Wednesday, June 23, 2021

Applications Invited from Tamil Scholars for Monthly Financial Assistance

 செய்தி வெளியீடு எண்‌:314

 நாள்‌:22.06.2021

செய்தி வெளியீடு

Press Released From the Director, Tamil Development Department - Applications invited from Tamil Scholars for Monthly Financial Assistance - Last date 31st August 2021.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும்‌ உதவித்‌ தொகை வழங்கும்‌ திட்டம்‌

தமிழ்நாடு அரசு தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ சார்பில்‌ அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ ஆண்டுதோறும்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ்‌ 2021 2022 ஆம்‌ ஆண்டிற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.


     விண்ணப்பிக்கத்‌ தகுதிகள்‌: 01.01.2021 ஆம்‌ நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்‌. ஆண்டு வருவாய்‌ ரூ.72,000/- க்குள்‌ இருக்க வேண்டும்‌. வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ இணைய வழியில்‌ (ஆன்லைன்‌) பெறப்பட்ட வருமானச்‌ சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள்‌ மற்றும்‌ தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச்‌ சான்று தமிழறிஞர்கள்‌ இரண்டு பேரிடம்‌ பெற்று விண்ணப்பத்துடன்‌ இணைக்கப்பட வேண்டும்‌. இதற்கான விண்ணப்பப்படிவம்‌ நேரிலோ அல்லது தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ வலைதளத்திலோ ( www.tamilvalarchithurai.com)  இலவசமாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. இத்திட்டத்தின்கீழ்‌ தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும்‌ உதவித்தொகையாக ரூ.3500/- , மருத்துவப்படி ரூ.500/- வழங்கப்படும்‌. விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில்‌ மாவட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ இயங்கிவரும்‌ மண்டிலத்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துணை இயக்குநர்கள்‌ / மாவட்டத்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துணை இயக்குநர்‌ / மாவட்டத்‌ தமிழ்‌ வளர்ச்சி உதவி இயக்குநர்‌ அலுவலகங்கள்‌ வாயிலாக அனுப்பப்பட வேண்டும்‌. சென்னை மாவட்டத்திலுள்ளவர்கள்‌ இயக்குநர்‌, தமிழ்‌ வளர்ச்சி இயக்ககம்‌, தமிழ்ச்சாலை, எழும்பூர்‌, சென்னை - 8 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பப்பெறலாம்‌. 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்‌: 31.8.2021.

Click for the Application

தமிழ்‌ வளர்ச்சி இயக்குநர்‌


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Release of Water From Vaigai Dam For Drinking Purpose

 Statement of the Additional Chief Secretary to Government, Public Works Department on release of water from Vaigai Dam for drinking purpose.



Monday, June 21, 2021

Contacts of Agricultural Engineering Department

AED Contacts:
Head Quarters
Thiru. R.Murugesan, M.E (Ag),Ph.D., Thiru.T.Chandhirasekar,M.E (Ag),
Chief Engineer ( Agrl.Engg),
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone : 044 - 29510722
Chief Engineer - River Valley Project,
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone : 044 - 29510522
Phone : 044 - 29510922, 29510822, 29515322
Fax : 044 - 29510622
email : aedce.tn@nic.in  




Provision of Solar Powered Pumping Systems

தமிழ்நாடு அரசு வேளாண்மைப்‌ பாறியியல்‌ துறை

விவசாயிகளுக்கு மின்கட்டமைப்பு சாராத, தனித்தியங்கும்‌ சூரியசக்தீ பம்பு செட்டுகள்‌ அமைத்துக்‌ கொடுக்கும்‌ தீட்டம்‌.

வேளாண்மையில் நீர்ப் பாசனத்திற்கு தேவையான எரிசக்தியினை உறுதி செய்யும்‌ நோக்கத்துடன்‌ 2013-14 ஆம்‌ ஆண்டு முதல்‌ சூரிய சக்தியால்‌ இயங்கும்‌ மோட்டார்‌ பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாய க்கு மானியத்தில்‌ அமைத்துக்‌ கொடுத்து வருகிறது.


சூரிய சக்தி பம்புசெட்டுகள்‌ மூலம்‌ மின்‌ இணைப்பு தேவையின்றி பகலில்‌ சுமார்‌ 8 மணிநேரம்‌ பாசனத்திற்கு தடையில்லா மின்சாரம்‌ பெற முடியும்‌.

மத்திய அரசு, பிரதம மந்தீரியின்‌ விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்‌ தீட்டத்தின்‌ (PM-KUSUM) கீழ்‌ தமிழகத்திற்கு 17,500 மின்கட்டமைப்பு சாராத, தனித்தியங்கும்‌ சூரியசக்தியால்‌ இயங்கும்‌ பம்புசெட்டுகளை வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறையின்‌ மூலம்‌ செயல்படுத்திட ஒப்புதல்‌ வழங்கியுள்ளது. இத்திட்டம்‌ தற்பொழுது 2020-21ஆம்‌ ஆண்டில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மானியம்‌ விபரம்‌

இத்திட்டம்‌ மத்திய அரசின்‌ 30 சதவீத மானியத்துடனும்‌ தமிழக அரசின்‌ 40 சதவீத மானியத்துடனும்‌ ஆக மொத்தம்‌ 70 சதவீத மானியத்தில்‌ செயல்படூத்தப்படவுள்ளது. மீதமுள்ள 3௦ சதவீதம்‌ விவசாயிகளின்‌ பங்களிப்பாகும்‌.

விலை விபரம்‌

இத்திட்டத்தின்‌ கீழ்‌ அமைக்கப்படவுள்ள பல்வேறு வகையான சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான விலை நீர்ணயம்‌ செய்தல்‌ மற்றும்‌ நீ! ல்‌ வ்கீகரித்தல்‌ ஆகியவை மத்திய அரசால்‌ கீழ்கண்டவாறு முடிவு செய்யப்பட்டூள்ளது.

Phamplets of Solar Pumb Price

CM Handed Over Cash Incentive of Swordsman Ms.Bhavani Devi.

 Tamil Nadu Honble Chief Minister handed over cash incentive of the swordsman Ms Bhavani Devi who is qualified for the Olympics, Japan to her mother in the function held at TANGEDCO, Head Quarters, Chennai

செய்தி வெளியீடு எண்‌:306

நாள்‌: 20.06.2021

ஜப்பானில்‌ நடைபெறவுள்ள ஒலிம்பிக்‌ போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாள்வீச்சு வீராங்கனை செல்வி பவானி தேவி அவர்களுக்கு 5 இலட்சம்‌ ரூபாய்‌ நிதியுதவிமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

தமிழகத்தைச்‌ சேர்ந்த செல்வி பவானி தேவி அவர்கள்‌, தமிழகத்தின்‌ பாரம்பரிய கலையான வாள்வீச்சில்‌ பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில்‌ பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார்‌. அவரின்‌ ஊக்கத்தினையும்‌, விடாமுயற்சியினையும்‌ கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ மின்பகிர்மானக்‌ கழகத்தில்‌ "விளையாட்டு அலுவலர்‌" பதவி வழங்கப்பட்டுள்ளது.


செல்வி பவானி தேவி அவர்கள்‌ தற்போது ஐப்பான்‌ நாட்டின்‌, டோக்கியோ மாநகரில்‌ நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக்‌ போட்டியில்‌ கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்‌. இவர்‌ இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்‌ வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்‌ பெண்மணி ஆவார்‌. அவர்‌ தேவையான பயிற்சிகள்‌ பெற அனைத்து உதவிகளையும்‌ தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. அவர்‌ தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில்‌ பயிற்சி பெற்று வருகிறார்‌. மேலும்‌ சில பயிற்சிகள்‌ பெற செல்வி பவானி தேவி அவர்கள்‌ தமிழ்நாடு அரசிடம்‌ 5 இலட்சம்‌ ரூபாய்‌ நிதியுதவி கோரியிருந்தார்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌, செல்வி பவானி தேவி அவர்களின்‌ கோரிக்கையை கனிவுடன்‌ பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, இன்று (20.6.2021) சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ மின்பகிர்மானக்‌ கழகத்தின்‌ தலைமை அலுவலகத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, 5 இலட்சம்‌ ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம்‌ வழங்கினார்கள்‌.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சர்‌ திரு. வி. செந்தில்‌ பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு. தயாநிதி மாறன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ மேலாண்மை இயக்குநர்‌ திரு. ராஜேஷ்‌ லக்கானி, இ.ஆ.ப., எரிசக்தித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திரு. தர்மேந்திர பிரதாப்‌ யாதவ்‌, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9