Wednesday, May 26, 2021

Decisions of CM based on the Report Submitted by the Commission of Inquiry about Incident of Sterlite Factory

Decisions of the Honble Chief Minister based on the report submitted by the Commission of Inquiry to inquire into the causes and circumstances leading to the opening of fire resulting in death and injuries to persons at Sterlite Factory, Thoothukudi

செய்தி வெளியீடு எண்‌:157 

நாள்‌:26.05.2021

செய்தி வெளியீடு

தூத்துக்குடியில்‌ 22-5-2018 அன்று ஸ்டெர்லைட்‌ தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்‌ கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின்‌ காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள்‌ குறித்தும்‌, பொது மற்றும்‌ தனியார்‌ சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள்‌ குறித்தும்‌ விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன்‌ அவர்கள்‌ தலைமையிலான விசாரணை ஆணையத்தின்‌ இடைக்கால அறிக்கை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களிடம்‌ 14-5-2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.


சென்னை உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன்‌ அவர்கள்‌ தலைமையிலான விசாரணை ஆணையத்தின்‌ இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப்‌ பரிசீலித்தது. ஆணையத்தின்‌ பரிந்துரையின்‌ அடிப்படையில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 21-5-2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய புலனாய்வுத்‌ துறைக்கு மாற்றம்‌ செய்யப்பட்ட வழக்குகளைத்‌ தவிர 38 வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெற்றிடவும்‌, அதில்‌ தொடர்புடைய கீழ்க்கண்ட அரசியல்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ மீதான வழக்குகளையும்‌ திரும்பப்‌ பெற்றிட உத்தரவிட்டார்கள்‌.

 1.திரு.ஆர்‌.நல்லகண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர்‌, இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி.

2. திரு.வைகோ, பொதுச்‌ செயலாளர்‌, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌.

3. திரு.கே.பாலகிருஷ்ணன்‌, மாநில பொதுச்‌ செயலாளர்‌, இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி (மார்க்சிஸ்ட்‌)

4. திரு. டி.டி.வி.தினகரன்‌, துணைப்‌ பொதுச்‌ செயலாளர்‌, அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகம்‌.

5. திருமதி பிரேமலதா விஜயகாந்த்‌, மாநில மகளிரணித்‌ தலைவர்‌, தேசிய முற்போக்கு திராவிட கழகம்‌.

6. திரு. எல்‌.கே.சுதீஷ்‌, மாநில துணைச்‌ செயலாளர்‌, தேசிய முற்போக்கு திராவிட கழகம்‌.

7 திரு.௮னிதா ஆர்‌.இராதாகிருஷ்ணன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ மற்றும்‌ தற்போது மாண்புமிகு அமைச்சர்‌ (மீன்வளம்‌) , தூத்துக்குடி மாவட்டச்‌ செயலாளர்‌ (தெற்கு), திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌

8. திரு.அழகு முத்துபாண்டியன்‌, மாவட்டச்‌ செயலாளர்‌, இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி.

9. திரு. ராஜா, மாவட்டச்‌ செயலாளர்‌, இந்திய கம்யூனிஸ்ட்‌ கட்சி (மார்க்சிஸ்ட்‌)

10. திரு.ஹென்றி தாமஸ்‌, மாவட்டச்‌ செயலாளர்‌, அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகம்‌.

ரர. திருமதி பூமயில்‌, மாவட்டச்‌ செயலாளர்‌, இந்திய ஜனநாயக மகளிர்‌ சங்கம்‌ (DWFI)

12. திரு.ஆர்தர்‌ மச்சோடா, துணைச்‌ செயலாளர்‌, ஆம்‌ ஆத்மி கட்சி.

13. திரு.பாலசிங்‌, ஒன்றியச்‌ செயலாளர்‌, திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9


 

Internship Training Orders issued for 80 Foreign Medical Graduates

 ABSTRACT

Medical Education — Pursuing of Compulsory Rotatory Residential Internship Training Orders issued for 80 Foreign Medical Graduates - Re-accommodation of 80 Foreign Medical Graduates to the institutions under the control of Director of Medical Education — Permitted - Orders — Issued. 

HEALTH AND FAMILY WELFARE (MCA-1) DEPARTMENT

G.O, (Ms) No. 254 

Dated: 24.05.2021

Read:

G.O. (D) No.1258, Health and Family Welfare (MC2) Department, dated 20.11.2014.

G.O.(Rt) No.453, Health and Family Welfare Department, dated 31.03.2021.

G.O.(Rt) No.454, Health and Family Welfare Department, dated 31.03.2021.

G.O.(Rt) No.456, Health and Family Welfare Department, dated 31.03.2021.

G.O.(Rt) No.458, Health and Family Welfare Department, dated 01.04.2021.

 G.O.(Rt) No.500, Health and Family Welfare Department, dated 15.04.2021.

From the Tamil Nadu Medical Council, Chennai, Letter Ref. No. TNMC / G.No. 76/2021, dated 17.04.2021.

From the Director of Medical Education, letter Ref. No.29555/MEII/2/2021, dated 15.05.2021.

ORDER :-

1. In Government order second to sixth read above, the Government have already permitted 80 Foreign Medical Graduates to complete their one year period of Compulsory Rotatory Residential Internship Training at District Headquarters Hospitals in Kancheepuram, Cuddalore and Erode Districts, based on their submission of necessary certificate as detailed below:-

G.O.(Rt) No.453, Health and Family Welfare Department, dated 31.03.2021.

G.O.(Rt) No.454, Health and Family Welfare Department, dated 31.03.2021.

G.O.(Rt) No.456, Health and Family Welfare Department, dated 31.03.2021.

G.O.(Rt) No.458, Health and Family Welfare Department, dated 01.04.2021.

G.0.(Rt) No.500, Health and Family Welfare Department, dated 15.04.2021.



2. In the letter seventh read above, the Tamil Nadu Medical Council had instructed the Director of Medical and Rural Health Services that as large number of candidates have already been admitted for internship training at three District Headquarters Hospital in Kancheepuram, Cuddalore and Erode Districts, the officer in-charge may take suitable steps to repost candidates in excess of 40 per year, as required in Medical Council of India / National Medical Commission norms in curriculum, to other District Head quarters Hospital and other Medical Colleges.

3. In the letter eight read above, the Director of Medical Education has stated that due to COVID-19 pandemic situation and no Compulsory Rotatory Residential Internship Trainees have at present available to be posted for medical emergency and final MBBS students who are awaiting their results to enter Compulsory Rotatory Residential Internship Trainings and since there is acute shortage of Compulsory Rotatory Residential Internship Trainees in the Medical College Hospitals requested to give permission to post the above 80 Foreign Medical Graduate Candidates in the following institutions without obtaining ‘No Objection Certificate’ from the Tamil Nadu Dr. M.G.R. Medical University as a onetime measure to manage the present COVID crisis and also to provide adequate manpower to run the COVID hospitals / COVID Health Centres / COVID care Centres :-

Name of Institutions 

1. Madras Medical College - 25 Graduates

2. Government Stanley Medical College - 25 Graduates

3. Government Kilpauk Medical College - 15 Graduates

4. Government Medical College, Omandurar Government Estate - 15 Graduates

4. The Government after careful examination of the proposal of the Director of Medical Education, hereby permit the Director of Medical and Rural Health Services to reallocate 80 foreign Medical Graduates, who have already been permitted to undergo Compulsory Rotatory Residential Internship Training at three District Head quarters Hospital vide Government orders second to sixth read above to the following Government Medical Colleges as a onetime measure, subject to the conditions that, ‘No Objection Certificate’ shall be obtained from the Tamil Nadu Dr. M.G.R. Medical University in one or two batches and following fee structures allowed in Government first read above and that of the Tamil Nadu Dr. M.G.R. Medical University:-

Click Here for Full G.O

Monday, May 24, 2021

Honble Minister on Post Requests Facility in HRCE Website

 Statement of the Honble Minister for Hindu Religious and Charitable Endowments on Post Requests facility in HRCE Website

செய்தி வெளியீடு எண்‌: 146 நாள்‌:24.05.2021

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மாண்புமிகு மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலில்‌ மாண்புமிகு இந்துசமயஅறநிலையத்துறை அமைச்சர்‌ இரு. பி.கே. சேகர்பாபு அவர்களின்‌ செய்சுக்‌ குறிப்பு,

நாள்‌:24.5.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ இரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலில்‌, திருக்கோயில்கள்‌ தொடர்பாக பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்கள்‌ தங்களது கோரிக்கைகளைப்‌ பஇவு செய்துட ஏதுவாக "கோரிக்கைகளைப்‌ ப௫விடுக" எனும்‌ புதிய இணையவழி திட்டம்‌ அறிமுகம்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ இரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌, இந்துசமயஅறறிலையத்‌ துறை மற்றும்‌ இந்துசமய அறநிலையத்துறையின்‌ கழ்‌ இயங்கும்‌ இருக்கோயில்கள்‌ ஆகியவற்றின்‌ செயல்பாட்டில்‌ முழு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்‌ என உத்தரவிட்டுள்ளார்கள்‌. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவிற்கு ஏற்ப இத்துறை மற்றும்‌ இத்துறையின்‌ ஒழ்‌ உள்ள திருக்கோயில்கள்‌ செயல்பாட்டில்‌ வெளிப்படைத்தன்மையைக்‌ கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருஇன்றன. அவற்றுள்‌ ஒன்றானது கீழ்கண்ட அறிவிப்பு:

இந்துசமய அறநிலையத்‌ துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள திருக்‌கோயில்களுக்குச்‌ சொந்தமான நிலங்கள்‌, மனைகள்‌, மற்றும்‌ கட்டடங்கள்‌ பெருமளவில்‌ உள்ளன. இவற்றின்‌ வாடகைத்‌ தொகை, குத்தகைத்‌ தொகை மற்றும்‌ குத்தகை நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து இந்துசமயஅறநிலையத்‌ துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள்‌ வரப்‌ பெறுஇன்றன. மேலும்‌ இருக்கோயில்களின்‌ திருப்பணிகள்‌, இருவிழாக்கள்‌ மற்றும்‌ இதர வைபவங்கள்‌ குறித்தும்‌ பக்தர்களும்‌ பொதுமக்களும்‌ பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்‌ வைக்கின்றனர்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி இருக்கோயில்கள்‌ தொடர்பாக பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்கள்‌, தங்களது கோரிக்கைகளைப்‌ பஇவு செய்துட ஏதுவாக  "கோரிக்கைகளைப்‌ பதுவிடுக” எனும்‌ ஒர்‌ புதிய திட்டம்‌ இந்துசமயஅறறிலையத்‌ துறையின்‌ இணையதளமான hrce.tn.gov.in/ ல்‌ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்கள்‌ "கோரிக்கைகளைப்‌ பதிவிடுக" எனும்‌ இட்டத்தினைப்‌ பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளைப்‌ பதிவிடுமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

கோரிக்கைகளைப்‌ பதிவு செய்ய விரும்புவோர்‌ தங்களது அலைபேசி எண்‌ (கட்டாயம்‌) மற்றும்‌ மின்னஞ்சல்‌ முகவரி (கட்டாயம்‌ அல்ல) ஆஇயவற்றைக்‌ குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்‌. கோரிக்கைகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌. தேவைப்படின்‌ ஸ்கேன்‌ (Scan) செய்யப்பட்ட ஆவணங்களையும்‌ பதிவேற்றம்‌ செய்யலாம்‌. கோரிக்கைகளைப்‌ பதுவு செய்த பின்னர்‌ தங்களது அலைபேசி எண்‌ மற்றும்‌ மின்னஞ்சல்‌ முகவரிக்கு ஓர்‌ ஒப்புகை அட்டை அனுப்பப்படும்‌. தங்களது கோரிக்கைகள்‌ இந்துசமயஅறறிலையத்‌ துறை ஆணையருக்கு தக்க நடவடிக்கை எடுக்கும்‌ பொருட்டு இணைய வழியாக அனுப்பப்படும்‌.



கோரிக்கைகளின்‌ மீதான நடவடிக்கைகள்‌ இந்துசமய அறநிலையத்‌ துறை ஆணையரின்‌ நேரடி கண்காணிப்பில்‌ இருக்கும்‌. அதுமட்டுமன்றி, கோரிக்கைகளின்‌ மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்‌ விவரம்‌ என்னால்‌ விரிவாக ஆய்வு செய்யப்படும்‌. சமர்ப்பிக்கப்படும்‌ கோரிக்கைகளின்‌ மீது 60௦ தினங்களுக்குள்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌. பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்கள்‌, ஒப்புகை அட்டையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள பஇவுஎண்ணை உள்ளீடு செய்து கோரிக்கைகள்‌ மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம்‌ வாயிலாக அறிந்து கொள்ளலாம்‌.

LINK to Post the Request

எனவே, பொதுமக்கள்‌ மற்றும்‌ பக்தர்கள்‌ இந்த இட்டத்தினை நன்கு பயன்படுத்தி துறை மற்றும்‌ இருக்கோயில்கள்‌ செயல்பாட்டினை மேம்படுத்திட உதவிடுமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9




On sale of fruits and vegetables to public in mobile shops during complete lockdown

 On sale of fruits and vegetables to public in mobile shops during complete lockdown

செய்தி வெளியீடு எண்‌: 147

 நாள்‌:24.05.2021

செய்தி வெளியீடு

விவசாயிகளின்‌ விளைபொருட்களை பொது மக்களுக்கு விற்பனை செய்ய வேளாண்மை, தோட்டக்கலை மற்றும்‌ வேளாண்‌ விற்பனை துறைகள்‌ அறிவிப்பு - குறித்த செய்தி வெளியீடு தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்‌ தடுப்பிற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்‌ ஒரு பகுதியாக 24.05.2021 முதல்‌ 31.05.2021 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சமயத்தில்‌ பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ தடையின்றி கிடைக்க வாகனங்கள்‌ மூலம்‌ விற்பனை செய்ய மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்‌. மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்‌ விற்பனைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள்‌ மற்றும்‌ இ-வணிக நிறுவனங்கள்‌ மூலமாக சென்னை மாநகராட்சி மற்றும்‌ மாவட்டங்களின்‌ பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள்‌ மூலமாக காய்கறிகள்‌, பழங்கள்‌ பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில்‌ தினமும்‌ 2000 வாகனங்கள்‌ மூலம்‌ 1,500 மெ.டன்‌ காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்களும்‌, இதர மாவட்டங்களில்‌ சுமார்‌ 5,000 வாகனங்கள்‌ மூலம்‌ 3,500 மெ.டன்‌ காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்களும்‌ ஆக மொத்தம்‌ 7,000 வாகனங்கள்‌ மூலம்‌ சுமார்‌ 5,000 மெ.டன்கள்‌ விநியோகம்‌ செய்திட ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்களை ஆங்காங்கே விவசாயிகள்‌ உற்பத்தி செய்யும்‌ விளைபொருட்களை விவசாயிகள்‌, விவசாய ஆர்வலர்‌ குழுக்கள்‌, விவசாய உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌ மூலமாக கொள்முதல்‌ செய்து விற்பனை செய்ய தேவையான ஏற்பாடுகள்‌ தமிழகம்‌ முழுவதும்‌ செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில்‌ உள்ள அனைத்து உழவர்‌ சந்தைகளிலும்‌ விவசாயிகளால்‌ கொண்டு வரப்படும்‌ காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்களை அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள்‌ மூலம்‌ நகரின்‌ இதர பகுதிகளில்‌ விற்பனை செய்திட ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌, காய்கறிகள்‌, பழங்கள்‌ உற்பத்தியானவற்றை ஒரு இடத்திலிருந்து சந்தைகளுக்கு கொண்டு செல்லவும்‌, ஆங்காங்கே எடுத்து செல்லவும்‌ தமிழக அரசு தேவையான அனுமதி வழங்கியுள்ளது.

எனவே, விவசாய பெருமக்கள்‌ தாங்கள்‌ விளைவித்துள்ள காய்கறிகள்‌, பழங்கள்‌ உள்ளிட்ட பொருட்களை சந்தைப்படுத்தி அல்லது அடுத்த மாவட்டங்களுக்கு எடுத்து செல்ல தேவையான அனுமதி பெறவும்‌ மற்றும்‌ உள்ளீடு ஏற்பாடுகள்‌ செய்யவும்‌ அந்தந்த மாவட்டத்தில்‌ அமைந்துள்ள கீழ்கண்ட வேளாண்‌ விற்பனைத்துறை துணை இயக்குநர்கள்‌, தோட்டக்கலைத்துறை இணை /துணை இயக்குநர்களை தொடர்பு கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.



மேலும்‌, வேளாண்‌ விற்பனை மற்றும்‌ வேளாண்‌ வணிகத்துறை, தோட்டக்கலைத்துறைகளின்‌ தலைமையிடத்தில்‌ இயங்கி வரும்‌ கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள்‌ மூலமாகவும்‌ தகவல்‌ மற்றும்‌ உதவிகள்‌ பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேளாண்‌ விற்பனைத்துறை கட்டுப்பாட்டு அறை எண்‌: 044-22253884

தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டு அறை எண்‌: 1800 425 4444

வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டு அறை எண்‌ -044-28594338

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

COVID Relief Fund to the Public from Civil Supplies and Consumer Protection Department

From the Commissioner, Civil Supplies and Consumer Protection Department

செய்தி வெளியீடு எண்‌: 149 

நாள்‌: 24.05.2021

செய்தி வெளியீடு

உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை செய்தி வெளியீடு

1. கோவிட்‌-19 பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல்‌ மேலும்‌ ஒரு வார காலத்திற்கு எவ்விதமான தளர்வுகள்‌ இல்லாத முழு ஊரடங்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2. இச்சூழ்நிலையில்‌, பொது மக்களுக்கு தேவைப்படும்‌ அத்தியாவசியப்‌ இன்றியமையாப்‌ பண்டங்களாகிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத்திட்ட பண்டங்களை தொடர்ந்து பெறும்‌ பொருட்டு கோவிட்‌-19 பெருந்தொற்கு நிவாரணத்‌ தொகை  ரூ.2000/-த்‌த, இதுவரை பெறாதவர்கள்‌ நியாய விலைக்‌ கடைகளிலிருந்து பெறும்‌ வண்ணம்‌ 25.05.2021 முதல்‌ தளர்வுகள்‌ ஏதுமற்ற முழு ஊரடங்கு சூழ்நிலையிலும்‌, அனைத்து நியாய விலைக்‌ கடைகளிலும்‌ தொடர்ந்து காலை 08.00 மணிமுதல்‌ நண்பகல்‌ 12.00 மணிவரை விநியோகம்‌ செயல்படுத்தபட வேண்டும்‌ என்று மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.



3. அவ்வகையில்‌, உணவுத்துறைப்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ சுமைதூக்கும்‌ தொழிலாளர்கள்‌ உட்பட அத்தியாவசியப்‌ பணிகளுக்காக பயணிக்க நேரும்‌ அலுவலர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்படும்‌.

4. குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்றியமையாப்‌ பண்டங்கள்‌ மற்றும்‌ நிவாரணத்‌ தொகை தடையின்றி வழங்கும்‌ பொருட்டு வழங்கப்பட்டுள்ள இவ்வுத்தரவினை சீரிய முறையில்‌ எவ்வித தொற்று பாதிப்புமின்றி செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களுக்கும்‌ உரிய அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளது.

5. பொது மக்களும்‌ இத்திட்டத்தினை உரிய பாதுகாப்பு முறையில்‌ பயன்படுத்தி முகக்கவசம்‌ அணிந்து சமூக இடைவெளியுடன்‌ நிலையான வழிகாட்டி நடைமுறையினை பின்பற்றி அவர்களுக்கு உரிய இன்றியமையாப்‌. பண்டங்களை நியாய விலைக்‌ கடைகளில்‌ பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

6. பொது மக்களின்‌ நலன்‌ கருதி இத்தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில்‌ பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுடன்‌ அனைவரும்‌ செயல்பட வேண்டும்‌ என்றும்‌, நியாய விலைக்‌ கடைக்கு செல்லும்‌ போது அதற்குரிய ஆதாரமாக குடும்ப அட்டையுடன்‌ தவறாது செல்ல வேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

ஆணையாளர்‌

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9