Thursday, June 10, 2021

Public Distribution System - On Extra Rice for Rice Card Holders

 செய்தி வெளியீடு எண்‌:250

  நாள்‌:08.06.2021

செய்தி வெளியீடு

    தமிழகத்தில்‌ 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள்‌ உள்ளனர்‌. அதில்‌ 18.64 லட்சம்‌ அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவுக்கு (AAY) மாதம்தோறும்‌ அதிகபட்சம்‌ 35 கிலோவும்‌, 93 லட்சம்‌ முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு (PHH) நபர்‌ ஒருவருக்கு தலா 5 கிலோவும்‌, எஞ்சிய முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு (NPHH) 20 கிலோ விலையில்லா அரிசியும்‌ வழங்கப்படுகின்றன. அரிசி குடும்ப அட்டைதாரர்கள்‌ தேவைக்கு ஏற்ப, புழுங்கல்‌ அரிசி, பச்சரிசி என வாங்கி கொள்ளலாம்‌.

    கொரோனா பரவலின்‌ இரண்டாம்‌ அலையால்‌, மக்கள்‌ பாதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, மே மற்றும்‌ ஜுன்‌ மாதங்களில்‌, முன்னுரிமை மற்றும்‌ அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்படும்‌ உரிம அளவுடன்‌ நபர்‌ ஒருவருக்கு கூடுதலாக தலா 5 கிலோ தானியங்களை விலையில்லாமல்‌ வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

     இதற்காக, மத்திய தொகுப்பில்‌ இருந்து, தமிழகத்திற்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும்‌ முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள்‌ மட்டுமின்றி, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களையும்‌ சேர்த்து கூடுதல்‌ அரிசி வழங்கி வருகிறது.

    உதராணமாக, ஈரலகு உள்ள குடும்பத்திற்கு 20 கிலோ, 3 அலகு உள்ள குடும்பத்திற்கு 30 கிலோ என்ற அடிப்படையில்‌ ஏற்கனவே வழங்கப்படும்‌ உரிம அளவுடன்‌ சேர்த்து, இரு மடங்கு அரிசி கிடைக்கும்‌. மே மாதம்‌ வழங்க வேண்டிய இந்த கூடுதல்‌ அரிசி விநியோகம்‌ அடுத்த மாதம்‌ (ஜூலை, 2021) சேர்த்து வழங்கப்படும்‌.

    எனவே, மத்திய அரசின்‌ கூடுதல்‌ அரிசியும்‌ சேர்த்து, அரிசி குடும்ப அட்டையில்‌ உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜுன்‌ மாதத்தில்‌ மொத்தமாக விநியோகிக்கப்படும்‌ அரிசி விவரங்கள்‌ நியாயவிலைக்‌ கடைகளில்‌ உள்ள விளம்பரப்பலகைகளில்‌ விளம்பரப்படுத்தப்படும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Honble Minister for Rural Development chaired a meeting on providing loan facilities for Self Help Groups

 செய்தி வெளியீடு:249

 நாள்‌ 08.06.2021

Honble Minister for Rural Development chaired a meeting on providing loan facilities for Self Help Groups 

      மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு. கே.ஆர்‌. பெரியகருப்பன்‌ அவர்களின்‌ தலைமையில்‌ சுய உதவிக்‌ குழுக்களுக்கு வங்கிக்‌ கடன்‌ இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில்‌ நுண்நிதி நிறுவனங்கள்‌ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு. கேஆர்‌. பெரியகருப்பன்‌ அவர்களின்‌ தலைமையில்‌, சுய உதவிக்‌ குழுக்களுக்கு வங்கிக்‌ கடன்‌ இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில்‌ நுண்நிதி நிறுவனங்கள்‌ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து, மகளிர்‌ திட்ட அலுவலர்கள்‌, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள்‌ மற்றும்‌ மண்டல மேலாளர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று (08.06.2021) சென்னை, நுங்கம்பாக்கம்‌, அன்னை தெரசா மகளிர்‌ வளாக கூட்டரங்கில்‌ நடைபெற்றது.

      தமிழகத்தில்‌ உள்ள மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ மற்றும்‌ பெண்களுக்கு குறு நிதி நிறுவனங்கள்‌ கடன்‌ வழங்குவதிலும்‌, கடனை திரும்ப வசூலிப்பதிலும்‌ எழுந்துள்ள சிக்கல்கள்‌ குறித்த விபரங்கள்‌ அரசின்‌ கவனத்திற்கு வந்ததால்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 19.05.2021 அன்று மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ அவர்களுக்கும்‌, இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ ஆளுநருக்கும்‌ கடிதம்‌ வாயிலாக சுய உதவிக்‌ குழுக்களுக்கு கடன்‌ வழங்குவதிலும்‌, சுய உதவிக்‌ குழுக்கள்‌ கடனை திரும்பச்‌ செலுத்துவதிலும்‌ சலுகைகள்‌ வழங்குமாறு கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

     மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி, 13.05.2021 அன்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடனும்‌, 21.05.2021 அன்று நுண்நிதி நிறுவனங்களுடனும்‌, 25.05.2021 அன்று சிறு கடன்‌ வழங்கும்‌ வங்கிகளுடனும்‌ மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ காணொலி மூலம்‌ கலந்துரையாடல்‌ மேற்கொண்டார்‌.

      இந்நிலையில்‌, சுய உதவிக்‌ குழுக்களிடம்‌ நுண்நிதி நிறுவனங்கள்‌ கடன்‌ வசூலிப்பதில்‌ கடுமையான போக்கினை கையாளுகின்றன என்ற விபரம்‌ அரசின்‌ கவனத்திற்கு வந்துள்ளதைத்‌ தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தல்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு. கேஆர்‌. பெரியகருப்பன்‌ அவர்கள்‌, இன்று (08.06.2021) சுய உதவிக்‌ குழு உறுப்பினர்களின்‌ பிரச்சனைகளை காணொலி வாயிலாக கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்‌.

>>Click Here For More


Tuesday, June 8, 2021

Statement From the Honble Minister for Commercial Taxes and Registration

 Statement From the Honble Minister for Commercial Taxes and Registration

செய்தி வெளியீடு எண்‌:243

நாள்‌:07.06.2021

செய்தி வெளியீடு

       வணிகத்தில்‌ ஈரூபடாத: சில அமைப்புகள்‌ மற்றும்‌ அதனுடன்‌ தொடர்புடைய அமைப்புகளையும்‌ வரி செலுத்தும்‌ நபராக பதிவு செய்து அதன்‌ மூலம்‌ சரக்கு அல்லது சேவைகளை வழங்காமல்‌, போலிப்‌ பட்டியல்கள்‌ மூலம்‌ பயனாளருக்கு மோசடியாக உள்ளீட்ரு வரி வரவை மாற்றுவது தமிழ்நாரு வணிகவரித்‌ துறைக்கு தெரிய வருகிறது.


         இந்த பயனாளர்கள்‌ இது போன்ற மாயையான பரிவர்த்தனைகளில்‌ உள்ளீட்ரு வரி வரவு எருப்பதன்‌ மூலம்‌ அரசுக்கு வருவாய்‌ இழப்பு ஏற்பருத்தி வருகின்றனர்‌.

போலிப்‌ பட்டியல்கள்‌ வழங்குதல்‌, போலிப்‌ பட்டியலகள்‌ வழங்குவதற்கு எவ்வகையிலேனும்‌ உடந்தையாக இருத்தல்‌ மற்றும்‌ போலிப்‌ பட்டியல்கள்‌ மீது உள்ளீட்ரு வரி வரவு எருத்தல்‌ ஆகியவை தமிழ்நாரு சரக்கு மற்றும்‌ சேவை வரி சட்டம்‌, 2017-ன்படி அதிக பட்சமாக ஐந்து ஆண்டுகள்‌ வரை சிறைத்‌ தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும்‌. மேலும்‌ மோசடியாக பெறப்பட்ட உள்ளீட்ரு வரி வரவு, அதற்குண்டான வட்டி மற்றும்‌ அபராதத்‌ தொகையுடன்‌ வசூலிக்கப்பரும்‌.

       எனவே மேலே கூறப்பட்ட குற்றங்களில்‌ ஈருபரும்‌ நபர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ மீது தமிழ்நாரு சரக்கு மற்றும்‌ சேவை வரி சட்டம்‌, 2017-ன்படி கரும்‌ நடவடிக்கை எருக்கப்பரும்‌ என மாண்புமிகு வணிகவரி மற்றும்‌ பதிவுத்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்கள்‌.

மேலும்‌, இது போன்ற தவறுகளை கண்காணிக்கத்‌ தவறும்‌ வணிகவரித்‌ துறை அலுவலர்கள்‌ மீது துறை ரீதியாக நடவடிக்கை எருக்கப்பரும்‌ எனவும்‌ மாண்புமிகு அமைச்சர்‌ அவர்களால்‌ தெரிவிக்கப்பட்ருள்ளது.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

CM Handed Over Monthly Financial Assistance to Indigent Artists

 Honble Chief Minister handed over monthly financial assistance to indigent Artists through Tamil Nadu Iyal Isai Nataka Manram of Art and Culture Department.

செய்தி வெளியீடு எண்‌:244

 நாள்‌: 08.06.2021

செய்தி வெளியீடு

       மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (68.6.2021 தலைமைச்‌ செயலகத்தில்‌, நலிந்த நிலையில்‌ வாழும்‌ கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 1000 கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும்‌ அடையாளமாக 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்கள்‌.

           இதன்மூலம்‌, தமிழ்நாடு அரசின்‌ கலை பண்பாட்டுத்‌ துறையின்‌ தமிழ்நாடு இயல்‌ இசை நாடக மன்றம்‌ வாயிலாக பொருளாதாரத்தில்‌ நலிந்த நிலையில்‌ வாழும்‌ சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும்‌ மாதாந்திர நிதி உதவி திட்டத்தின்‌ கீழ்‌, 2018-2019 மற்றும்‌ 2019-2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தலா 500 நலிந்த கலைஞர்கள்‌ வீதம்‌ மொத்தம்‌ 1000 நலிந்த கலைஞர்கள்‌ பயனடைவார்கள்‌. மேலும்‌, நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌ மாதாந்திர நிதியுதவியை ரூ.2000/- த்திலிருந்து ரூ.3000/- ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள 6600 அகவை முதிர்ந்த செவ்வியல்‌ மற்றும்‌ கிராமியக்‌ கலைஞர்கள்‌ பயன்பெறுவார்கள்‌.

      இந்நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு தொழில்‌ துறை அமைச்சர்‌ திரு. தங்கம்‌ தென்னரசு, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ.இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும்‌ அறநிலையங்கள்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ மருத்துவர்‌ பி. சந்திரமோகன்‌, இ.ஆ.ப., கலை பண்பாட்டுத்‌ துறை ஆணையர்‌ திருமதி வ.கலையரசி, இ.ஆ.ப., தமிழ்நாடு இயல்‌ இசை நாடக மன்றத்‌ தலைவர்‌ திரு. தேவா, உறுப்பினர்‌ செயலாளர்‌ திரு. தங்கவேலு, இ.ஆ.ப.,ஓய்வு) மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

https://www.artandculture.tn.gov.in/

Friday, June 4, 2021

Statement of Finance Department on Re-Issue of TN Loan

 P.R.No: 218

 Date: 03.06.2021

Press Release

       FINANCE (WAYS AND MEANS - II) DEPARTMENT Government of Tamil Nadu has announced the Re-issue of 6.49% Tamil Nadu State Development Loan 2050 for Rs.1500.00 crore and 6.63% Tamil Nadu State Development Loan 2055 for Rs.1500.00 crore in the form of Stock to the Public by auction for an aggregate amount of Rs.3000.00 crore. 

     The auction will be conducted by the Reserve Bank of India at its Mumbai Office, Fort, Mumbai, on June 08, 2021. Competitive bids between 10.30 A.M. and 11.30 A.M. and non-competitive bids between 10.30 A.M. and 11.00 A.M. shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System on June 08, 2021.

 Additional Chief Secretary to Government,

 Finance Department.

Issued By: - DIPR, Secretariat, Chennai - 9.