Thursday, August 12, 2021

M.G.R Film and Television Institute - Admission Notification for the year 2021-2022

 தமிழ்நாடு அரசு எம்‌. ஜி.ஆர்‌ இரைப்படம்‌ மற்றும்‌ தொலைக்காட்‌ப்‌ பயிற்ச நிறுவனம்‌ கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத்‌ தமிழக அரசின்‌ செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறையின்‌ கழ்‌ இயங்க வரும்‌ ஓரே கல்வி நிறுவனம்‌ ஆகும்‌. இந்நிறுவனம்‌ திரைப்படத்துறை மற்றும்‌ தொலைக்காட்‌9த்‌ துறையில்‌ மிகச்‌ சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும்‌, இயக்குநர்களையும்‌ உருவாக்‌ வரும்‌ தனித்துவம்‌ மிக்க நிறுவனமாகும்‌.

இந்நிறுவனம்‌ மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவிற்இணங்க, 2016-2017ஆம்‌ கல்வி ஆண்டு முதல்‌ தமிழ்நாடு டாக்டர்‌ ஜெ.ஜெயலலிதா இசை மற்றும்‌ கவின்‌ கலை பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்‌ பெற்று, கல்லூரியாகத்‌ தரம்‌ உயர்த்தப்பட்டு, இந்தியாவிலேயே முதன்‌ முறையாகத்‌ திரைப்படத்‌ தொழில்நுட்பங்களுக்கென இளங்கலை- காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும்‌ நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளைப்‌ பயிற்றுவித்து வருகிறது.


தற்போது, 2021-2022ஆம்‌ கல்வி ஆண்டில்‌ ழ்க்கண்ட பிரிவுகளில்‌ பட்டப்படிப்பிற்கான மாணவர்‌ சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுஇன்றன.

1. இளங்கலை- காட்சிக்கலை  -. Bachelor of Visual Arts (Cinematography) ( ஒளிப்பதவு) 

2. இளங்கலை- காட்சிக்கலை  -Bachelor of Visual Arts (Digital Intermediate)

3. இளங்கலை - காட்சிக்கலை Bachelor of Visual Arts (Audiography) (ஓலிப்பஇவு) 

4. இளங்கலை- காட்சிக்கலை Bachelor of Visual Art (Direction and Screenplay writing) (இயக்குதல்‌ மற்றும்‌ இரைக்கதை

5. இளங்கலை - காட்‌சக்கலை Bachelor of Visual Arts (Film Editing) (படத்தொகுப்பு)

6. இளங்கலை- காட்சிக்கலை Bachelor of Visual Arts (Animation and Visual Effects) (உயிர்ப்பூட்டல்‌ மற்றும்‌ காட்‌டப்பயன்‌ ) 

எனவே, கலை ஆர்வம்‌ உள்ள அனைத்து மாணவ/மாணவியரும்‌ மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில்‌ சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுஒறார்கள்‌.

இதற்கான விண்ணப்பங்களை 12.08.2021 முதல்‌ 06.09.2021 வரை தபால்‌ மூலமாகவோ அல்லது தமிழக அரசின்‌ www.tn.gov.in எனும்‌ இணையதள முகவரியிலிருந்து பஇவிறக்கம்‌ செய்தோ விண்ணப்பிக்கலாம்‌ என்றும்‌ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன்‌ முதல்வர்‌ (பெர, தமிழ்நாடு அரசு எம்‌.ஜி.ஆர்‌ இரைப்படம்‌ மற்றும்‌ தொலைக்காட்சிப்‌ பயிற்‌ நிறுவனம்‌, சி.ஐ.டி. வளாகம்‌, தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு 09.09.2021 அன்று மாலை 05.00 மணிக்குள்‌ வந்து சேரும்‌ வகையில்‌ அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌ என்றும்‌, 09.09.2021 அன்று மாலை 05.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும்‌ தெரிவித்துக்கொள்ளப்படுஇறது.

மேலும்‌ மாணவர்கள்‌ விண்ணப்பங்களைப்‌ பெற நேரடியாக வரவேண்டாம்‌ எனவும்‌ தெரிவித்துக்கொள்ளப்படுஇறது.

Election of members to the Tamil Nadu Waqf Board

ELECTION FOR THE MEMBERS OF THE TAMIL NADU WAQF BOARD 

Following Election programme for election of members to the Tamil Nadu Waqf Board from the electoral college consisting of Muslim Members of State Legislature has been notified in the Tamil Nadu Government Gazette Extraordinary dated: 11.08.2021.


If poll is necessary, polling will be held on 26.08.2021 (Thursday) between 10.00 A.M to 4.00 P.M. at the Office of the Tamil Nadu Wakf Board, No.1, Jaffer Syrang Street, Vallal Seethakkathi Nagar, Chennai – 600 001 and results will be declared on 27.08.2021 (Friday).


Tuesday, August 10, 2021

CM handed over Educational Assistance to the School Students of Various Schools

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌, உங்கள்‌ தொகுதியில்‌ முதலமைச்சர்‌ துறையின்‌ கீழ்‌ 135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும்‌, கொளத்தூர்‌ தொகுதிக்குட்பட்ட 1,330 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும்‌ கல்வி உபகரணங்களையும்‌ வழங்கினார்‌.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (8.8.2021) கொளத்தூர்‌, குருகுலம்‌ பள்ளியில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, “உங்கள்‌ தொகுதியில்‌ முதலமைச்சர்‌” துறையின்‌ கீழ்‌ மனுக்கள்‌ பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட 135 பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி, முதியோர்‌, கைவிடப்பட்டோர்‌, விதவைகள்‌ உதவித்‌ தொகைகளுக்கான ஆணைகள்‌, மூன்று சக்கர சைக்கிள்கள்‌, சிறப்பு சக்கர நாற்காலிகள்‌, தையல்‌ இயந்திரங்கள்‌, சலவைப்‌ பெட்டிகள்‌, வீடு புனரமைப்புத்‌ திட்ட ஆணைகள்‌, புதிய வீட்டிற்கான ஆணைகள்‌ ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.



முத்தமிழறிஞர்‌" கலைஞர்‌ அவர்களின்‌ நினைவு நாளையொட்டி, கொளத்தூர்‌ சட்டமன்றத்‌ தொகுதிக்குட்பட்ட பந்தர்‌ கார்டன்‌, சென்னை மாநகராட்சி மேல்நிலைப்‌ பள்ளியைச்‌ சார்ந்த 305 மாணவர்களுக்கும்‌ மற்றும்‌ லூர்து பெண்கள்‌ மேல்நிலைப்‌ பள்ளியைச்‌ சார்ந்த 309 மாணவிகளுக்கும்‌ கல்வி உதவித்‌ தொகை மற்றும்‌ கல்வி உபகரணங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கினார்‌. மேலும்‌, கொளத்தூர்‌, எவர்வின்‌மேல்நிலைப்‌ பள்ளியில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, சென்னை மாநகராட்சி மேல்நிலைப்‌ பள்ளியைச்‌ சார்ந்த 148 மாணவர்களுக்கும்‌ மற்றும்‌ டான்‌ பாஸ்கோ ஆண்கள்‌ மேல்நிலைப்‌ பள்ளியைச்‌ சார்ந்த 279 மாணவர்களுக்கும்‌ கல்வி உதவித்‌ தொகை மற்றும்‌ கல்வி உபகரணங்களையும்‌ வழங்கினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, கொளத்தூர்‌, ஜி.கே.எம்‌. காலனி விளையாட்டுத்திடலில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, மார்க்கெட்‌ தெருவிலுள்ள சென்னை மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்‌ பள்ளியைச்‌ சார்ந்த 210 மாணவிகளுக்கும்‌ மற்றும்‌ ஜி.கே.எம்‌. காலனி 12வது தெருவிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளியைச்‌ சார்ந்த 79 மாணவர்களுக்கும்‌ கல்வி உதவித்‌ தொகை மற்றும்‌ கல்வி உபகரணங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.

இன்று (8.8.2021) கொளத்தூர்‌ சட்டமன்றத்‌ தொகுதிக்குட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில்‌ மொத்தம்‌ 1,330 மாணவ, மாணவியர்களுக்கு கல்வித்‌ உதவித்‌ தொகையாக தலா $5,000/- ரூபாயும்‌ மற்றும்‌ கல்வி உபகரணங்கள்‌ என மொத்தம்‌ ரூபாய்‌ 80 இலட்சம்‌ மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையத்‌ துறை அமைச்சர்‌ திரு. பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்‌ டாக்டர்‌. கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. தாயகம்‌ கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்‌ திரு. ககன்தீப்‌ சிங்‌ பேடி, இ.ஆ.ப. சென்னை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌. ஜெ.விஜய ராணி, இ.ஆ.ப. ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Statement from Managing Director of Aavin

 ஆவின்‌ நிறுவனம்‌ நுகர்வோர்‌ சேவையில்‌ எந்தவித குறைபாடுகளும்‌ இன்றி அனைவரும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சேவையாற்றிவருகின்றது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்களால்‌ 16.05.2021 முதல்‌ ஆவின்‌ பால்‌ விலை லிட்டர்‌ ஒன்றுக்கு ரூ. 3/- குறைக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களும்‌ பயனடையும்‌ வகையில்‌ விநியோகம்‌ செய்யப்பட்டு வருகின்றது.


மாதாந்திர பால்‌ அட்டைதாரர்களுக்கு மானிய விலையில்‌ 1985 முதல்‌ பால்‌ விநியோகம்‌ செய்யப்பட்டு வருகிறது. ஆவின்‌ நுகர்வோர்கள்‌ இந்த பால்‌ அட்டை திட்டத்தின்‌ கீழ்‌ 4.5 லட்சம்‌ உறுப்பினர்கள்‌ பயனடைந்து வருகின்றனர்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌ நுகர்வோர்கள்‌ மாத தொகையை முன்கூட்டியே செலுத்துவதால்‌ ஆவின்‌ நிர்வாகத்திற்கு முன்வைப்புத்‌ தொகையாக பெறப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ நுகர்வோர்களுக்கு ரூ. 2 முதல்‌ ரூ. 3 வரை லிட்டருக்கு குறைந்த விலையில்‌ வழங்கப்பட்டு வருகிறது.

மாதாந்திர பால்‌ அட்டை பால்‌ வாங்கும்‌ நுகர்வோர்கள்‌, தங்களுடைய பணியிட மாற்றம்‌ மற்றும்‌ இதர காரணங்களால்‌ வசிக்கும்‌ இடத்தை விட்டூ வேறு &டத்திற்கு சென்று விடுகின்றனர்‌. ஆனால்‌ அவர்களுடைய பெயரிலேயே சில பால்‌ விநியோகம்‌ செய்யும்‌ நபர்கள்‌ தொடர்ந்து மாதாந்திர பால்‌ அட்டைகளை புதுப்பித்து வருகின்றனர்‌. அட்டைதாரர்களுக்கு மானிய விலையில்‌ வழங்கப்படும்‌ பாலை ரொக்க விற்பனைக்கு அதாவது ரூ. 2 முதல்‌ ரூ. 3 வரை கூடுதலாக விற்பனைசெய்யப்பட்டு வருகின்றது.

கடந்த மாதம்‌ முதல்‌ மேற்கண்ட நுகர்வோர்கள்‌ விவரங்கள்‌ சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில்‌ தற்போது 80,000 பால்‌ அட்டைதாரர்கள்‌ குறிப்பிட்ட முகவரியில்‌ வசிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்‌ சுமார்‌ 40,000 லிட்டர்‌ பால்‌ விற்பனையில்‌ மாதம்‌ 36 லட்சம்‌ நஷ்டம்‌ தவிர்க்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில்‌ உள்ள படிவத்தில்‌ கல்வித்தகுதி, தொழில்‌ விவரம்‌, மாத வருமானம்‌, ஆதார்‌ விவரம்‌ எதுவும்‌ பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம்‌ இல்லை.

தற்போதுள்ள புதிய படிவம்‌ தங்களின்‌ பார்வைக்கு இத்துடன்‌ இணைக்கப்படுகிறது. மேலும்‌ நுகர்வோர்களின்‌ வசதிக்காக பால்‌ அட்டைதாரர்களின்‌ விவரங்ககளை சமர்ப்பிக்க மேலும்‌ 3 மாத கால அவகாசம்‌ வழங்கப்பட்டுள்ளது எனவே நுகர்வோர்கள்‌ புதிய விண்ணப்பத்தில்‌ தங்களின்‌ அடிப்படை விவரங்களை மட்டும்‌ பூர்த்தி செய்து பால்‌ அட்டையை புதுப்பிக்கலாம்‌.

Statement from Tamil Nadu Civil Supplies Corporation

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைப்படி, கடந்த 5.08.2021 அன்று வேலூர்‌ மாவட்டத்தில்‌ மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்‌ மற்றும்‌ மாண்புமிகு உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ உணவுப்‌ பொருள்‌ விநியோகம்‌ தொடர்பான ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

 இந்த ஆய்வுக்‌ கூட்டத்தின்‌ போது விவசாயிகளிடமிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ நெல்‌ மகசூலைக்‌ காட்டிலும்‌ மிக அதிகமாக நெல்‌ கொள்முதல்‌ செய்யப்படுவதாகவும்‌, வியாபாரிகளிடமிருந்து நெல்‌ கொள்முதல்‌ செய்யப்படுவதாகவும்‌ சில சமயங்களில்‌ நெல்‌ மூட்டைகள்‌ லாரிகளில்‌ கொண்டுவரப்பட்டு நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களுக்கு வராமலேயே, நேரடியாகச்‌ சேமிப்புக்‌ கிடங்குகளுக்கு அனுப்பப்படுவதாகவும்‌ புகார்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்புகாரின்‌ மீது மாண்புமிகு உணவு மற்றும்‌ உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அவர்களி உத்‌ "டி, இணை மேலாண்‌ இயக்குநர்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ அவர்கள்‌ தலைமையில்‌ ராணிப்பேட்டை மாவட்டம்‌, ஆற்காடு வட்டத்தில்‌ உள்ள சிறுகரம்பூர்‌, தத்தாவாடி மற்றும்‌ கூரம்பாடி ஆகிய நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ நெல்‌ கொள்முதல்‌ செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இணை மேலாண்‌ இயக்குநரின்‌ முதற்கட்ட விசாரணையில்‌ சிறுகரம்பூர்‌, தத்தாவாடி மற்றும்‌ கூரம்பாடி ஆகிய நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ நில உடைமை ஆவணங்களைச்‌ சரியாக ஆய்வு செய்யாமல்‌ ஒருவருக்குச்‌ சொந்தமான நிலத்தில்‌ அதிகபட்சமாகக்‌ கிடைக்கக்‌ கூடிய நெல்‌ மகசூலைக்‌ காட்டிலும்‌ பல மடங்கு கூடுதலான அளவு நெல்‌ ஒரு சில நபர்களிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றாமல்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே இத்தகைய தவறுகளுக்குக்‌ காரணமான வேலூர்‌ மண்டலத்தைச்‌ சார்ந்த தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்கழகப்‌ பணியாளர்களான மண்டல மேலாளர்‌, துணை மேலாளர்‌ (கணக்கு), 3 கண்காணிப்பாளர்கள்‌ மற்றும்‌ 3 பட்டியல்‌ எழுத்தர்கள்‌ என மொத்தம்‌ 8 நபர்கள்‌ தற்காலிகப்‌ பணிநீக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌. இவ்விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்‌ நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ விவசாயிகள்‌ தாங்கள்‌ விளைவித்து அறுவடை செய்த நெல்லை எளிதில்‌ விற்பனை செய்து பயனடையும்‌ வகையில்‌ பல்வேறு நடவடிக்கைகளைத்‌ தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.