்‌, தியாகராயநகர்‌, சென்னையைச்‌ சார்ந்த திரு. U‌. சத்தியநாராயணன்‌ அவர்களுக்கு மாற்றுத்‌ திறனாளி உதவித்‌ தொகையும்‌, சூளைமேடு, சென்னையைச்‌ சேர்ந்த செல்வி. தாயாரம்மா அவர்களுக்கு முதிர்‌ கன்னி உதவித்‌ தொகையும்‌, தண்டையார்பேட்டையைச்‌ சேர்ந்த திருமதி. சுமதி அவர்களுக்கு தையல்‌ இயந்திரமும்‌, வில்லிவாக்கம்‌, சென்னையைச்‌ சேர்ந்த திரு. உதயகுமார்‌ அவர்களுக்கு வாரிசு சான்றிதழும்‌, ஆயிரம்‌ விளக்கு, சென்னையைச்‌சேர்ந்த திருமதி நந்தினி அவர்களுக்கு காதுகேட்கும்‌ கருவியும்‌, இராணிப்பேட்டை மாவட்டம்‌ கொண்டபாளையத்தைச்‌ சேர்ந்த திருமதி ஜெயந்தி அவர்களுக்கு இலவச வீட்டு மனைப்‌ பட்டாவும்‌, இராணிப்பேட்டை மாவட்டம்‌ வெங்குபட்டு ஊராட்சியைத்‌ சார்ந்த திரு. முத்துராமன்‌ அவர்களுக்கு வீடு கட்ட உதவியும்‌, இராணிப்பேட்டை மாவட்டம்‌, சிறுவாளைத்தைச்‌ சார்ந்த திரு. சுபாஷ்‌ அவர்களுக்கு சொட்டுநீர்‌ பாசன உதவி ஆகிய நலத்‌ திட்டங்கள்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ இன்று வழங்கப்பட்டன.




சாலை மேம்பாடு, குடிநீர்‌ வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டி பொதுவான கோரிக்கைகள்‌ வரப்பெற்றவை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில்‌ முதற்கட்டமாக பொது கோரிக்கைகள்‌ தொடர்பாக வரப்பெற்ற நான்கு மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஒப்புதல்‌ ஆணை இன்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ சம்பந்தப்பட்ட பின்வரும்‌ துறைகளுக்கு வழங்கப்பட்டது. அதன்‌ விவரம்‌ பின்வருமாறு:

திருவள்ளூர்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த திரு. M. முனுசாமி என்பவரின்‌ கோரிக்கையின்‌ அடிப்படையில்‌, அழிஞ்சிவாக்கம்‌ கிராம ஊராட்சியில்‌ அங்கன்வாடி மையக்‌ கட்டிடம்‌ ரூ.10.1 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டுவதற்கு அனுமதி ஆணையும்‌, திருவள்ளூர்‌ மாவட்டத்தை சார்ந்த திரு. முருகன்‌ என்பவரின்‌ கோரிக்கையை ஏற்று, ஆமூர்‌ ஊராட்சி, சித்தேரி கால்வாயில்‌ தடுப்பணை கட்டுவதற்கு ரூ.4.6 இலட்சத்தில்‌ அனுமதி ஆணையும்‌, இராணிப்பேட்டை மாவட்டத்தைச்‌ சார்ந்த திரு. குணசேகரன்‌ என்பவரின்‌ கோரிக்கையின்‌ அடிப்படையில்‌, அசநெல்லிகுப்பம்‌ கிராமம்‌, சிமெண்ட்‌ சாலை அமைப்பதற்கு ரூ.189 இலட்சத்தில்‌ அனுமதி ஆணையும்‌, இராணிப்பேட்டை மாவட்டம்‌, கல்மேல்குப்பம்‌ ஊராட்சியைச்‌ சேர்ந்த திரு. புவனேஸ்குமார்‌ என்பவரின்‌ கோரிக்கையின்‌ அடிப்படையில்‌, எருக்கம்தொட்டி கிராமம்‌, பிள்ளையார்‌ கோவில்‌ தெருவில்‌ குடிநீர்‌ குழாய்‌ அமைத்திட ரூ.1.1 இலட்சம்‌ அனுமதி ஆணை ஆகிய நலத்‌ திட்டங்களுக்கான ஆணைகள்‌ இன்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ வழங்கப்பட்டன.

இதேபோல்‌, இத்திட்டத்தின்கீழ்‌ பெறப்பட்டுள்ள மனுக்கள்‌ அனைத்தையும்‌ முறையாக ஆய்வு செய்து, விரைவில்‌ உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென இத்துறை அலுவலர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுரை வழங்கினார்கள்‌.

இந்நிகழ்வில்‌ தலைமைச்‌ செயலாளர்‌ திரு. வெ. இறையன்பு, இ.ஆ.ப., “உங்கள்‌ தொகுதியில்‌ முதலமைச்சர்‌” துறையின்‌ சிறப்பு அலுவலர்‌ திருமதி ஷில்பா பிரபாகர்‌ சதீஷ்‌, இ.ஆ.ப., மற்றும்‌ இதர அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9


CM Chaired a Meeting with Voluntary Organisations on Corona Relief Activities.

 Honble Chief Minister chaired a meeting with voluntary organisations on Corona Relief activities.



District Level Task Force for Children of COVID Affected/Infected Parents - Tamil Version

 செய்தி வெளியீடு 

அதிகப்படியான நோய்‌ தொற்று பரவல்‌ மக்களிடையே இரண்டாம்‌ அலையில்‌ பேரழிவிற்குள்ளாக்கி வருவதால்‌ பலர்‌ தங்கள்‌ உயிரை இழக்கின்றனர்‌. கோவிட்‌ - 19 இன்‌ தாக்கம்‌ குறிப்பாக குழந்தைகளைப்‌ பாதிக்கிறது என்பது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. தமிழக அரசு, குழந்தைகளின்‌ பராமரிப்பு மற்றும்‌ பாதுகாப்பில்‌ அதிக அக்கறை கொண்டுள்ளதால்‌, ஏற்கனவே மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுகள்‌ மூலம்‌ கோவிட்‌ தொற்றுநோயால்‌ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கிடைக்கும்‌ உதவிகள்‌ குறித்து, பொது மக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.


கோவிட்‌-19 நோய்‌ தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும்‌ பாதிக்கப்பட்ட குழந்தைகள்‌ மற்றும்‌ கோவிட்‌-19 நோய்‌ தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும்‌ பாதிக்கப்பட்டவர்களின்‌ குழந்தைகளைப்‌ பராமரிப்பதற்கும்‌, அவர்களுக்குத்‌ தேவையான சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும்‌ அந்தந்த மாவட்ட ஆட்சியர்‌ அவர்களின்‌ தலைமையின்‌ கீழ்‌ மாவட்ட்‌ ஆட்சியர்‌ உட்பட ஏழு உறுப்பினர்களைக்‌ கொண்ட மாவட்ட அளவிலான பணிக்‌ குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான பணிக்குழுவின்‌ கடமைகள்‌ மற்றும்‌ பொறுப்புகள்‌ பின்வருமாறு:- 

1. கோவிட்‌-19 காரணமாக இறந்த அனைத்து வயதுவந்தோரின்‌ விவரங்களையும்‌ சரிபார்த்து, பெற்றோர்‌ இழந்த அல்லது கவனிப்பு மற்றும்‌ பாதுகாப்பு தேவைப்படும்‌ குழந்தைகளை கண்டறிந்து அவர்களை குழந்தைகள்‌ நலக்‌ குழுவின்‌ முன்‌ முன்னிலைப்படுத்துதல்‌, குழந்தை நலக்‌ குழுவானது இக்குழந்தைகளை தத்தெடுப்பு, வளர்ப்பு பராமரிப்பு (Foster Care), நிதி ஆதாரத்‌ திட்டம்‌ (Sponsorship) போன்ற திட்டங்கள்‌ மூலம்‌ மறுவாழ்வு வழங்குதல்‌ அல்லது குழந்தைகள்‌ இல்லங்களில்‌ சேர்த்தல்‌ ஆகிய மறுவாழ்வு குறித்து முடிவு செய்யும்‌. இவற்றில்‌ இளைஞர்‌ நீதி (குழந்தைகள்‌ பராமரிப்பு மற்றும்‌ பாதுகாப்பு),சட்டம்‌ 2015-ன்படி, குழந்தைகளை இல்லங்களில்‌ சேர்த்தல்‌ என்பது கடைசி புகலிடமாக இருக்கும்‌.

2. பெற்றோர்கள்‌ சிகிச்சையில்‌ இருக்கும்போது குழந்தைகளை கவனித்துக்கொள்ள உறவினர்கள்‌ அல்லது பாதுகாவலர்கள்‌ இல்லாத நிலையில்‌ தற்காலிகமாக குழந்தைகள்‌ இல்லங்களில்‌ தங்கவைத்தல்‌.

3. கோவிட்‌-19 காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள்‌ மற்றும்‌ கோவிட்‌-19 நோய்‌ தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும்‌ பாதிக்கப்பட்டவர்களின்‌ குழந்தைகளுக்கு உளவியல்‌ சார்ந்த உதவி மற்றும்‌ ஆலோசனை வழங்குதல்‌.

4. கோவிட்‌-19 நோயால்‌ பாதிக்கப்பட்ட குழந்தைகளை சிகிச்சை மையங்களுக்கு சரியான நேரத்தில்‌ பரிந்துரைத்தல்‌ மற்றும்‌ கோவிட்‌-க்கு பிந்தைய சிகிச்சை காலத்தில்‌ ஊட்டச்சத்து வழங்குதலை உறுதி செய்தல்‌.

5. ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ பதிவுசெய்யப்பட்ட ஒரு குழந்தைகள்‌ இல்லத்தினை கண்டறிந்து அதனை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமாக கோவிட்‌-19 பராமரிப்பு மையமாக மாற்றுதல்‌.

மாவட்ட அளவிலான . பணிக்குழுவானது, கோவிட்‌-19 நோய்‌ தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும்‌ பாதிக்கப்பட்ட குழந்தைகள்‌ மற்றும்‌ கோவிட்‌-19 நோய்‌ தொற்றிற்குள்ளாக்கப்பட்ட மற்றும்‌ பாதிக்கப்பட்டவர்களின்‌ குழந்தைகளைப்‌ பராமரிப்பதற்கும்‌, அவர்களுக்குத்‌ தேவையான சேவைகளை வழங்குவதற்கும்‌ வாரத்திற்கு ஒருமுறை மற்றும்‌ தேவையின்‌ அடிப்படையில்‌ கூடும்‌. 

District Level Task Force for Children of COVID Affected/Infected Parents - English Version

" District Level Task Force constituted for providing intervention programmes to care and protect children affected and infected by COVID-19 as well as children of COVID affected/infected parents."

Press Release

An unprecedented and unexpected wide spread rise in COVID -19 cases during the second wave had devastated the life of citizens and many had lost their life. The impact of COVID 19 especially affecting children is a serious concern. Since the Government of Tamil Nadu is having greater concern over the care and protection of children in the State, the State had already made a wide publicity among general public on the assistance available to children during the COVID pandemic through the District Child Protection Units.


The Government have constituted the District Level Task Force consisting of seven members including the District Collector of the concerned District as Chairperson for providing intervention programmes to care and protection of children affected and infected by COVID 19 as well as children of COVID affected /infected parents.

The District Level Task Force shall have the following duties and responsibilities:-

1. To check the details of all adult who have died due to COVID 19 and find out any children become orphan or children in need of care and protection and produce such children before the Child Welfare Committee which will decide their rehabilitation such as adoption, foster care, sponsorship etc, and institutionalization as the last resort as per the provision of Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015.

2.  Placing of children in temporary shelters while parents are undergoing treatment and children are left without relative or guardian to take necessary care.

3. Psychological and counselling support to children infected / affected due to COVID 19 as well as children of COVID infected / affected parents.

4. Timely referral of children infected with COVID 19 to treatment centres and ensuring nutritional support during post treatment period.

5. Identifying and designating one registered child care institution in each district and making arrangement to make such institution as COVID care centre exclusively for children.

The District Level Task Force shall meet every week and as and when required for providing intervention programmes to care and protection of children affected and infected by COVID 19 as well as children of COVID affected /infected parents.

ISSUED BY PR, SACRETARTAT, CHENNAI-9 

Review Meeting of Hindu Religious and Charitable Endowments

 As per the instructions of the Honble Chief Minister, the Honble Minister for Hindu Religious and Charitable Endowments chaired a review meeting of the Department.

செய்தி வெளியீடு எண்‌:099 

நாள்‌:19.05.2021

இந்து சமய அறநிலையத்துறை

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலில்‌ மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்‌ திரு. பி.கே. சேகர்‌ பாபு அவர்கள்‌ தலைமையில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌.

     இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌ அலுவலகத்தில்‌ இன்று (18.05.2021)  இந்து சமய அறநிலையத்துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள திருக்கோயில்களில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும்‌ பணிகள்‌ மற்றும்‌ இணையப்பதிவேற்றம்‌ குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ வழிகாட்டுதலில்‌, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ துறை அலுவலர்களுடன்‌ விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



துறை அலுவலர்களுடன்‌ நடத்திய ஆய்வில்‌ கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்‌.

1. திருக்கோயில்‌ நிர்வாகம்‌, அலுவலர்கள்‌, திருப்பணிகள்‌ மற்றும்‌ விழாக்கள்‌ போன்ற தகவல்களை இணையத்தில்‌ வெளியிடுதல்‌.

2. திருக்கோயில்களில்‌ நடைமுறையில்‌ உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன்‌ (Scan) செய்து இணையத்தில்‌ பதிவேற்றம்‌ (Uploading) செய்தல்‌

3. திருக்கோயில்‌ நிலங்கள்‌ மற்றும்‌ கட்டடங்களின்‌ விவரங்களை, பொதுமக்கள்‌ கணினிவழியில்‌ பார்வையிடும்‌ வகையில்‌ புவிசார்குறியீடு செய்து இணையத்தில்‌ வெளியிடுதல்‌. (Publishing)

4. திருக்கோயில்‌ பெயரில்‌ உள்ள அசையும்‌ மற்றும்‌ அசையா சொத்துகளின்‌ உரிமை ஆவணங்களை ஸ்கேன்‌ (Scan) செய்து இணையத்தில்‌ பதிவேற்றுதல்‌ (Uploading).

5. திருக்கோயில்‌ சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல்‌, நியாய வாடகை வசூலித்தல்‌ மற்றும்‌ திருக்கோயில்‌ வருவாயினங்களைப்‌ பெருக்கும்‌ வகையில்‌ விரைந்து செயல்படுதல்‌.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌ திரு. ஜெ. குமரகுருபரன்‌, இ.ஆ.ப., அவர்கள்‌, கூடுதல்‌ ஆணையர்‌ நிர்வாகம்‌, திருமதி பெ.இரமண சரஸ்வதி இ.ஆ.ப., அவர்கள்‌, கூடுதல்‌ ஆணையர்‌ (விசாரணை) திருமதி ந.திருமகள்‌, இணை ஆணையர்கள்‌, மற்றும்‌ தலைமையிட அலுவலர்கள்‌ கூட்டத்தில்‌ கலந்து கொண்டனர்‌.

வெளியீடு : மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை - 34.