Monday, June 28, 2021

D.O of Requesting to Increase the Allocation of Vaccines to Tamil Nadu

 Text of the D.O. Letter No.800/CMO/2021, Dated 28.6.2021 of Thiru M.K. Stalin, Hon’ble Chief Minister of Tamil Nadu addressed to the Hon’ble Union Minister of Health and Family Welfare, requesting to increase the allocation of vaccines to Tamil Nadu and also increase the sub-allocation of vaccines for Government Institutions to 90% :

    At the outset, I would like to thank you for accepting our request on the Union Government procuring Covid vaccines centrally and issuing them free of cost to all States for all eligible beneficiaries above 18 years of age. This decision and my government’s continuous efforts to eliminate vaccine hesitancy and transform the vaccination drive into a people’s movement, have ensured that Tamil Nadu’s daily performance of vaccination has tripled during the current month.


   The availability of vaccines has emerged as the principal constraint in the last few weeks, after the above pick up in vaccination. This is particularly significant for us since our allotment so far has been one of the lowest among the States in the country in terms of doses per thousand population. I had written to you requesting an allocation of 1 crore doses to correct the inadequate allotment in the past. This has not been done and the incremental increase in allocation for June- July is just in line with the increases made available to other States, who had got higher allotment in the past and therefore have already vaccinated more people. Hence, I reiterate that earlier request and also would like to draw your attention to another issue which requires your immediate intervention.

Considering the above issues, I request that the following steps may be immediately undertaken by the Union Government to ensure that the available vaccine resources are put to the best use possible in the shortest time:

      a) Evaluate the vaccine doses allotted to various States so far, in terms of doses allotted per thousand population and ensure that necessary compensatory allocations are made to States who have been allotted lower number of doses per capita.

       b) Revise the inter-se allocation between the government and private institutions to 90:10 as against the current allocation of 75:25.


The land owned by Arulmighu Anandavalli sametha Agastheeswarar Temple, Chromepet was Retrieved

செய்தி வெளியீடு எண்‌: 341

 நாள்‌: 28.06.2021

 The land owned by Arulmighu Anandavalli sametha Agastheeswarar Temple, Chromepet was retrieved in the presence of the Honble Minister for Hindu Religious and Charitable Endowments and the Honble Minister for Rural Industries.

       மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி, செங்கல்பட்டு மாவட்டம்‌, குரோம்பேட்டை அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர்‌ திருக்கோயிலுக்குச்‌ சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள்‌ மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்‌ திரு. பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு ஊரக தொழில்‌ துறை அமைச்சர்‌ திரு.த.மோ.அன்பரசன்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ அகற்றப்பட்டன.


    செங்கல்பட்டு மாவட்டம்‌, பல்லாவரம்‌ வட்டத்திற்கு உட்பட்ட குரோம்பேட்டை, நெமிலிச்சேரி அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர்‌ திருக்கோயிலுக்குச்‌ சொந்தமான நிலம்‌ புல எண்‌ 5/2 - 1.49 ஏக்கர்‌ மற்றும்‌ புல எண்‌. 63 - 0.58 ஏக்கர்‌ என மொத்தம்‌ ரூ.15 கோடி மதிப்புள்ள 2.02 ஏக்கர்‌ நிலத்தில்‌ பல வருடங்களாக 11 நபர்களால்‌ வணிக நோக்கத்தில்‌ ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுடிருந்தது. கடந்த 2017 ம்‌ ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன்‌ கீழ்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2018-ம்‌ ஆண்டு வெளியேற்று உத்தரவு பிறப்பிக்கபட்டது. அதன்‌ தொடர்ச்சியாக, மேற்படி நிலத்தில்‌ உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற சென்னை மாண்புமிகு உயர்நீதி மன்றம்‌, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌ மற்றும்‌ இணை ஆணையரின்‌ உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று (28.06.2021) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்‌ திரு.பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு ஊரக தொழில்‌ துறை அமைச்சர்‌ திரு.த.மோ.அன்பரசன்‌, பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.இ.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌ திரு. ஜெ. குமரகுருபரன்‌, இ.ஆ.ப. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ திரு.ஆ.ர.ராகுல்நாத்‌ இ.ஆ.ப., ஆகியோர்‌ முன்னிலையில்‌ ஆக்கிரமிப்புகள்‌ அகற்றப்பட்டன.


இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம்‌ மண்டல இணை ஆணையர்‌ திரு. ஜெயராமன்‌, செங்கல்பட்டு உதவி ஆணையர்‌ திருமதி கவேனிதா, திருக்கோயில்‌ செயல்‌ அலுவலர்‌ திரு.சக்தி மற்றும்‌ பணியாளர்கள்‌ ரூ.15 கோடி மதிப்புள்ள 2.02 ஏக்கர்‌ பரப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை திருக்கோயில்‌ வசம்‌ கொண்டுவந்தனர்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Rural Development Minister chaired a review meeting of District Rural Development Agencies through Video Conference.

செய்தி வெளியீடு எண்‌:332 

நாள்‌:26.06.2021

செய்தி வெளியீடு

ஊரகப்‌ பகுதிகளில்‌ குடிநீர்‌, தெருவிளக்குகள்‌, சுகாதாரம்‌ மற்றும்‌ அடிப்படை வசதிகளை சிறப்பாக செயல்படுத்த மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ ஆய்வின்போது அறிவுறுத்தல்‌.

Honble Minister for Rural Development chaired a review meeting of District Rural Development Agencies through Video Conference.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ (25.6.2021 அன்று தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களின்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும்‌ ஊராட்சிகள்‌ மேம்பாடு சார்ந்த பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து காணொலி வாயிலாக கூடுதல்‌ ஆட்சியர்கள்‌(வளர்ச்சி) / திட்ட இயக்குநர்கள்‌, உதவி இயக்குநர்கள்‌(ஊராட்சி) மற்றும்‌ அனைத்து அலுவலர்களிடமும்‌ சென்னை - சைதாப்பேட்டை பனகல்‌ மாளிகையில்‌ அமைந்துள்ள ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அலுவலகத்தில்‌ ஆய்வு செய்தார்‌.

ஊரகப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்களுக்குத்‌ தேவையான குடிநீர்‌, தெருவிளக்குகள்‌, சுகாதாரம்‌, துப்புரவு பணிகள்‌ போன்ற அடிப்படைப்‌ பணிகளில்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்தி, அப்பணிகளை 100 சதவீதம்‌ சிறப்புடன்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்று ஆய்வின்போது அலுவலர்களுக்கு மாண்புமிகு அமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுரைகள்‌ வழங்கினார்‌.

கடந்தாண்டுகளில்‌ எடுக்கப்பட்டு இன்னும்‌ முடிக்கப்படாமல்‌ நிலுவையில்‌ உள்ள தொகுப்பு வீடுகள்‌, சாலைப்‌ பணிகள்‌, குடிநீர்‌ இணைப்புப்‌ பணிகள்‌, கழிப்பறை கட்டும்‌ பணிகள்‌ உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்‌ அவர்கள்‌ இப்பணிகளை விரைவுபடுத்தி முடிக்கவேண்டும்‌ என அறிவுரைகள்‌ வழங்கினார்‌. குறிப்பாக, பிரதம மந்திரி வீடுகள்‌ கட்டும்‌ திட்டத்தில்‌ 2016-17ம்‌ ஆண்டு முதல்‌ 2019-20ம்‌ ஆண்டு வரை மொத்தம்‌ 2,15,752 வீடுகள்‌ இன்னும்‌ நிலுவையில்‌ உள்ளதை ஆய்வு செய்த அமைச்சர்‌ அதை விரைவாக முடிக்க வேண்டும்‌ என்று அறிவுரைகள்‌ வழங்கினார்‌.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்கீழ்‌ இன்றைய நிலவரப்படி 13 இலட்சம்‌ தொழிலாளர்கள்‌ பணியில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌. இது ஒரு குறிப்பிடத்‌ தகுந்த சாதனையாகும்‌. ஏனெனில்‌, கோவிட்‌-19 பெருந்தொற்று காரணமாக கடந்த மே மாதம்‌ இறுதியில்‌ 3.25 இலட்சம்‌ தொழிலாளர்களே இப்பணியில்‌ ஈடுபட்டிருந்தனர்‌. தற்போது தமிழக அரசின்‌ தீவிர முயற்சியின்‌ காரணமாக கொரோனா தொற்று பெருமளவில்‌ குறைந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ பணிசெய்யும்‌ தொழிலாளர்களின்‌ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைப்‌ பாராட்டிய அமைச்சர்‌ அவர்கள்‌, இது மேலும்‌ உயர வேண்டும்‌ என்று அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்கினார்கள்‌.

அதுபோலவே, ஜல்‌ ஜீவன்‌ மிஷன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2020-21ஆம்‌ ஆண்டில்‌ எடுக்கப்பட்ட குடிநீர்‌ பணிகள்‌ விரைவுபடுத்தப்பட்டு மக்களுக்கு குடிநீர்‌ வழங்கவும்‌ அறிவுரைகள்‌ வழங்கினார்‌. சாலைப்‌ பணிகளில்‌ பிரதம மந்திரி கிராம சாலைகள்‌ திட்டத்தில்‌ 2016-17ஆம்‌ ஆண்டிலிருந்து 2020-21 வரை எடுக்கப்பட்டு இன்னும்‌ நிலுவையில்‌ உள்ள சாலைப்‌ பணிகளைக்‌ குறிப்பிட்ட அமைச்சர்‌ அவர்கள்‌ அப்பணிகளை முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர செயல்திட்டம்‌ தீட்டவும்‌ அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்கினார்‌. அதுபோல நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி மற்றும்‌ தமிழ்நாடு ஊரகச்‌ சாலைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்கீழ்‌ நிலுவையிலுள்ள பணிகளையும்‌, தூய்மை பாரத இயக்கத்தின்கீழ்‌ நிலுவையிலுள்ள தனிநபர்‌ கழிப்பறைகள்‌ கட்டுதல்‌, சமுதாய சுகாதார வளாகங்கள்‌, நுண்உர உற்பத்தி மையங்கள்‌ ஆகிய பணிகளையும்‌ விரைந்து முடிக்க அறிவுரைகள்‌ வழங்கினார்‌.

மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைப்படி, பிற துறைகள்‌ ஒருங்கிணைப்பு மூலமாக ஊரகப்‌ பகுதிகளின்‌ முழுமையான வளர்ச்சிக்கு ஊரக வளர்ச்சித்‌ துறை அலுவர்கள்‌ வழி காணவேண்டும்‌ என அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌. ஊரக வளர்ச்சித்‌ துறையில்‌ உள்ள பணிகளுடன்‌ விவசாயம்‌, கால்நடை, தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, சமூகநலம்‌, ஆவின்‌ போன்ற பிற துறைப்‌ பணிகளையும்‌ ஒருங்கிணைத்து செய்யும்போது கிராமங்கள்‌ விரைவான வளர்ச்சியும்‌, தன்னிறைவும்‌ பெறும்‌ என அமைச்சர்‌ அவர்கள்‌ அனைத்து அலுவலர்களுக்கும்‌ அறிவுரைகள்‌ வழங்கினார்‌.

மாண்புமிகு அமைச்சர்‌ அவர்களின்‌ இக்காணொலி ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ (6 கோபால்‌,இஆப., ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை இயக்குநர்‌ திரு பிரவீன்‌ 1. நாயர்‌, இஆப., மற்றும்‌ அரசு உயரதிகாரிகள்‌ பங்கேற்றனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Statement on assessment of marks for 12th Standard students.

செய்தி வெளியீடு எண்‌:328

 நாள்‌: 26.06.2021

செய்தி வெளியீடு

Statement of the Honble Chief Minister on assessment of marks for 12th Standard students.

பன்னிரெண்டாம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்கும்‌ முறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ அறிவிப்பு.

கொரோனா பெருந்தொற்றின்‌ காரணமாக 2020- 2021 ஆம்‌ கல்வியாண்டில்‌ நடக்கவிருந்த பன்னிரெண்டாம்‌ வகுப்புப்‌ பொதுத்‌ தேர்வுகள்‌ ஏற்கெனவே இரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்கும்‌ முறையை முடிவு செய்வதற்காகப்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ தலைமையில்‌ உயர்‌ கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌, சென்னை பல்கலைக்‌ கழகத்‌ துணைவேந்தர்‌, பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ உள்ளிட்ட அலுவலர்கள்‌ அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது.


10, 11 ஆம்‌ வகுப்புப்‌ பொதுத்‌ தேர்வுகளில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12 ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வுகள்‌ நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌, 12 ஆம்‌ வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக்‌ கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில்‌ வழங்க வல்லுநர்‌ குழு பரிந்துரைத்துள்ளது :

MORE DETAILS

The President and Members of the Alliance for Media Freedom called on TN CM

 செய்தி வெளியீடு எண்‌:336

 நாள்‌: 27.06.2021

செய்தி வெளியீடு

 The President and Members of the Alliance for Media Freedom called on the Honble Chief Minister.

ஊடகங்கள்‌ மீது கடந்த ஆட்சியில்‌ தொடர்ந்த வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌ என்று அறிவித்ததற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களை ஊடகச்‌ சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பினர்‌ சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்‌.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களை முகாம்‌ அலுவலகத்தில்‌ இன்று (27.6.2021) ஊடகச்‌ சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பின்‌ தலைவர்‌ திரு.என்‌. ராம்‌, மூத்த பத்திரிகையாளர்‌ திரு.ஆர்‌.பகவான்‌ சிங்‌, நக்கீரன்‌ இதழின்‌ ஆசிரியர்‌ திரு. நக்கீரன்‌ கோபால்‌, பெண்‌ ஊடகவியலாளர்கள்‌ கூட்டமைப்பின்‌ (NWMI) சார்பில்‌ திருமதி லட்சுமி சுப்பிரமணியன்‌ மற்றும்‌ திருமதி இந்துஜா ரகுநாதன்‌, அமைப்பாளர்‌ திரு. பீர்‌ முகமது ஆகியோர்‌ சந்தித்து, 24.6.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ சட்டப்பேரவையில்‌ மாண்புமிகு ஆளுநர்‌ உரை மீதான விவாதத்திற்கு அளித்த பதிலுரையில்‌, “கடந்த ஆட்சியில்‌ கருத்துச்‌ சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள்‌ மீது அரசு தொடர்ந்த வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌” என்று அறிவித்து, ஜனநாயகத்தின்‌ அடிநாதமான பேச்சுச்‌ சுதந்திரத்தைப்‌ பாதுகாத்ததற்கு தங்களது மனமார்ந்த நன்றியினையும்‌ பாராட்டுதல்களையும்‌ தெரிவித்துக்‌ கொண்டார்கள்‌.

மேலும்‌, கல்வி, மருத்துவம்‌, சமூகப்‌ பாதுகாப்பில்‌ தமிழ்நாடு நாட்டிற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்றால்‌, ஊடகச்‌ சுதந்திரத்திற்கும்‌ அதில்‌ பெரும்‌ பங்கு இருக்கிறது. அதனைப்‌ பேணுகிற அரசியல்‌ மரபிலிருந்து வந்திருக்கிறீர்கள்‌ என்பதால்‌ நீங்கள்‌ இந்த நல்ல முடிவை மேற்கொண்டிருக்கிறீர்கள்‌ என்று தெரிவித்தார்கள்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌, ஊடகச்‌ சுதந்திரம்‌ பாதுகாக்கப்படும்‌ என்றும்‌, ஊடகத்தினரின்‌ நலன்‌ பேணப்படும்‌ என்றும்‌ ஊடகச்‌ சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினரிடம்‌ உறுதி அளித்தார்கள்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9