Monday, May 24, 2021

Sale of Vegetables and Fruits During the Complete Lockdown

 Honble Minister for Agriculture and Farmers Welfare chaired a meeting on the sale of vegetables and fruits during the complete lockdown due to COVID-19

செய்தி வெளியீடு எண்‌: 137 

நாள்‌:23.05.2021

செய்தி வெளியீடு

கோவிட்‌ 19 முழு ஊரடங்கு 24.05.2021 முதல்‌ 31.05.2021 வரை காய்கறி மற்றும்‌ பழங்கள்‌ பொதுமக்களுக்கு விற்பனை செய்தல்‌ மாண்புமிகு வேளாண்மை - உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ திரு. எம்‌.ஆர்‌.கே. பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ 23.05.2021 அன்று கோவிட்‌ 19 முழு ஊரடங்கினை தொடர்ந்து பொது மக்களுக்கு காய்கறி மற்றும்‌ பழங்கள்‌ விற்பனை செய்வது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர்‌ மற்றும்‌ அரசு முதன்மை செயலாளர்‌ மருத்துவர்‌ கே. கோபால்‌, இ.ஆ.ப., வேளாண்மை - உழவர்‌ நலத்துறை இயக்குநர்‌, திரு. வ. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப. வேளாண்மை விற்பனை மற்றும்‌ வேளாண்‌ வணிகத்‌ துறை இயக்குநர்‌ திரு. க.வீ. முரளிதரன்‌, இ.ஆ.ப, மற்றும்‌ உயர்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வு கூட்டம்‌ மேற்கொண்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • தமிழ்நாட்டிலுள்ள மக்கள்‌ தொகை சுமார்‌ 7 கோடி
  • காய்கறி மற்றும்‌ பழங்கள்‌ தேவை தினந்தோறும்‌ சுமார்‌ 18,000 மெட்ரிக்‌ டன்‌ என எதிர்பாக்கப்படுகிறது.
  • சென்னையை பொறுத்தவரை தினம்‌ தோறும்‌ 1500 மெட்ரிக்‌ டன்‌ அளவிற்கு காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ தேவைப்படும்‌.
  • சென்னை மாநகரத்தில்‌ மட்டும்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ 1610 வாகனங்கள்‌ மூலம்‌ தினந்தோறும்‌ 1160 மெட்ரிக்‌ டன்‌ அளவிற்கு காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ விநியோகம்‌ செய்ய ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தின்‌ ஏனைய பகுதிகளில்‌ 2770 வாகனங்கள்‌ மூலம்‌ 2228 மெட்ரிக்டன்‌ அளவிற்கு காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தேவையான காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ அருகில்‌ உள்ள விவசாயிகளிடம்‌ இருந்து நேரடியாக கொள்முதல்‌ செய்து விநியோகம்‌ செய்யப்படும்‌.
  • தமிழகத்தில்‌ காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ விநியோகம்‌ தொடர்பான தகவல்‌ தெரிந்து கொள்ள 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள்‌ பயன்படுத்திக்‌ கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளை கண்காணித்திட தலைமையகத்தில்‌ தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்மை விற்பனைத்‌ துறை சார்ந்த அலுவலர்கள்‌ அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ விநியோகத்‌ தொடரை மேலும்‌ விரிவுபடுத்திட
      • நின்சாகார்ட்‌,
      • வேகூல்‌,
      • பழமுதிர்‌ நிலையம்‌,
      • தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்‌ இணையம்‌,
      • அஹிம்சா விவசாயிகள்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனம்‌ .
போன்றவற்றையும்‌ ஈடுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.
  • தமிழகம்‌ முழுவதும்‌ 194 குளிர்பதன இடங்கள்‌ 18,527 மெட்ரிக்‌ டன்‌ கொள்ளளவில்‌ உள்ளன. அதில்‌ தற்போழுது சுமார்‌ 3000 மெட்ரிக்‌ டன்‌ மட்டுமே விளை பொருட்கள்‌ சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார்‌ 15527 மெட்ரிக்டன்‌ கொள்ளளவை அருகில்‌ உள்ள விவசாயிகள்‌ தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்கலாம்‌.
  • உள்ளாட்சித்‌ துறை மற்றும்‌ கூட்டுறவுத்‌ துறையுடன்‌ இணைந்து உள்ளாட்சி அமைப்புகள்‌ மூலமாகவும்‌ காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ விநியோகம்‌ செய்ய ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.
  • மக்களின்‌ அன்றாட காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ தேவையை பூர்த்தி செய்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கியுள்ள அறிவுரைப்படி தமிழகம்‌ முழுவதும்‌ விரிவான பல்வேறு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.
  • தினமும்‌ காலை 6.00 மணி முதல்‌ மதியம்‌ 12.00 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும்‌ பழங்கள்‌ விற்பனை செய்யப்படும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9




CM has Sanctioned Relief Assistance to Fishermen Families During Fishing Ban Period

Honble Chief Minister has sanctioned Relief Assistance to fishermen families during Fishing Ban Period.

செய்தி வெளியீடு எண்‌: 139 

நாள்‌:23.05.2021

செய்தி வெளியீடு

தமிழகத்தின்‌ கடல்‌ மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத்‌ தொகை ரூ.5000-வழங்கிட தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ ஆணையிடப்பட்டுள்ளது

 கடல்‌ மீன்வளத்தைப்‌ பேணிக்காத்திட, தமிழ்நாட்டில்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ கிழக்குக்‌ கடற்கரை பகுதியில்‌ ஏப்ரல்‌ 15ஆம்‌ நாளன்று தொடங்கி ஜுன்‌ 14ஆம்‌ நாள்‌ வரையிலும்‌, மேற்கு கடற்கரை பகுதியில்‌ ஜுன்‌ 1ம்‌ நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம்‌ நாள்‌ வரையிலும்‌ 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம்‌ அமல்படுத்தப்பட்டு வருகிறது.


மீன்பிடி தடைக்காலத்தின்‌ போது மீன்பிடி விசைப்படகுகள்‌/ இழுவலைப்படகுகளில்‌ மீன்பிடிப்பு செய்யும்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள்‌ முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம்‌ பாதிக்கப்படுவதால்‌ மீனவர்கள்‌ தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச்‌ செல்ல 2008ம்‌ ஆண்டு முதல்‌ மீன்பிடி தடைக்கால நிவாரணம்‌ வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி நடப்பாண்டிற்கு (2021ம்‌ ஆண்டு) 1.72 இலட்சம்‌ கடல்‌ மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத்‌ தொகை தலா ரூ.5000- வீதம்‌ வழங்கிடும்‌ பொருட்டு ரூபாய்‌ 86.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கிழக்கு கடற்கரை பகுதி மாவட்டங்களான திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி (குதி) ஆகியவற்றைச்‌ சேர்ந்த 1,46,598 பயனாளிகளும்‌, மேற்கு கடற்கரைப்‌ பகுதி மாவட்டமான கன்னியாகுமரியைச்‌ சேர்ந்த 25,402 பயனாளிகளும்‌ ஆக மொத்தம்‌ 172,000 பயனாளிகள்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயனடைவார்கள்‌. 

மீன்பிடி தடைக்கால நிவாரணத்‌ தொகையானது மீனவர்களின்‌ வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும்‌ என மாண்புமிகு மீன்வளம்‌ - மீனவர்‌ நலத்துறை மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்‌ திரு. அனிதா ஆர்‌. ராதாகிருஷ்ணன்‌ அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9

Sunday, May 23, 2021

Complete Lockdown - Relaxation to Industries Manufacturing Essential Commodities

 Complete Lockdown - Relaxation to Industries manufacturing essential commodities, medical supplies and Continuous Process Industries

செய்தி வெளியீடு

கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்றைத்‌ தடுப்பதற்காக, 24.5.2021 அன்று முதல்‌ முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்‌ போது மிக இன்றியமையாத சில பணிகளுக்கு மட்டும்‌ விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளைப்‌ பொறுத்தவரை அத்தியாவசியப்‌ பொருட்களைத்‌ தயாரிக்கும்‌ தொழிற்சாலைகள்‌ (Industries Manufacturing Essential Commodities and Medical Supplies) மற்றும்‌ தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர்‌ செயல்முறைத்‌ தொழிற்சாலைகள்‌ (Continuous Process Industries) ஆகியவை மட்டும்‌ செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல்‌ துறைமுகங்கள்‌, விமான நிலையங்கள்‌, சரக்கு கிடங்குகள்‌, தொலை தொடர்பு சேவைகள்‌, அத்தியாவசிய தரவு மையங்கள்‌ பராமரிப்பு பணிகளும்‌ அனுமதிக்கப்பட்டுள்ளன.



இந்த ம்சாழிந்சலை பணியாளர்கள்‌ பணிக்கு சென்று வர E - Registration முறையில்‌ https://eregister.tnega.org/ பதிவு செய்துள்ளார்கள்‌. ஏற்கனவே பதிவு செய்துள்ள வாகனங்களில்‌ நான்கு சக்கர வாகனங்கள்‌ (Buses, Vans, Tempos and Cars) ஆகியவற்றுக்கு மட்டும்‌ அனுமதி புதுப்பித்து அளிக்கப்படும்‌. இரு சக்கர வாகனங்களில்‌ பணியாளர்கள்‌

பணிக்கு சென்று வர 25.5.2021 முதல்‌ அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌. ஆதலால்‌, இத்தொழிற்சாலைகள்‌ தங்கள்‌ பணியாளர்களை பணிக்கு அழைத்து வர நான்கு சக்கர வாகனங்களை (Buses, Vans, Tempos and Cars) ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இந்த நான்கு சக்கர வாகனங்களை (E - Registration) முறையில்‌ https://eregister.tnega.org/ வலைதளத்தில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. E - Registration செய்து அதனடிப்படையில்‌ வழங்கப்பட்ட பாஸ்களின்‌ அடிப்படையில்‌ காவல்‌ துறையினர்‌ இவ்வாகனங்களை அனுமதிப்பர்‌.

இரு சக்கர வாகனங்களின்‌ அனுமதிகளை தவிர மற்ற விலக்களிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான E - Registration தானாகவே புதுப்பிக்கப்படும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை - 9

Saturday, May 22, 2021

To Apply Epass



 

CM Welfare Fund Online

     TN CMPRF accepts online contribution through this Portal. You can click the Make Contribution option and fill the online donation form. It will lead you to the payment gateway where you can pay through 50+ Net Banking / Major Credit and Debit Cards / Wallets / Cash Card / UPI.


1. Online Donation through this portal: TN CMPRF accepts online contribution through 50+ Net Banking / Major Credit and Debit Cards / Wallets / Cash Card / UPI. Receipt can be taken immediately after successful contribution and Receipt in PDF file as an attachment will be sent to the email of the contributor.


2. Donation can also be made using UPI-VPA as tncmprf@iob. Contributors can e-mail the details of transactions along with Name, Address, Mobile Number and E-mail Id to jscmprf[at]tn[dot]gov[dot]in for obtaining receipt.


3. Offline donation through Cheque / Demand Draft drawn in favour of “Chief Minister’s Public Relief Fund” to be sent to The Joint Secretary to Government and Treasurer, Chief Minister’s Public Relief Fund, Finance (CMPRF) Department, Secretariat, Chennai – 600 009. Tamil Nadu. India along with Name, Address, Mobile No. and E-mail ID of the contributor.

Click here for CM WELFARE FUND

Expenditure Report till APRIL 2021